Obadiah 1:20 in Tamil
சர்பாத்மட்டும் கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் புத்திரராகிய இந்தச் சேனையும், சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தாரும் தென்திசைப் பட்டணங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
Sarpaathmattum kaanaaniyarukkullae siraippattuppona isravael puththiraraagiya inthas saenaiyum, saeppaaraaththil siraippattuppona erusalaem nagaraththaarum thenthisaip pattanangalais suthanthariththukkolvaarkal.
Obadiah 1:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சாரிபாத்வரை கானானியர்களுக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் மக்களாகிய இந்தப் படையும், சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தார்களும் தெற்குதிசைப் பட்டணங்களைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்.
- Open Tamil Contemporary Version
- சாரெபாத்வரை கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரயேல் புத்திரராகிய இந்தச் சேனையும், சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தாரும் நெகேவின் பட்டணங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேலிலுள்ள ஜனங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டவர்கள். ஆனால் அந்த ஜனங்கள் சாரிபாத் வரையுள்ள கானான் நாட்டை எடுத்துக்கொள்வார்கள். யூதா ஜனங்கள் எருசலேமை விட்டு வெளியேறி சேப்பாராதத்தில் வாழும்படி வற்புறுத்தப்படுவார்கள். ஆனால் அவர்கள் நெகேவ் நகரங்களை எடுத்துக்கொள்வார்கள்.
Obadiah 1:20 in English
- King James Version (KJV)
- And the captivity of this host of the children of Israel [shall possess] that of the Canaanites, [even] unto Zarephath; and the captivity of Jerusalem, which [is] in Sepharad, shall possess the cities of the south.
- World English Bible (WEB)
- The captives of this army of the children of Israel, who are among the Canaanites, will possess even to Zarephath; and the captives of Jerusalem, who are in Sepharad, will possess the cities of the Negev.
- American Standard Version (ASV)
- And the captives of this host of the children of Israel, that are [among] the Canaanites, [shall possess] even unto Zarephath; and the captives of Jerusalem, that are in Sepharad, shall possess the cities of the South.
- Bible in Basic English (BBE)
- And those of the children of Israel who were the first to be taken away as prisoners, will have their heritage among the Canaanites as far as Zarephath; and those who were taken away from Jerusalem, who are in Sepharad, will have the towns of the South.
- Darby Translation (DBY)
- and the captives of this host of the children of Israel [shall possess] what belonged to the Canaanites, unto Zarephath; and the captives of Jerusalem, who [were] in Sepharad, shall possess the cities of the south.
- Webster's Bible (WBS)
- And the captivity of this host of the children of Israel [shall possess] that of the Canaanites, [even] to Zarephath; and the captivity of Jerusalem, which [is] in Sepharad, shall possess the cities of the south.
- Young's Literal Translation (YLT)
- And the removed of this force of the sons of Israel, That [is with] the Canaanites unto Zarephat, And the removed of Jerusalem that [is] with the Sepharad, Possess the cities of the south.
Read in context
- 18யாக்கோபு வம்சத்தார் அக்கினியும், யோசேப்பு வம்சத்தார் அக்கினிஜுவாலையுமாயிருப்பார்கள்; ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாயிருப்பார்கள்; அவர்கள் இவர்களைக்கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள்; கர்த்தர் இதைச் சொன்னார்.
- 19தென்தேசத்தார் ஏசாவின் மலையையும், சமனான தேசத்தார் பெலிஸ்தரின் தேசத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பென்யமீன் மனுஷர் கீலேயாத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
- 20சர்பாத்மட்டும் கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் புத்திரராகிய இந்தச் சேனையும், சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தாரும் தென்திசைப் பட்டணங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
- 21ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன் பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்.
Cross references
- 1 Kings 17:9–10 1 இராஜாக்கள் 17:9–10நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்.
- Luke 4:26 லூக்கா 4:26ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா ஊரிலிருந்த ஒருவிதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை.
- Jeremiah 33:13 எரேமியா 33:13மலைத்தேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களைத் தொகையிடுகிறவனுடையகைக்குள்ளாகக் கடந்துவரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Jeremiah 32:44 எரேமியா 32:44பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடானபட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
- Hosea 1:10–11 ஓசியா 1:10–11என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங்கூடாதகடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும். அப்பொழுது யூதா புத்திரரும் இஸ்ரவேல் புத்திரரும் ஏகமாய்க் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு வருவார்கள்; யெஸ்ரயேலின் நாள் பெரிதாயிருக்கும்.
- Jeremiah 33:26 எரேமியா 33:26அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும், என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின் சந்ததியை ஆளத்தக்கவர்களை அதிலிருந்து எடுக்காதபடிக்கு வெறுத்துப்போடுவேன்; அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
- Ezekiel 34:12–13 எசேக்கியேல் 34:12–13ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத்தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணி, அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின்மேலும் ஆறுகள் அண்டையிலும்தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன்.
- Jeremiah 3:18 எரேமியா 3:18அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்.
- Amos 9:14–15 ஆமோஸ் 9:14–15என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள். அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
- Jeremiah 13:19 எரேமியா 13:19தெற்கிலுள்ள பட்டணங்கள் அடைக்கப்பட்டன; அவைகளைத் திறப்பார் இல்லை; யூதா அனைத்தும் குடிவிலக்கப்பட்டுப்போம்; அது சமூலமாய்ச் சிறைப்பட்டுப்போம்.
- Zechariah 10:6–10 சகரியா 10:6–10நான் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி, யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து, அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்; அவர்கள் என்னால் ஒருக்காலும் தள்ளிவிடப்படாதவர்களைப்போல் இருப்பார்கள்; நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர், நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன். எப்பிராயீமர் பராக்கிரமரைப்போல இருப்பார்கள்; மதுபானத்தால் களிப்பதுபோல, அவர்களுடைய இருதயம் களிக்கும்; அவர்களுடைய பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழுவார்கள்; அவர்கள் இருதயம் கர்த்தருக்குள் களிகூரும். நான் அவர்களைப் பார்த்துப் பயில்போட்டு அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன்; அவர்களை மீட்டுக்கொண்டேன்; அவர்கள் பெருகியிருந்ததுபோலவேபெருகிப்போவார்கள். நான் அவர்களை ஜனங்களுக்குள்ளே இறைத்தபின்பு, அவர்கள் தூரதேசங்களிலே என்னை நினைத்து தங்கள் பிள்ளைகளோடுங்கூடப் பிழைத்துத் திரும்புவார்கள். நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து திரும்பிவரப்பண்ணி, அவர்களை அசீரியாவிலிருந்து கூட்டிக்கொண்டு, அவர்களைக் கீலேயாத்தேசத்துக்கும் லீபனோனுக்கும் வரப்பண்ணுவேன்; அவர்களுக்கு இடம் போதாமற்போகும்.
Original words (Hebrew)
- captivity · H1546גָּלוּת gâlûwth
- host · H2426חֵיל chêyl
- children · H1121בֵּן bên
- Israel · H3478יִשְׂרָאֵל Yisrâʼêl
- Canaanites · H3669כְּנַעַנִי Kᵉnaʻanîy
- Zarephath · H6886צָרְפַת Tsârᵉphath
- captivity · H1546גָּלוּת gâlûwth
- Jerusalem · H3389יְרוּשָׁלַ͏ִם Yᵉrûwshâlaim
- Sepharad · H5614סְפָרָד Çᵉphârâd
- possess · H3423יָרַשׁ yârash
- cities · H5892עִיר ʻîyr
- south · H5045נֶגֶב negeb
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.