Revelation 11:18 in Tamil
ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும்பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
Jaathigal kobiththaarkal, appozhuthu ummudaiya kobam moondathu; mariththor niyaayaththeerppadaigiratharkum, theerkkatharisigalaagiya ummudaiya oozhiyakkaararukkum parisuththavaangalukkum umathu naamaththinmael payabakthiyaayiruntha siriyor periyorukkumbalanalikkiratharkum, poomiyaik keduththavarkalaik kedukkiratharkum, kaalam vanthathu endru solli, thaevanaith thozhuthugondaarkal.
Revelation 11:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தேசத்தின் மக்கள் கோபித்துக்கொண்டார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் வந்தது; மரித்தவர்கள் நியாயத்தீர்ப்பு அடைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரர்களுக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாக இருந்த சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு பலன் கொடுப்பதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும் நேரம்வந்தது” என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஜனங்கள் கோபங்கொண்டார்கள், உம்முடைய கோபமும் வந்துவிட்டது. இறந்தவர்களை நியாயந்தீர்க்கும் வேளை வந்துவிட்டது, உம்முடைய ஊழியக்காரர்களாகிய இறைவாக்கினருக்கும், உம்முடைய பரிசுத்தவான்களுக்கும், உம்முடைய பெயரில் பயபக்தியாயிருக்கிற சிறியோர் பெரியோர் யாவருக்கும், வெகுமதி கொடுக்கும் வேளையும் வந்துவிட்டது. பூமியை அழிக்கிறவர்களை, அழிக்கும் வேளையும் வந்துவிட்டது.”
- Tamil Easy Reading Version
- உலகில் உள்ள மக்கள் எல்லாம் கோபமாக இருந்தனர். ஆனால், இது உம் கோபத்துக்குரிய காலம். இதுவே இறந்துபோனவர்கள் நியாயம் தீர்க்கப்படும் காலம். உங்கள் ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகளும் உங்கள் பரிசுத்தவான்களும் பலன்பெறும் காலம். சிறியோராயினும் பெரியோராயினும் சரி, உம்மீது மதிப்புடைய மக்கள் சிறப்பு பெறுகிற காலம். உலகை அழிக்கிறவர்கள் அழிந்துபோகிற காலமும் இதுவே” என்று சொன்னார்கள்.
Revelation 11:18 in English
- King James Version (KJV)
- And the nations were angry, and thy wrath is come, and the time of the dead, that they should be judged, and that thou shouldest give reward unto thy servants the prophets, and to the saints, and them that fear thy name, small and great; and shouldest destroy them which destroy the earth.
- World English Bible (WEB)
- The nations were angry, and your wrath came, as did the time for the dead to be judged, and to give your bondservants the prophets, their reward, as well as to the saints and those who fear your name, to the small and the great, and to destroy those who destroy the earth.”
- American Standard Version (ASV)
- And the nations were wroth, and thy wrath came, and the time of the dead to be judged, and [the time] to give their reward to thy servants the prophets, and to the saints, and to them that fear thy name, the small and the great; and to destroy them that destroy the earth.
- Bible in Basic English (BBE)
- And the nations were angry, and your wrath has come, and the time for the dead to be judged, and the time of reward for your servants, the prophets, and for the saints, and for those in whom is the fear of your name, small and great, and the time of destruction for those who made the earth unclean.
- Darby Translation (DBY)
- And the nations have been full of wrath, and thy wrath is come, and the time of the dead to be judged, and to give the recompense to thy servants the prophets, and to the saints, and to those who fear thy name, small and great; and to destroy those that destroy the earth.
- Webster's Bible (WBS)
- And the nations were angry, and thy wrath is come, and the time of the dead, that they should be judged, and that thou shouldest give reward to thy servants the prophets, and to the saints, and them that fear thy name, small and great; and shouldest destroy them who destroy the earth.
- Young's Literal Translation (YLT)
- and the nations were angry, and Thine anger did come, and the time of the dead, to be judged, and to give the reward to Thy servants, to the prophets, and to the saints, and to those fearing Thy name, to the small and to the great, and to destroy those who are destroying the land.'
Read in context
- 16அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து:
- 17இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.
- 18ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும்பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
- 19அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின. அதிகாரம்
Cross references
- Revelation 19:5 வெளிப்படுத்தின விசேஷம் 19:5மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.
- Revelation 20:12 வெளிப்படுத்தின விசேஷம் 20:12மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
- Revelation 13:10 வெளிப்படுத்தின விசேஷம் 13:10சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்.
- Revelation 6:10–11 வெளிப்படுத்தின விசேஷம் 6:10–11அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின்தொகை நிறைவாகுமளவும் இன்னுங் கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.
- Revelation 22:12 வெளிப்படுத்தின விசேஷம் 22:12இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
- Revelation 20:4–5 வெளிப்படுத்தின விசேஷம் 20:4–5அன்றியும், நான் சிங்காசனங்களைக்கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவதுவணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக்கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
- Micah 7:15–17 மீகா 7:15–17நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். புறஜாதிகள் கண்டு தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின் மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாய்ப் போகும். பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள்.
- Psalm 115:13–14 சங்கீதம் 115:13–14கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார். கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.
- Psalm 103:11 சங்கீதம் 103:11பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
- Hebrews 11:25–26 எபிரெயர் 11:25–26அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான்.
- Revelation 15:7 வெளிப்படுத்தின விசேஷம் 15:7அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங் கொடுத்தது.
- Revelation 14:10 வெளிப்படுத்தின விசேஷம் 14:10அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- nations · G1484ἔθνος éthnos
- angry · G3710ὀργίζω orgízō
- and · G2532καί kaí
- thy · G4675σοῦ soû
- wrath · G3709ὀργή orgḗ
- come · G2064ἔρχομαι érchomai
- and · G2532καί kaí
- time · G2540καιρός kairós
- dead · G3498νεκρός nekrós
- judged · G2919κρίνω krínō
- and · G2532καί kaí
- give · G1325δίδωμι dídōmi
- reward · G3408μισθός misthós
- thy · G4675σοῦ soû
- servants · G1401δοῦλος doûlos
- prophets · G4396προφήτης prophḗtēs
- and · G2532καί kaí
- saints · G40ἅγιος hágios
- and · G2532καί kaí
- them · G3588ὁ ho
- fear · G5399φοβέω phobéō
- thy · G4675σοῦ soû
- name · G3686ὄνομα ónoma
- small · G3398μικρός mikrós
- and · G2532καί kaí
- great · G3173μέγας mégas
- and · G2532καί kaí
- destroy · G1311διαφθείρω diaphtheírō
- them · G3588ὁ ho
- destroy · G1311διαφθείρω diaphtheírō
- earth · G1093γῆ gē
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.