Romans 11:4 in Tamil
அவனுக்கு உண்டான தேவஉத்தரவு என்ன? பாகாலுக்குமுன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.
Avanukku undaana thaevauththaravu enna? paagaalukkumunpaaga muzhangaarpadiyidaatha aezhaayirambaerai enakkaaga meethiyaaga vaiththaen enpathae.
Romans 11:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுக்கு உண்டான தேவனுடைய பதில் என்ன? பாகாலுக்கு முன்பாக முழங்கால்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.
- Open Tamil Contemporary Version
- அதற்கு இறைவன், அவனுக்குக் கூறிய பதில் என்ன? “இல்லை, நீ மட்டுமல்ல; பாகாலுக்கு முன்பாக முழங்காற்படியிடாத, ஏழாயிரம் பேர்களை அவர்களுக்குள் நான் எனக்கென்று வைத்திருக்கிறேன்” என்றார்.
- Tamil Easy Reading Version
- இதற்கு தேவன் என்ன பதில் சொன்னார் தெரியுமா? “பாகால் என்னும் தேவனுக்கு முன்பாக முழங்கால்படியிட்டு வணங்காத 7,000 பேரை நான் எனக்காக மீதியாய் வைத்திருக்கிறேன்” என்றார்.
Romans 11:4 in English
- King James Version (KJV)
- But what saith the answer of God unto him? I have reserved to myself seven thousand men, who have not bowed the knee to [the image of] Baal.
- World English Bible (WEB)
- But how does God answer him? “I have reserved for myself seven thousand men who have not bowed the knee to Baal.”
- American Standard Version (ASV)
- But what saith the answer of God unto him? I have left for myself seven thousand men, who have not bowed the knee to Baal.
- Bible in Basic English (BBE)
- But what answer does God make to him? I have still seven thousand men whose knees have not been bent to Baal.
- Darby Translation (DBY)
- But what says the divine answer to him? I have left to myself seven thousand men, who have not bowed knee to Baal.
- Webster's Bible (WBS)
- But what saith the answer of God to him? I have reserved to myself seven thousand men, who have not bowed the knee to Baal.
- Young's Literal Translation (YLT)
- but what saith the divine answer to him? 'I left to Myself seven thousand men, who did not bow a knee to Baal.'
Read in context
- 2தேவன் தாம் முன்னறிந்துகொண்டதம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி:
- 3கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத்தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது,
- 4அவனுக்கு உண்டான தேவஉத்தரவு என்ன? பாகாலுக்குமுன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே.
- 5அப்படிப்போல இக்காலத்திலேயும்கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது.
- 6அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானதுகிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே.
Cross references
- 1 Kings 19:18 1 இராஜாக்கள் 19:18ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.
- Numbers 25:3 எண்ணாகமம் 25:3இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது.
- 2 Kings 10:19–20 2 இராஜாக்கள் 10:19–20இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக்காரரையும், அவனுடைய சகல ஆசாரியரையும் என்னிடத்தில் அழைப்பியுங்கள்; ஒருவனும் குறையலாகாது; நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான்; பாகாலின் பணிவிடைக்காரரை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாய்ச் செய்தான். பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பைக் கூறுங்கள் என்று யெகூ சொன்னான்; அப்படியே கூறினார்கள்.
- Zephaniah 1:4 செப்பனியா 1:4நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும்,
- Judges 2:13 நியாயாதிபதிகள் 2:13அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள்.
- Hosea 13:1 ஓசியா 13:1எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகால்விஷயத்தில் குற்றஞ்செய்து மடிந்துபோனான்.
- Jeremiah 19:5 எரேமியா 19:5தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிக்கும்படிபாகாலின் மேடைகளைக் கட்டினபடியினாலும் இப்படி வரப்பண்ணுவேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை, சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை.
- 1 Kings 16:31 1 இராஜாக்கள் 16:31நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு,
- Hosea 2:8 ஓசியா 2:8தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள்.
- Deuteronomy 4:3 உபாகமம் 4:3பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றினமனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்போட்டார்.
Original words (Greek)
- But · G235ἀλλά allá
- what · G5101τίς tís
- saith · G3004λέγω légō
- God · G5538χρηματισμός chrēmatismós
- him · G846αὐτός autós
- reserved · G2641καταλείπω kataleípō
- myself · G1683ἐμαυτοῦ emautoû
- thousand · G2035ἑπτακισχίλιοι heptakischílioi
- men · G435ἀνήρ anḗr
- who · G3748ὅστις hóstis
- have · G2578κάμπτω kámptō
- not · G3756οὐ ou
- bowed · G2578κάμπτω kámptō
- knee · G1119γόνυ góny
- to · G896Βάαλ Báal
- Baal · G896Βάαλ Báal
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.