Zechariah 2:7 in Tamil
பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்.
Paabilon kumaaraththiyinidaththil kudiyirukkira seeyonae, unnai viduviththukkol.
Zechariah 2:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பாபிலோன் மகளிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்.
- Open Tamil Contemporary Version
- “இப்பொழுது வா! பாபிலோன் மகளிடத்தில் குடியிருக்கிற சீயோனே, தப்பி வா”
- Tamil Easy Reading Version
- சீயோனிலிருந்து உனது ஜனங்கள் பாபிலோனில் கைதிகளாக இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது தப்பி, அந்த நகரத்திலிருந்து வெளியே ஓடுங்கள்!”
Zechariah 2:7 in English
- King James Version (KJV)
- Deliver thyself, O Zion, that dwellest [with] the daughter of Babylon.
- World English Bible (WEB)
- ‘Come, Zion! Escape, you who dwell with the daughter of Babylon.’
- American Standard Version (ASV)
- Ho Zion, escape, thou that dwellest with the daughter of Babylon.
- Bible in Basic English (BBE)
- Ho! Zion, go in flight from danger, you who are living with the daughter of Babylon.
- Darby Translation (DBY)
- Ho! escape, Zion, that dwellest with the daughter of Babylon.
- Webster's Bible (WBS)
- Deliver thyself, O Zion, that dwellest [with] the daughter of Babylon.
- Young's Literal Translation (YLT)
- Ho, Zion, be delivered who art dwelling [with] the daughter of Babylon.
Read in context
- 5நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 6ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறப்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 7பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்.
- 8பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.
- 9இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள்.
Cross references
- Isaiah 48:20 ஏசாயா 48:20பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; கர்த்தர் தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள், பூமியின் கடையாந்தரமட்டும் வெளிப்படுத்துங்கள் என்கிறார்.
- Isaiah 52:11 ஏசாயா 52:11புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.
- Acts 2:40 அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:40இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.
- Revelation 18:4 வெளிப்படுத்தின விசேஷம் 18:4பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
- Genesis 19:17 ஆதியாகமம் 19:17அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.
- Jeremiah 51:6 எரேமியா 51:6நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்பிவியுங்கள்; இது கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார்.
- Isaiah 52:2 ஏசாயா 52:2தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்துவிடு.
- Numbers 16:34 எண்ணாகமம் 16:34அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள்.
- Micah 4:10 மீகா 4:10சீயோன் குமாரத்தியே, பிரசவஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டுவேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீக்கலாக்கி மீட்பார்.
- Jeremiah 50:8 எரேமியா 50:8பாபிலோனின் நடுவிலிருந்தோடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன்நடக்கும்கடாக்களைப்போல் இருங்கள்.
- Jeremiah 51:45 எரேமியா 51:45என் ஜனங்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்துக்குத்தப்பும்படி அவனவன் தன்தன் ஆத்துமாவை இரட்சித்துக்கொள்ளக்கடவன்.
- Numbers 16:26 எண்ணாகமம் 16:26அவன் சபையாரை நோக்கி: இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.