Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Alaikum Satham Ketkalaiyo Lyricsஅழைக்கும் சத்தம் கேட்கலையோ

Artist to be confirmedPraiseHealingCross

Alaikum Satham Ketkalaiyo Lyrics in Tamil & English

Chorus

அழைக்கும் சத்தம் கேட்கலையோ

அழைக்கும் இயேசுவை பார்க்கலையோ

Azhaikkum saththam kaedkalaiyo

Azhaikkum yesuvai paarkkalaiyo

Bridge

மழைக்கும் ஆழிக்கும் மேலானவர்

தழைக்கும் விருட்சத்தின் கருவானவர் – அவர

சரணங்கள்

Mazhaikkum aazhikkum maelaanavar

Thazhaikkum virutchaththin karuvaanavar – avara

Saranangal

Verse 1

காணாத ஆட்டை தேடினவர்

கானகத்தில் குளிர் நீரானவர்

மலைக்கும் நடுவில் நீர் உண்டு பண்ணி (×2)

மலைக்கும் விதமாய் இரட்சித்தவர் (×2)

Kaanaatha aattai thaedinavar

Kaanagaththil kulir neeraanavar

Malaikkum naduvil neer undu panni (×2)

Malaikkum vithamaay ratchiththavar (×2)

Verse 2

குஷ்டரோகியைக் குணமாக்கினவர்

கஷ்ட நோய்களை எல்லாம் நீக்கினவர்

துஷ்டனாய் நடந்த சவுல் என்ற நபரை (×2)

இஷ்டமாய் பவுலாய் மாற்றியவர் (×2)

Kushdarogiyaik kunamaakkinavar

Kashda noykalai ellaam neekkinavar

Thushdanaay nadantha savul endra nabarai (×2)

Ishdamaay pavulaay maatriyavar (×2)

Verse 3

சீஷர்கள் கால்களைக் கழுவினவர்

பாசமாய் சிறுவரை நேசித்தவர்

நீசராம் நம்மை திருத்திட எண்ணி (×2)

கசையடி வசை மொழி ஏற்றிட்டவர் (×2)

Seesharkal kaalkalaik kazhuvinavar

Paasamaay siruvarai naesiththavar

Neesaraam nammai thiruththida enni (×2)

Kasaiyadi vasai mozhi aetrittavar (×2)

Verse 4

வருந்திய மக்களை மகிழ்வித்தவர்

திருந்திய மக்களை இரட்சித்தவர்

வேதனையோடு தொங்கிய போதும் (×2)

வேதனை செய்தவரை மன்னித்தவர் (×2)

Varunthiya makkalai magizhviththavar

Thirunthiya makkalai ratchiththavar

Vaethanaiyodu thongiya pothum (×2)

Vaethanai seythavarai manniththavar (×2)

Alaikum Satham Ketkalaiyo PPT – PowerPoint Slides

Download அழைக்கும் சத்தம் கேட்கலையோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A