Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Untran Thirupaniyai Lyricsஉன்றன் திருப்பணியை

Artist to be confirmedFaithWorship

Untran Thirupaniyai Lyrics in Tamil & English

Chorus

உன்றன் திருப்பணியை உறுதியுடன் புரிய

உதவாத பாவி நானே.

Undran thiruppaniyai uruthiyudan puriya

Uthavaatha paavi naanae.

Bridge

அந்தகாரமே நின்றுன் அருணோதயமே கண்டு

வந்த நாள் முதற்கொண்டு வைத்தாய் எனக்குன் தொண்டு

சரணங்கள்

Anthagaaramae nindrun arunothayamae kandu

Vantha naal mutharkondu vaiththaay enakkun thondu

Saranangal

Verse 1

வேதனத்தின் பொருட்டோ, மேலவர் நிமித்தமே

வெளியிட் டறிக்கை செய்யவோ?-உல

காதாயம் சுயநயம் அகிலத்துரிய புகழ்

அடைந்து ப்ரகாசிக்கவோ?

ஓதிக்காலங் கழிக்க உலகாவி அடைந்தவன்

நீதிக்கெனைப் பலியாய் நேர்ந்துகொண் டுழைக்கேனோ?

Vaethanaththin porutto, maelavar nimiththamae

Veliyid darikkai seyyavo?-ula

Kaathaayam suyanayam agilaththuriya pugazh

Adainthu pragaasikkavo?

Othikkaalang kazhikka ulagaavi adainthavan

Neethikkenaip paliyaay naernthugon duzhaikkaeno?

Verse 2

வேனல் குளிரைக் கண்டு மேனி மிகவெருண்டு

வெளியேறா தகம் துஞ்சினேன்,-வேளைப்

பான முணவுபிந்த பலபிணி வருமென்ற

பயத்தாலே நித மஞ்சினேன்;

கானகம் மலைசென்று கடும்பணி குளிர் வென்று

போனகம் நீரகன்று புவியி லுழைத்த யேசு.

Vaenal kuliraik kandu maeni migaverundu

Veliyaeraa thagam thunjsinaen,-vaelaip

Paana munavubintha palabini varumendra

Payaththaalae nitha manjsinaen;

Kaanagam malaisendru kadumbani kulir vendru

Ponagam neeragandru puviyi luzhaiththa yaesu.

Verse 3

காடோ, மலை நதியோ, கடலோ, கடந்தலுத்துக்

கஸ்தி மிகவே அடைந்து,-உடல்

பாடுங் கவலை நோயும் பசியும் நிருவாணமும்,

பகைவர் திருடர் மோசமும்,

சாடக் கிறிஸ்துவுக்குத் தகுந்த பானபலியாய்

ஓடத்தனை யொப்பித்தோன் உறுதி யெனக்கில்லையே.

Kaado, malai nathiyo, kadalo, kadanthaluththuk

Kasthi migavae adainthu,-udal

Paadung kavalai noyum pasiyum niruvaanamum,

Pagaivar thirudar mosamum,

Saadak kiristhuvukkuth thaguntha paanabaliyaay

Odaththanai yoppiththon uruthi yenakkillaiyae.

Verse 4

வண்டி வகைகளோடு வாழ்ந்தும் எனது கூடு

மயங்கி அயர்ந்து வாடுதே,-இனி

என்று மிருப்பிடத்திலிருந்து பணி புரிய

இசைந்தென் மனது நாடுதே;

ஒன்றும் உதவியின்று ஊரே அலைந்து சென்று,

நன்றே நிதம்புரிந்த நரனே பரனே யேசு.

Vandi vagaigalodu vaazhnthum enathu koodu

Mayangi ayarnthu vaaduthae,-ini

Endru miruppidaththilirunthu pani puriya

Isainthen manathu naaduthae;

Ondrum uthaviyindru oorae alainthu sendru,

Nandrae nithamburintha naranae paranae yaesu.

Untran Thirupaniyai PPT – PowerPoint Slides

Download உன்றன் திருப்பணியை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with U