Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 10:7 in Tamil

நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடையஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது.

Naan vanthu athai en kangalaal kaanumattum antha vaarththaigalai naan nambavillai; ivaigalil paathiyaagilum enakku arivikkappadavillai endru kaangiraen; naan kaelvippatta pirasthaabaththaippaarkkilum, ummudaiyanjaanamum selvamum athigamaayirukkirathu.

1 Kings 10:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் வந்து அதை என்னுடைய கண்களால் காணும்வரை அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதிகூட எனக்கு அறிவிக்கப்படவில்லை; நான் கேள்விப்பட்ட புகழ்ச்சியைவிட, உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாக இருக்கிறது.
Open Tamil Contemporary Version
ஆனால் நான் வந்து என் சொந்தக் கண்களால் பார்க்கும்வரை இவற்றை நம்பவேயில்லை. உண்மையில் இவற்றில் பாதியேனும் எனக்குச் சொல்லப்படவில்லை. நான் கேள்விப்பட்டதைப் பார்க்கிலும், ஞானமும் செல்வமும் பலமடங்கு உம்மிடம் அதிகமாயிருக்கிறது.
Tamil Easy Reading Version
நான் இங்கே வந்து என் சொந்தக்கண்களால் காணும்வரை இவற்றை நம்பாமல் இருந்தேன். இப்போது கேள்விப்பட்டதை எல்லாம் கண்ணால் பார்த்துவிட்டேன். ஜனங்கள் சொன்னதைவிட உங்கள் அறிவும் செல்வமும் மிகுதியாகும்.

1 Kings 10:7 in English

King James Version (KJV)
Howbeit I believed not the words, until I came, and mine eyes had seen [it:] and, behold, the half was not told me: thy wisdom and prosperity exceedeth the fame which I heard.
World English Bible (WEB)
However, I didn’t believe the words until I came and my eyes had seen it. Behold, not even half was told me! Your wisdom and prosperity exceed the fame which I heard.
American Standard Version (ASV)
Howbeit I believed not the words, until I came, and mine eyes had seen it: and, behold, the half was not told me; thy wisdom and prosperity exceed the fame which I heard.
Bible in Basic English (BBE)
But I had no faith in what was said about you, till I came and saw for myself; and now I see that it was not half the story; your wisdom and your wealth are much greater than they said.
Darby Translation (DBY)
but I gave no credit to the words, until I came and mine eyes had seen; and behold, the half was not told me: in wisdom and prosperity thou exceedest the report that I heard.
Webster's Bible (WBS)
Howbeit, I believed not the words, until I came, and my eyes had seen [it] : and behold, the half was not told me: thy wisdom and prosperity exceed the fame which I heard.
Young's Literal Translation (YLT)
and I gave no credence to the words till that I have come, and my eyes see, and lo, it was not declared to me — the half; thou hast added wisdom and goodness unto the report that I heard.

Read in context

  1. 5அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,
  2. 6ராஜாவை நோக்கி: உம்முடையவர்த்தமானங்களையும் உம்முடையஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று.
  3. 7நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடையஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது.
  4. 8உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள்.
  5. 9உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக: கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால், நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள்.
Read all of 1 Kings 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.