1 Samuel 24:13 in Tamil
முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை.
Muthiyor mozhippadiyae, aagaathavarkalidaththilae aagaamiyam pirakkum; aagaiyaal ummudaiyabaeril naan kaiboduvathillai.
1 Samuel 24:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- முதியோர் வாக்கின்படியே, தீயோரிடமிருந்து தீமை பிறக்கும்; எனவே, என்னுடைய கை உமக்கு விரோதமாக இருக்காது.
- Open Tamil Contemporary Version
- ‘தீயோர்களிடத்திலிருந்து தீய செயல்கள் பிறக்கும்’ என்று ஒரு முதுமொழி உண்டு. ஆதலால் எனது கை உம்மைத் தொடாது.
- Tamil Easy Reading Version
- “‘கெட்ட ஜனங்களிடமிருந்தே கெட்டவை வருகின்றன என்பது பழமொழி.’ “நான் எவ்வித தீமையும் செய்யவில்லை! நான் கெட்டவன் அல்ல! நான் உமக்குத் தீமை செய்யமாட்டேன்!
1 Samuel 24:13 in English
- King James Version (KJV)
- As saith the proverb of the ancients, Wickedness proceedeth from the wicked: but mine hand shall not be upon thee.
- World English Bible (WEB)
- As the proverb of the ancients says, ‘Out of the wicked comes wickedness;’ but my hand will not be on you.
- American Standard Version (ASV)
- As saith the proverb of the ancients, Out of the wicked cometh forth wickedness; but my hand shall not be upon thee.
- Bible in Basic English (BBE)
- There is an old saying, From the evil-doer comes evil: but my hand will never be lifted up against you.
- Darby Translation (DBY)
- As saith the proverb of the ancients, Wickedness proceedeth from the wicked; but my hand shall not be upon thee.
- Webster's Bible (WBS)
- As saith the proverb of the ancients, Wickedness proceedeth from the wicked: but my hand shall not be upon thee.
- Young's Literal Translation (YLT)
- as saith the simile of the ancients, From the wicked goeth out wickedness, and my hand is not on thee.
Read in context
- 11என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்றுபோடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர்.
- 12கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை.
- 13முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை.
- 14இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர் ?
- 15கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.
Cross references
- Matthew 7:20 மத்தேயு 7:20ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
- Matthew 7:16–18 மத்தேயு 7:16–18அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோகெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
- Matthew 12:33–34 மத்தேயு 12:33–34மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும். விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.
- Matthew 15:19 மத்தேயு 15:19எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.