1 Samuel 25:6 in Tamil
அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும், உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,
Avanai nokki: neer vaazhka, umakkus samaathaanamum, ummudaiya veettukkus samaathaanamum, umakku undaana ellaavatrirkum samaathaanamum, undaavathaaga endru avanai vaazhththi,
1 Samuel 25:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனை பார்த்து: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,
- Open Tamil Contemporary Version
- நீங்கள் அவனை, ‘நீர் நீடித்து வாழ்வீராக. உமக்கும் உமது குடும்பத்துக்கும் நல்வாழ்வு உண்டாவதாக. உமக்குரிய அனைத்திற்கும் நல்வாழ்வு உண்டாவதாக’ என்று வாழ்த்துங்கள்.
- Tamil Easy Reading Version
- தாவீது நாபாலுக்கு இந்த செய்தியையும் சொல்லி அனுப்பினான், “நீயும் உனது குடும்பத்தாரும் நலமென்று நம்புகிறேன். உனக்குரிய அனைத்தும் நலமென்று நம்புகிறேன்.
1 Samuel 25:6 in English
- King James Version (KJV)
- And thus shall ye say to him that liveth [in prosperity], Peace [be] both to thee, and peace [be] to thine house, and peace [be] unto all that thou hast.
- World English Bible (WEB)
- Tell him, ‘Long life to you! Peace be to you! Peace be to your house! Peace be to all that you have!
- American Standard Version (ASV)
- and thus shall ye say to him that liveth [in prosperity], Peace be unto thee, and peace be to thy house, and peace be unto all that thou hast.
- Bible in Basic English (BBE)
- And say this to my brother, May all be well for you: peace be to you and your house and all you have.
- Darby Translation (DBY)
- And thus shall ye say: Long life [to thee]! and peace be to thee, and peace be to thy house, and peace be to all that thou hast!
- Webster's Bible (WBS)
- And thus shall ye say to him that liveth [in prosperity] , Peace [be] both to thee, and peace [be] to thy house, and peace [be] to all that thou hast.
- Young's Literal Translation (YLT)
- and said thus: To life! and thou, peace; and thy house, peace; and all that thou hast — peace!
Read in context
- 4நாபால் தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கிற செய்தியை வனாந்திரத்தில் இருக்கிற தாவீது கேட்டபோது,
- 5தாவீது பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப்போய், நாபாலிடத்தில் சென்று, என் பேரைச்சொல்லி, அவன் சுகசெய்தியை விசாரித்து,
- 6அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும், உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி,
- 7இப்பொழுது ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்; உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதும் இல்லை.
- 8உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களில் தயைகிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான்.
Cross references
- 1 Chronicles 12:18 1 நாளாகமம் 12:18அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கினதினால், அவன்: தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் குமாரனே, உமது பட்சமாயிருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவி செய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார் என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களைத் தண்டுக்குத் தலைவராக்கினான்.
- Psalm 122:7 சங்கீதம் 122:7உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளேசுகமும் இருப்பதாக.
- 1 Timothy 5:6 1 தீமோத்தேயு 5:6சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்.
- Luke 10:5 லூக்கா 10:5ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள்.
- 2 Thessalonians 3:16 2 தெசலோனிக்கேயர் 3:16சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.
- Matthew 10:12–13 மத்தேயு 10:12–13ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.
- John 14:27 யோவான் 14:27சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
- 2 Samuel 18:28 2 சாமுவேல் 18:28அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புற விழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு விரோதமாய்த் தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான்.
- 1 Thessalonians 3:8 1 தெசலோனிக்கேயர் 3:8நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைத்திருப்போம்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.