2 Chronicles 15:18 in Tamil
தன் தகப்பனும் தானும் பரிசுத்தம் பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.
Than thagappanum thaanum parisuththam pannumbadi naernthugonda velliyaiyum ponnaiyum panimuttugalaiyum avan thaevanudaiya aalayaththilae konduvanthaan.
2 Chronicles 15:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தன் தகப்பனும் தானும் பரிசுத்தம்செய்ய பொருத்தனை செய்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.
- Open Tamil Contemporary Version
- தானும் தன் தகப்பனும் அர்ப்பணித்திருந்த வெள்ளியையும், தங்கத்தையும், மற்ற பொருட்களையும் இறைவனுடைய ஆலயத்திற்குள் கொண்டுவந்தான்.
- Tamil Easy Reading Version
- ஆசா, தானும் தன் தந்தையும் அளித்த பரிசுத்த அன்பளிப்புகளை தேவனுடைய ஆலயத்தில் கொண்டு வந்து வைத்தான். அவை பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்டவை.
2 Chronicles 15:18 in English
- King James Version (KJV)
- And he brought into the house of God the things that his father had dedicated, and that he himself had dedicated, silver, and gold, and vessels.
- World English Bible (WEB)
- He brought the things that his father had dedicated and that he himself had dedicated, silver, gold, and vessels into God’s house.
- American Standard Version (ASV)
- And he brought into the house of God the things that his father had dedicated, and that he himself had dedicated, silver, and gold, and vessels.
- Bible in Basic English (BBE)
- He took into the house of God all the things which his father had made holy and those which he himself had made holy, silver and gold and vessels.
- Darby Translation (DBY)
- And he brought into the house of God the things which his father had dedicated, and the things which he himself had dedicated, silver, and gold, and vessels.
- Webster's Bible (WBS)
- And he brought into the house of God the things that his father had dedicated, and that he himself had dedicated, silver, and gold, and vessels.
- Young's Literal Translation (YLT)
- And he bringeth in the sanctified things of his father, and his own sanctified things, to the house of God, silver, and gold, and vessels.
Read in context
- 16தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின ராஜாவாகிய ஆசாவின் தாயான மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு ஆசா விலக்கிப்போட்டு, அவளுடைய விக்கிரகத்தையும் நிர்மூலமாக்கித் தகர்த்து, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான்.
- 17மேடைகளோ இஸ்ரவேலிலிருந்து தகர்க்கப்படவில்லை; ஆனாலும், ஆசாவின் இருதயம் அவன் நாட்களிளெல்லாம் உத்தமமாயிருந்தது.
- 18தன் தகப்பனும் தானும் பரிசுத்தம் பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.
- 19ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருஷமட்டும் யுத்தம் இல்லாதிருந்தது.
Cross references
- 1 Chronicles 26:20–26 1 நாளாகமம் 26:20–26மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான். லாதானின் குமாரர் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய குமாரரில் தலைமையான பிதாக்களாயிருந்த யெகியேலியும், யெகியேலியின் குமாரராகிய சேத்தாமும், அவன் சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள். அம்ராமீயரிலும், இத்சாகாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும்சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள். மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப்பிரதானியாயிருந்தான். எலியேசர் மூலமாய் அவனுக்கு இருந்த சகோதரரானவர்கள், இவன் குமாரன் ரெகபியாவும், இவன் குமாரன் எஷாயாவும், இவன் குமாரன் யோராமும், இவன் குமாரன் சிக்கிரியும், இவன் குமாரன் செலோமித்துமே. ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளுமான பிதாக்களின் தலைவரும் சேனாபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,
- 1 Kings 15:14–15 1 இராஜாக்கள் 15:14–15மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடிருந்த நாளெல்லாம் அவன் இருதயம் கர்த்தரோடே உத்தமமாயிருந்தது. தன் தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் கர்த்தருடைய ஆலயத்திலே கொண்டுவந்தான்.
- 1 Kings 7:51 1 இராஜாக்கள் 7:51இவ்விதமாய் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்த வேலைகளெல்லாம் முடிந்தது; அப்பொழுது சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படிநேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் கொண்டுவந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.