2 Kings 4:39 in Tamil
ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலே போய், ஒரு பேய்க்கொம்மட்டிக்கொடியைக் கண்டு, அதன் காய்களை மடிநிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது.
Oruvan keeraigalaip parikka veliyilae poy, oru paeykkommattikkodiyaik kandu, athan kaaykalai madiniraiya aruththuvanthu, avaigalai arinthu koozhppaanaiyilae pottaan; athu innathendru avarkalukkuth theriyaathirunthathu.
2 Kings 4:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலேபோய், ஒரு கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதின் காய்களை மடிநிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாமலிருந்தது.
- Open Tamil Contemporary Version
- அவர்களில் ஒருவன் வயல்வெளிக்கு மூலிகைச் செடிகளைப் பறிப்பதற்காக போகையில், ஒரு காட்டுக் கொம்மட்டிக் கொடியைக் கண்டான். அதன் காய்களைப் பிடுங்கி தன் மடியை நிரப்பினான். அவன் திரும்பிவந்தபோது, அவை என்ன காய்கள் என்று ஒருவரும் அறியாதிருந்தும் அவைகளை வெட்டி கூழிருந்த பானைக்குள் போட்டான்.
- Tamil Easy Reading Version
- மூலிகைத் தழைகளைச் சேகரிக்கும் பொருட்டு ஒருவன் வயல்வெளிக்குச் சென்றான். அங்கே விஷ திராட்சைக் கொடிகளைக் கண்டான். அக்கொடியில் இருந்து முதிர்ந்த பழங்களைச் சேகரித்துத் தன் மேலாடையின் பையில் நிரப்பிக்கொண்டான். திரும்பிவந்து, பானையில் வைத்து மூடினான். ஆனால் அங்கிருந்த தீர்க்கதரிசிகளுக்கு இவ்விஷயம் பற்றி எதுவும் தெரியாது.
2 Kings 4:39 in English
- King James Version (KJV)
- And one went out into the field to gather herbs, and found a wild vine, and gathered thereof wild gourds his lap full, and came and shred [them] into the pot of pottage: for they knew [them] not.
- World English Bible (WEB)
- One went out into the field to gather herbs, and found a wild vine, and gathered a lap full of wild gourds from it, and came and cut them up into the pot of stew; for they didn’t recognize them.
- American Standard Version (ASV)
- And one went out into the field to gather herbs, and found a wild vine, and gathered thereof wild gourds his lap full, and came and shred them into the pot of pottage; for they knew them not.
- Bible in Basic English (BBE)
- And one went out into the field to get green plants and saw a vine of the field, and pulling off the fruit of it till the fold of his robe was full, he came back and put the fruit, cut up small, into the pot of soup, having no idea what it was.
- Darby Translation (DBY)
- Then one went out into the field to gather herbs, and found a wild vine, and gathered from it his lap full of wild colocynths, and came and shred them into the pot of pottage; for they did not know them.
- Webster's Bible (WBS)
- And one went out into the field to gather herbs, and found a wild vine, and gathered from it wild gourds his lap full, and came and shred [them] into the pot of pottage: for they knew [them] not.
- Young's Literal Translation (YLT)
- And one goeth out unto the field to gather herbs, and findeth a vine of the field, and gathereth of it gourds of the field — the fulness of his garment — and cometh in and splitteth [them] into the pot of pottage, for they knew [them] not;
Read in context
- 37அப்பொழுது அவள் உள்ளே போய், அவன் பாதத்திலே விழுந்து, தரைமட்டும் பணிந்து, தன் குமாரனை எடுத்துக்கொண்டு வெளியே போனாள்.
- 38எலிசா கில்காலுக்குத் திரும்பிப்போய் இருக்கையில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தீர்க்கதரிசிகளின் புத்திரர், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்; அவன் தன் வேலைக்காரனை நோக்கி: நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்குக் கூழ்காய்ச்சு என்றான்.
- 39ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலே போய், ஒரு பேய்க்கொம்மட்டிக்கொடியைக் கண்டு, அதன் காய்களை மடிநிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது.
- 40சாப்பிட அதை ஜனங்களுக்குவார்த்தார்கள்; அவர்கள் அந்தக் கூழில் எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடக்கூடாமல்: தேவனுடைய மனுஷனே, பானையில் சாவு இருக்கிறது என்று சத்தமிட்டார்கள்.
- 41அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, ஜனங்கள் சாப்பிடும்படி அவர்களுக்கு வார் என்றான்; அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற்போயிற்று.
Cross references
- Isaiah 5:4 ஏசாயா 5:4நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன?
- Matthew 15:13 மத்தேயு 15:13அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
- Hebrews 12:15 எபிரெயர் 12:15ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,
- Jeremiah 2:21 எரேமியா 2:21நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாகநாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத் திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன?
Original words (Hebrew)
- one · H259אֶחָד ʼechâd
- out · H3318יָצָא yâtsâʼ
- field · H7704שָׂדֶה sâdeh
- gather · H3950לָקַט lâqaṭ
- herbs · H219אוֹרָה ʼôwrâh
- found · H4672מָצָא mâtsâʼ
- wild · H7704שָׂדֶה sâdeh
- vine · H1612גֶּפֶן gephen
- gathered · H3950לָקַט lâqaṭ
- wild · H7704שָׂדֶה sâdeh
- gourds · H6498פַּקֻּעָה paqquʻâh
- lap · H899בֶּגֶד beged
- full · H4393מְלֹא mᵉlôʼ
- came · H935בּוֹא bôwʼ
- shred · H6398פָּלַח pâlach
- pot · H5518סִיר çîyr
- pottage · H5138נָזִיד nâzîyd
- knew · H3045יָדַע yâdaʻ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.