2 Samuel 14:21 in Tamil
அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன்; நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.
Appozhuthu raajaa yovaabaip paarththu: itho, inthak kaariyaththais seykiraen; nee poy apsalom ennum pillaiyaandaanaith thirumba azhaiththukkonduvaa endraan.
2 Samuel 14:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் வாலிபனைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது அரசன் யோவாபை அழைத்து, “நான் அதைச் செய்வேன். நீ போய் வாலிபனான அப்சலோமை அழைத்து வா” என்றான்.
- Tamil Easy Reading Version
- அரசன் யோவாபை நோக்கி, “இதோ, நான் வாக்களித்தபடியே செய்வேன். போய் இளைஞனாகிய அப்சலோமை இப்போதே அழைத்து வாருங்கள்” என்றான்.
2 Samuel 14:21 in English
- King James Version (KJV)
- And the king said unto Joab, Behold now, I have done this thing: go therefore, bring the young man Absalom again.
- World English Bible (WEB)
- The king said to Joab, “Behold now, I have granted this thing. Go therefore, and bring the young man Absalom back.”
- American Standard Version (ASV)
- And the king said unto Joab, Behold now, I have done this thing: go therefore, bring the young man Absalom back.
- Bible in Basic English (BBE)
- And the king said to Joab, See now, I will do this thing: go then and Come back with the young man Absalom.
- Darby Translation (DBY)
- And the king said to Joab, Behold now, I have done this thing: so go, bring back the young man Absalom.
- Webster's Bible (WBS)
- And the king said to Joab, Behold now, I have done this thing: go therefore, bring the young man Absalom again.
- Young's Literal Translation (YLT)
- And the king saith unto Joab, 'Lo, I pray thee, thou hast done this thing; and go, bring back the young man Absalom.'
Read in context
- 19அப்பொழுது ராஜா: இதிலெல்லாம்யோவாப் உனக்கு உட்கையாய் இருக்கவில்லையா என்று கேட்டான். அதற்கு ஸ்திரீ பிரதியுத்தரமாக, ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னதற்கெல்லாம் வலது பக்கத்திலாவது இடதுபக்கத்திலாவதுவிலகுவதற்கு ஒருவராலும் கூடாது என்று ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; உமது அடியானாகிய யோவாப் தான் இதை எனக்குக் கற்பித்து, அவனே இந்த எல்லா வார்த்தைகளையும் உமது அடியாளின் வாயிலே போட்டான்.
- 20நான் இந்தக் காரியத்தை உபமானமாய்ப் பேசுகிறதற்கு உமது அடியானாகிய யோவாப் அதற்குக் காரணமாயிருந்தான்; ஆனாலும் தேசத்தில் நடக்கிறதையெல்லாம் அறிய, என் ஆண்டவனுடையஞானம் தேவதூதனுடைய ஞானத்தைப்போல் இருக்கிறது என்றாள்.
- 21அப்பொழுது ராஜா யோவாபைப் பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன்; நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான்.
- 22அப்பொழுது யோவாப் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி, ராஜாவை வாழ்த்தி: ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததினால், என் ஆண்டவனாகிய ராஜாவின் கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.
- 23பின்பு யோவாப் எழுந்து, கேசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.
Cross references
- 2 Samuel 14:11 2 சாமுவேல் 14:11பின்னும் அவள்: இரத்தப்பழி வாங்குகிறவர்கள் அழிம்புசெய்து, என் குமாரனை அதம்பண்ணப் பெருகிப்போகாதபடிக்கு, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உன் குமாரனுடைய மயிரில் ஒன்றாவது தரையில் விழுவதில்லை என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
- 1 Samuel 14:39 1 சாமுவேல் 14:39அது என் குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை ரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை.
- Mark 6:26 மாற்கு 6:26அப்பொழுது ராஜா மிகுந்த துக்கமடைந்தான்; ஆகிலும், ஆணையினிமித்தமும், கூடப்பந்தியிருந்தவர்களினிமித்தமும், அவளுக்கு அதை மறுக்க மனதில்லாமல்;
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.