Acts 23:1 in Tamil
பவுல் ஆலோசனைச் சங்கத்தாரை உற்றுப்பார்த்து: சகோதரரே, இந்நாள்வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான்.
Pavul aalosanais sangaththaarai utruppaarththu: sagothararae, innaalvaraikkum ellaa vishayangalilum naan nalmanachaatchiyodae thaevanukkumunpaaga nadanthuvanthaen endru sonnaan.
Acts 23:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பவுல் ஆலோசனைச் சங்கத்தினரை உற்றுப்பார்த்து: சகோதரர்களே, இந்தநாள்வரை எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடு தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான்.
- Open Tamil Contemporary Version
- பவுல் ஆலோசனைச் சங்கத்திலுள்ளவர்களை நேருக்கு நேராகப் பார்த்து, “சகோதரரே, இன்றுவரை ஒரு நல்ல மனசாட்சியுடனே நான் இறைவனுக்குரிய எனது கடமையை நிறைவேற்றியிருக்கிறேன்” என்றான்.
- Tamil Easy Reading Version
- யூத சங்கக் கூட்டத்தினரைப் பார்த்துப் பவுல், “சகோதரர்களே! தேவனுக்கு முன்பாக நல்ல வகையில் என் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். சரியென்று நான் நினைத்ததையே எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன்” என்றான்.
Acts 23:1 in English
- King James Version (KJV)
- And Paul, earnestly beholding the council, said, Men [and] brethren, I have lived in all good conscience before God until this day.
- World English Bible (WEB)
- Paul, looking steadfastly at the council, said, “Brothers, I have lived before God in all good conscience until today.”
- American Standard Version (ASV)
- And Paul, looking stedfastly on the council, said, Brethren, I have lived before God in all good conscience until this day.
- Bible in Basic English (BBE)
- And Paul, looking fixedly at the Sanhedrin, said, My brothers, my life has been upright before God till this day.
- Darby Translation (DBY)
- And Paul, fixing his eyes on the council, said, Brethren, I have walked in all good conscience with God unto this day.
- Webster's Bible (WBS)
- And Paul, earnestly beholding the council, said, Men, brethren, I have lived in all good conscience before God until this day.
- Young's Literal Translation (YLT)
- And Paul having earnestly beheld the sanhedrim, said, 'Men, brethren, I in all good conscience have lived to God unto this day;'
Read in context
- 1பவுல் ஆலோசனைச் சங்கத்தாரை உற்றுப்பார்த்து: சகோதரரே, இந்நாள்வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான்.
- 2அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான்.
- 3அப்பொழுது பவுல் அவனைப்பார்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான்.
Cross references
- Acts 24:16 அப்போஸ்தலருடைய நடபடிகள் 24:16இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன்.
- 2 Corinthians 1:12 2 கொரிந்தியர் 1:12மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ் சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.
- 2 Timothy 1:3 2 தீமோத்தேயு 1:3நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து,
- Hebrews 13:18 எபிரெயர் 13:18எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம்.
- 1 Corinthians 4:4 1 கொரிந்தியர் 4:4என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.
- Acts 22:5 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:5அதற்குப் பிரதான ஆசாரியரும் மூப்பர் யாவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையிலே நான் சகோதரருக்கு நிருபங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவிலிருக்கிறவர்களும் தண்டிக்கப்படும்படிக்கு, அவர்களைக் கட்டி, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அவ்விடத்திற்குப் போனேன்.
- 2 Corinthians 4:2 2 கொரிந்தியர் 4:2வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.
- Acts 23:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:6பின்பு அவர்களில், சதுசேயர் ஒரு பங்கும் பரிசேயர் ஒரு பங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன். மரித்தோருடைய உயிர்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக்குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான்.
- Proverbs 28:1 நீதிமொழிகள் 28:1ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போல தைரியமாயிருக்கிறார்கள்.
- Acts 22:30 அப்போஸ்தலருடைய நடபடிகள் 22:30பவுலின்மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் மறுநாளிலே அவனைக் கட்டவிழ்த்து, பிரதானஆசாரியரையும் ஆலோசனைச் சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு, அவனைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.
- Acts 6:15 அப்போஸ்தலருடைய நடபடிகள் 6:15ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள். அதிகாரம்
- 1 Peter 3:16 1 பேதுரு 3:16கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்லநடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- Paul · G3972Παῦλος Paûlos
- beholding · G816ἀτενίζω atenízō
- council · G4892συνέδριον synédrion
- said · G2036ἔπω épō
- Men · G435ἀνήρ anḗr
- brethren · G80ἀδελφός adelphós
- I · G1473ἐγώ egṓ
- lived · G4176πολιτεύομαι politeúomai
- all · G3956πᾶς pâs
- good · G18ἀγαθός agathós
- conscience · G4893συνείδησις syneídēsis
- God · G2316θεός theós
- until · G891ἄχρι áchri
- this · G3778οὗτος hoûtos
- day · G2250ἡμέρα hēméra
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.