Acts 9:19 in Tamil
பின்பு அவன் போஜனம்பண்ணிப்பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ளசீஷருடனே சிலநாள் இருந்து,
Pinpu avan pojanambannippalappattaan. savul thamaskuvilullaseesharudanae silanaal irunthu,
Acts 9:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு அவன் உணவு சாப்பிட்டு பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீடர்களுடனே சிலநாட்கள் இருந்து,
- Open Tamil Contemporary Version
- பின்பு அவன் சிறிதளவு உணவைச் சாப்பிட்டு, தன் பெலத்தைத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். சவுல் தமஸ்குவில் இருந்த சீடர்களுடன் சில நாட்களைக் கழித்தான்.
- Tamil Easy Reading Version
- அவன் ஆகாரம் உண்டு, பலம் பெற்றவனாக உணர்ந்தான். சில நாட்கள் தமஸ்குவில் சவுல் இயேசுவின் சீஷர்களோடு இருந்தான்.
Acts 9:19 in English
- King James Version (KJV)
- And when he had received meat, he was strengthened. Then was Saul certain days with the disciples which were at Damascus.
- World English Bible (WEB)
- He took food and was strengthened. Saul stayed several days with the disciples who were at Damascus.
- American Standard Version (ASV)
- and he took food and was strengthened. And he was certain days with the disciples that were at Damascus.
- Bible in Basic English (BBE)
- And when he had taken food his strength came back. And for some days he kept with the disciples who were in Damascus.
- Darby Translation (DBY)
- and, having received food, got strength. And he was with the disciples who [were] in Damascus certain days.
- Webster's Bible (WBS)
- And when he had received food, he was strengthened. Then was Saul certain days with the disciples who were at Damascus.
- Young's Literal Translation (YLT)
- and having received nourishment, was strengthened, and Saul was with the disciples in Damascus certain days,
Read in context
- 17அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்த வழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான்.
- 18உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான்.
- 19பின்பு அவன் போஜனம்பண்ணிப்பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ளசீஷருடனே சிலநாள் இருந்து,
- 20தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.
- 21கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக்கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள்.
Cross references
- Acts 26:20 அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:20முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும்நான் போய், அவர்கள் தேவனிடத்திற்குமனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன்.
- 1 Samuel 30:12 1 சாமுவேல் 30:12அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்டபின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்றுநாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான்.
- Galatians 1:17 கலாத்தியர் 1:17எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.
- Acts 27:33–36 அப்போஸ்தலருடைய நடபடிகள் 27:33–36பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்றுபதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள். ஆகையால் போஜம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான். இப்படிச் சொல்லி, அப்பத்தை எடுத்து, எல்லாருக்குமுன்பாகவும்தேவனை ஸ்தோத்திரித்து, அதைப் பிட்டுப்புசிக்கத்தொடங்கினான். அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள்.
- Acts 11:26 அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:26அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச்சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
- Ecclesiastes 9:7 பிரசங்கி 9:7நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார்.
- 1 Samuel 10:10–12 1 சாமுவேல் 10:10–12அவர்கள் அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான். அதற்குமுன்னே அவனை அறிந்தவர்கள் எல்லோரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்லுகிறதைக் கண்டபோது: கீசின் குமாரனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த ஜனங்கள் ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள். அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியாயிற்று.
Original words (Greek)
- And · G2532καί kaí
- received · G2983λαμβάνω lambánō
- meat · G5160τροφή trophḗ
- strengthened · G1765ἐνισχύω enischýō
- Then · G1161δέ dé
- was · G1096γίνομαι gínomai
- Saul · G4569Σαῦλος Saûlos
- certain · G5100τὶς tìs
- days · G2250ἡμέρα hēméra
- with · G3326μετά metá
- disciples · G3101μαθητής mathētḗs
- were · G3588ὁ ho
- at · G1722ἐν en
- Damascus · G1154Δαμασκός Damaskós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.