Deuteronomy 28:68 in Tamil
இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள், உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்.
Inik kaanaathiruppaay endru naan unakkus sonnavazhiyaay, karththar unnaik kappalkalilae egipthirkuth thirumbak kondubogappannuvaar; angae ungal saththurukkalukku vaelaikkaararaagavum vaelaikkaarigalaagavum virkappaduveerkal, ungalaik kolvaarum illaathiruppaarkal endraan.
Deuteronomy 28:68 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாக, யெகோவா உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகச்செய்வார்; அங்கே உங்கள் எதிரிகளுக்கு வேலைக்காரர்களாகவும், வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் வாங்குபவரும் இல்லாதிருப்பார்கள்” என்றான்.
- Open Tamil Contemporary Version
- “இனி எகிப்திற்கு ஒருபோதும் பயணமாய் போகக்கூடாது” என நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனாலும் யெகோவா உங்களைத் திரும்பவும் எகிப்திற்குக் கப்பல்களில் அனுப்புவார். நீங்கள் அங்கே உங்கள் பகைவர்களிடம் ஆண் அடிமைகளாகவும், பெண் அடிமைகளாகவும் உங்களை விற்கும்படி முயற்சிப்பீர்கள். ஆனால் ஒருவரும் உங்களை வாங்கமாட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- கப்பல்களில் கர்த்தர் உன்னை மீண்டும் எகிப்திற்கு அனுப்புவார். உங்களை மீண்டும் அனுப்பமாட்டேன் என்று நான் சொன்னேன். ஆனால், கர்த்தர் உங்களை அனுப்புவார். எகிப்தில் உங்கள் பகைவர்களுக்கு நீங்களே உங்களை அடிமைகளாக விற்பீர்கள். ஆனால் உங்களை யாரும் வாங்கமாட்டார்கள்.”
Deuteronomy 28:68 in English
- King James Version (KJV)
- And the LORD shall bring thee into Egypt again with ships, by the way whereof I spake unto thee, Thou shalt see it no more again: and there ye shall be sold unto your enemies for bondmen and bondwomen, and no man shall buy [you].
- World English Bible (WEB)
- The LORD will bring you into Egypt again with ships, by the way of which I told you that you would never see it again. There you will offer yourselves to your enemies for male and female slaves, and nobody will buy you.
- American Standard Version (ASV)
- And Jehovah will bring thee into Egypt again with ships, by the way whereof I said unto thee, Thou shalt see it no more again: and there ye shall sell yourselves unto your enemies for bondmen and for bondwomen, and no man shall buy you.
- Bible in Basic English (BBE)
- And the Lord will take you back to Egypt again in ships, by the way of which I said to you, You will never see it again: there you will be offering yourselves as men-servants and women-servants to your haters for a price, and no man will take you.
- Darby Translation (DBY)
- And Jehovah will bring thee into Egypt again with ships, by the way whereof I said unto thee, Thou shalt see it again no more; and there ye shall be sold unto your enemies for bondmen and bondwomen, and there shall be no man to buy [you].
- Webster's Bible (WBS)
- And the LORD shall bring thee into Egypt again with ships, by the way of which I have said to thee, Thou shalt see it no more again: and there ye shall be sold to your enemies for bond-men and bond-women, and no man shall buy [you] .
- Young's Literal Translation (YLT)
- 'And Jehovah hath brought thee back to Egypt with ships, by a way of which I said to thee, Thou dost not add any more to see it, and ye have sold yourselves there to thine enemies, for men-servants and for maid-servants, and there is no buyer.'
Read in context
- 66உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில்கொண்டிருப்பாய்.
- 67நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய்.
- 68இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள், உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்.
Cross references
- Jeremiah 44:12 எரேமியா 44:12எகிப்துதேசத்திலே தங்கும்படிக்கு வரத் தங்கள் முகங்களைத் திருப்பின மீதியான யூதரை வாரிக்கொள்ளுவேன்; அவர்கள் அனைவரும் எகிப்துதேசத்திலே நிர்மூலமாவார்கள்; அவர்கள் சிறியவன்முதல் பெரியவன்வரைக்கும், பட்டயத்துக்கு இரையாகி, பஞ்சத்தாலும் நிர்மூலமாவார்கள்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் செத்து, சாபமும் பாழும் பழிப்பும் நிந்தையுமாவார்கள்.
- Jeremiah 43:7 எரேமியா 43:7கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாதபடியினாலே, எகிப்து தேசத்துக்குப் போக எத்தனித்து, அதிலுள்ள தக்பானேஸ்மட்டும் போய்ச் சேர்ந்தார்கள்.
- Hosea 8:13 ஓசியா 8:13எனக்குச் செலுத்தும் பலிகளின் மாம்சத்தை அவர்கள் பலியிட்டுப் புசிக்கிறார்கள்; கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிரார்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைத்து, அவர்கள் பாவத்தை விசாரிக்கும்போதோவெனில், அவர்கள் எகிப்துக்குத் திரும்பிப்போவார்கள்.
- Hosea 9:3 ஓசியா 9:3அவர்கள் கர்த்தருடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர் திரும்ப எகிப்துக்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைப் புசிப்பார்கள்.
- Deuteronomy 17:16 உபாகமம் 17:16அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே.
- Exodus 20:2 யாத்திராகமம் 20:2உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.
- Joel 3:3–7 யோவேல் 3:3–7அவர்கள் என் ஜனத்தின்பேரில்சீட்டுப்போட்டு, ஆண்குழந்தைகளைவேசிப்பணையமாகக் கொடுத்து, மதுபானம் பண்ணும்படி, பெண் குழந்தைகளைத் திராட்சரசத்துக்குக் கிரயமாகக் கொடுத்ததினிமித்தமும், அங்கே அவர்களோடு வழக்காடுவேன். தீருவே, சீதோனே, பெலிஸ்தியாவின் சகல எல்லைகளே, உங்களுக்கும் எனக்கும் என்ன? இப்படி எனக்குச் சரிக்கட்டுகிறீர்களோ? இப்படி எனக்குச் சரிக்கட்டுவீர்களாகில், நான் தாமதமின்றி அதிசீக்கிரமாய் நீங்கள் சரிக்கட்டுகிறதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்வேன். நீங்கள் என் வெள்ளியையும் என் பொன்னையும் எடுத்து, இன்பமும் உச்சிதமுமான என் பொருள்களை உங்கள் கோவில்களிலே கொண்டுபோய், யூதாவின் குமாரரையும் எருசலேமின் குமாரரையும் அவர்களுடைய எல்லைகளுக்குத் தூரமாக்கும்படிக்கு, கிரேக்கரிடத்தில் விற்றுப்போட்டீர்கள். இதோ, நீங்கள் அவர்களை விற்றுப்போட்ட அவ்விடத்திலிருந்து நான் அவர்களை எழும்பிவரப்பண்ணி, நீங்கள் சரிக்கட்டினதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்து,
- Esther 7:4 எஸ்தர் 7:4எங்களை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்; அடிமைகளாகவும்வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாயிருப்பேன்; இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம்பண்ண முடியாது என்றாள்.
- Nehemiah 5:8 நெகேமியா 5:8அவர்களை நோக்கி: புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறு உத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள்.
- Luke 21:24 லூக்கா 21:24பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.
Original words (Hebrew)
- bring · H7725שׁוּב shûwb
- Egypt · H4714מִצְרַיִם Mitsrayim
- again · H7725שׁוּב shûwb
- ships · H591אֳנִיָּה ʼŏnîyâh
- way · H1870דֶּרֶךְ derek
- spake · H559אָמַר ʼâmar
- see · H7200רָאָה râʼâh
- again · H3254יָסַף yâçaph
- sold · H4376מָכַר mâkar
- enemies · H341אֹיֵב ʼôyêb
- bondmen · H5650עֶבֶד ʻebed
- bondwomen · H8198שִׁפְחָה shiphchâh
- buy · H7069קָנָה qânâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.