Ezekiel 16:41 in Tamil
உன் வீடுகளை அக்கினியால் சுட்டெரித்து, அநேக ஸ்திரீகளின் கண்களுக்கு முன்பாக உன்னில் நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்; உன் வேசித்தனத்தை ஒழியப்பண்ணுவேன்; நீ இனிப் பணையங்கொடுப்பதில்லை.
Un veedugalai akkiniyaal sutteriththu, anaega sthireegalin kangalukku munpaaga unnil niyaayaththeerppugalais seyvaarkal; un vaesiththanaththai ozhiyappannuvaen; nee inip panaiyangoduppathillai.
Ezekiel 16:41 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன்னுடைய வீடுகளை நெருப்பால் சுட்டெரித்து, அநேக பெண்களின் கண்களுக்கு முன்பாக உனக்கு நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்; உன்னுடைய வேசித்தனத்தை ஒழியச்செய்வேன்; நீ இனிக் கட்டணம் கொடுப்பதில்லை.
- Open Tamil Contemporary Version
- உன் தீயினால் எரித்து, அநேக பெண்களுக்கு முன்பாக உன்னைத் தண்டிப்பார்கள். இப்படி உன் விபசாரத்திற்கு நான் ஒரு முடிவுகட்டுவேன். அதன்பின் நீ உன் காதலர் யாருக்குமே பணம் கொடுக்கமாட்டாய்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் உனது வீட்டை (ஆலயத்தை) எரிப்பார்கள். பிற பெண்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது அவர்கள் உன்னைத் தண்டிப்பார்கள். நீ ஒரு வேசியைப்போல் வாழ்வதை நான் தடுப்பேன். நீ உனது நேசர்களுக்குப் பணம் கொடுப்பதையும் நான் தடுப்பேன்.
Ezekiel 16:41 in English
- King James Version (KJV)
- And they shall burn thine houses with fire, and execute judgments upon thee in the sight of many women: and I will cause thee to cease from playing the harlot, and thou also shalt give no hire any more.
- World English Bible (WEB)
- They will burn your houses with fire, and execute judgments on you in the sight of many women. I will cause you to cease from playing the prostitute, and you will also give no hire any more.
- American Standard Version (ASV)
- And they shall burn thy houses with fire, and execute judgments upon thee in the sight of many women; and I will cause thee to cease from playing the harlot, and thou shalt also give no hire any more.
- Bible in Basic English (BBE)
- And they will have you burned with fire, sending punishments on you before the eyes of great numbers of women; and I will put an end to your loose ways, and you will no longer give payment.
- Darby Translation (DBY)
- And they shall burn thy houses with fire, and execute judgments upon thee in the sight of many women; and I will cause thee to cease from being a harlot, and thou also shalt give no more any reward.
- Webster's Bible (WBS)
- And they shall burn thy houses with fire, and execute judgments upon thee in the sight of many women: and I will cause thee to cease from playing the harlot, and thou also shalt give no hire any more.
- Young's Literal Translation (YLT)
- And burnt thy houses with fire, And done in thee judgments before the eyes of many women, And I have caused thee to cease from going a-whoring, And also a gift thou givest no more.
Read in context
- 39உன்னை அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் உன் மண்டபங்களை இடித்து, உன் மேடைகளைத் தரையாக்கிப்போட்டு, உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்கார ஆபரணங்களை எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும்நிர்வாணமுமாக விட்டுப்போய்,
- 40உனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தைக் கொண்டுவந்து, உன்னைக் கல்லெறிந்து, உன்னைத் தங்கள் பட்டயங்களால் குத்திபோட்டு,
- 41உன் வீடுகளை அக்கினியால் சுட்டெரித்து, அநேக ஸ்திரீகளின் கண்களுக்கு முன்பாக உன்னில் நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்; உன் வேசித்தனத்தை ஒழியப்பண்ணுவேன்; நீ இனிப் பணையங்கொடுப்பதில்லை.
- 42இவ்விதமாய் என் எரிச்சல் உன்னை விட்டு நீங்கும்படி, நான் என் உக்கிரத்தை உன்னில் ஆறப்பண்ணி, இனி கோபமாயிராமல் அமருவேன்.
- 43நீ உன் இளவயதின் நாட்களை நினையாமல், இவைகளெல்லாவற்றினாலும் எனக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், இதோ, நான் உன் வழியின் பலனை உன் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அதினாலே இனி உன் எல்லா அருவருப்புகளினாலும் இப்படிப்பட்ட முறைகேடான காரியத்தைச் செய்யமாட்டாய்.
Cross references
- Ezekiel 23:48 எசேக்கியேல் 23:48இவ்விதமாய் எல்லா ஸ்திரீகளும் புத்தியடைந்து, உங்கள் முறைகேடுகளைச் செய்யாதிருக்கும்படி, முறைகேட்டைத் தேசத்தைவிட்டு ஒழியப்பண்ணுவேன்.
- Jeremiah 39:8 எரேமியா 39:8கல்தேயர் ராஜாவின் அரமனையையும் ஜனத்தின் வீடுகளையும் அக்கினியால் சுட்டெரித்து, எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள்.
- 2 Kings 25:9 2 இராஜாக்கள் 25:9கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகலகட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்து விட்டான்.
- Ezekiel 23:27 எசேக்கியேல் 23:27இவ்விதமாய் உன் முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவக்கின உன் வேசித்தனத்தையும் ஒழியப்பண்ணுவேன்; நீ இனி அவர்களை நோக்க உன் கண்களை ஏறெடுக்காமலும், எகிப்துவை நினையாமலும் இருப்பாய்.
- Jeremiah 52:13 எரேமியா 52:13அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.
- Ezekiel 23:10 எசேக்கியேல் 23:10அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்; அவளுடைய குமாரரையும் அவளுடைய குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவளையோ பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; அப்படியே அவளிடத்தில் ஆக்கினைகள் செய்யப் பட்டபடியினால் ஸ்திரீகளுக்குள் அவகீர்த்தியுள்ளவளானாள்.
- Deuteronomy 13:16 உபாகமம் 13:16அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று அந்தப் பட்டணத்தையும், அதில் கொள்ளையிடப்பட்ட யாவற்றையும் முழுவதும் அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல், நித்திய மண்மேடாயிருக்கக்கடவது.
- Ezekiel 5:8 எசேக்கியேல் 5:8இதோ, நான், நானே உனக்கு விரோதமாக வந்து, புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக உன் நடுவிலே நீதி செலுத்தி,
- Isaiah 1:25–26 ஏசாயா 1:25–26நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன். உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்தது போலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்திய நகரம் என்றும் பெயர்பெறுவாய்.
- Deuteronomy 13:11 உபாகமம் 13:11இஸ்ரவேலர் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாதிருப்பார்கள்.
- Isaiah 27:9 ஏசாயா 27:9ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நிக்கிரகம்பண்ணப்படும்; தோப்புவிக்கிரகங்களும் சிலைகளும் இனி நிற்காதபடி அவர்கள் பலிபீடங்களின் கல்லுகளையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கல்லுகளாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் அகற்றுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.
- Micah 3:12 மீகா 3:12ஆகையால் உங்கள் நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டுமேடுகளாய்ப்போம்.
Original words (Hebrew)
- burn · H8313שָׂרַף sâraph
- houses · H1004בַּיִת bayith
- fire · H784אֵשׁ ʼêsh
- execute · H6213עָשָׂה ʻâsâh
- judgments · H8201שֶׁפֶט shepheṭ
- sight · H5869עַיִן ʻayin
- many · H7227רַב rab
- women · H802אִשָּׁה ʼishshâh
- cease · H7673שָׁבַת shâbath
- harlot · H2181זָנָה zânâh
- give · H5414נָתַן nâthan
- hire · H868אֶתְנַן ʼethnan
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.