Ezekiel 27:17 in Tamil
யூதரும் இஸ்ரவேல் தேசத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணி, மின்னீத், பன்னாக் என்கிற ஊர்களின் கோதுமையையும், தேனையும், எண்ணெயையும், பிசின்தைலத்தையும் உன் தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.
Yootharum isravael thaesaththaarum unnodae viyaabaarambanni, minneeth, pannaak engira oorkalin kothumaiyaiyum, thaenaiyum, enneyaiyum, pisinthailaththaiyum un thozhilthuraikkuk konduvanthaarkal.
Ezekiel 27:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யூதர்களும் இஸ்ரவேல் தேசத்தார்களும் உன்னுடன் வியாபாரம்செய்து, மின்னித், பன்னாக் என்கிற ஊர்களின் கோதுமையையும், தேனையும், எண்ணெயையும், பிசின்தைலத்தையும் உன்னுடைய தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- “ ‘யூதாவும், இஸ்ரயேலும் உன்னோடு வியாபாரம் செய்தார்கள். அவர்கள் உன் பொருள்களுக்காக “மின்னீத்திலிருந்து” கிடைக்கும் கோதுமையையும் மற்றும் இனிப்புப் பண்டங்கள், தேன், எண்ணெய், தைல வகைகள் ஆகியவற்றையும் மாற்றீடு செய்துகொண்டார்கள்.
- Tamil Easy Reading Version
- “‘யூதா ஜனங்களும், இஸ்ரவேல் ஜனங்களும் உன்னுடன் வியாபாரம் செய்யவந்தனர். கோதுமை, தேன், எண்ணெய், பிசின் தைலம் ஆகியவற்றை உன்னிடம் வாங்க வந்தனர்.
Ezekiel 27:17 in English
- King James Version (KJV)
- Judah, and the land of Israel, they [were] thy merchants: they traded in thy market wheat of Minnith, and Pannag, and honey, and oil, and balm.
- World English Bible (WEB)
- “‘“Judah and the land of Israel were your traders. They traded wheat of Minnith, confections, honey, oil, and balm for your merchandise.
- American Standard Version (ASV)
- Judah, and the land of Israel, they were thy traffickers: they traded for thy merchandise wheat of Minnith, and pannag, and honey, and oil, and balm.
- Bible in Basic English (BBE)
- Judah and the land of Israel were your traders; they gave grain of Minnith and sweet cakes and honey and oil and perfume for your goods.
- Darby Translation (DBY)
- Judah and the land of Israel were thy traffickers: they bartered with thee wheat of Minnith, and sweet cakes, and honey, and oil, and balm.
- Webster's Bible (WBS)
- Judah, and the land of Israel, they [were] thy merchants: they traded in thy market in wheat of Minnith, and Pannag, and honey, and oil, and balm.
- Young's Literal Translation (YLT)
- Judah and the land of Israel — they [are] thy merchants, For wheat of Minnith, and Pannag, And honey, and oil, and balm, They have given out thy merchandise.
Read in context
- 15தேதான் புத்திரர் உன் வியாபாரிகளாயிருந்தார்கள்; அநேகம் தீவுகளின் வர்த்தகம் உன் வசமாகச் சேர்ந்தது; யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப் பதிலாகக் கொண்டுவந்தார்கள்.
- 16சீரியர் உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தம் உன்னோடேவியாபாரம்பண்ணி, மரகதங்களையும், இரத்தாம்பரங்களையும், சித்திரத்தையலாடைகளையும், உயர்ந்த வஸ்திரங்களையும், பவளங்களையும், பளிங்கையும் உன் சந்தைகளில் விற்கவந்தார்கள்.
- 17யூதரும் இஸ்ரவேல் தேசத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணி, மின்னீத், பன்னாக் என்கிற ஊர்களின் கோதுமையையும், தேனையும், எண்ணெயையும், பிசின்தைலத்தையும் உன் தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.
- 18தமஸ்கு உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தமும், சகலவிதப் பொருள்களின் திரட்சியினிமித்தமும் உன்னோடே வர்த்தகம்பண்ணி, கெல்போனின் திராட்சரசத்தையும் வெண்மையான ஆட்டுமயிரையும் உனக்கு விற்றார்கள்.
- 19தாண் நாட்டாரும், போக்கும்வரத்துமான யாவானரும் துலக்கப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும் வசம்பையும் உன் சந்தைகளில்கொண்டுவந்து உன் தொழில்துறையில் விற்றார்கள்.
Cross references
- Judges 11:33 நியாயாதிபதிகள் 11:33அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகுமட்டும், திராட்சத்தோட்டத்து நிலங்கள்வரைக்கும், மகா சங்காரமாய் முறியஅடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்.
- 1 Kings 5:9 1 இராஜாக்கள் 5:9என் வேலைக்காரர் லீபனோனில் இருந்து அவைகளை இறக்கிக் கடலிலே கொண்டுவருவார்கள்; அங்கே நான் அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத்துக்குக் கடல்வழியாய் அனுப்பி, அவைகளை அவிழ்த்து ஒப்பிப்பேன்; அங்கே நீர் அவைகளை ஒப்புக் கொண்டு என் ஜனங்களுக்கு ஆகாரங்கொடுத்து, என் விருப்பத்தின்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.
- Ezra 3:7 எஸ்றா 3:7அப்பொழுது பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் தங்களுக்குப் பிறப்பித்த உத்தரவின்படியே அவர்கள் கல் தச்சருக்கும் தச்சருக்கும் பணத்தையும், லீபனோனிலிருந்து கேதுருமரங்களைச் சமுத்திரவழியாய் யோபாமட்டும்கொண்டுவரச் சீதோனியருக்கும் தீரியருக்கும் போஜனபானத்தையும் எண்ணெயையும் கொடுத்தார்கள்.
- Deuteronomy 32:14 உபாகமம் 32:14பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள் ஆட்டுக்கடாக்கள் வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற சுயமான திராட்சரசத்தையும் சாப்பிட்டாய்.
- Deuteronomy 8:8 உபாகமம் 8:8அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம், அது ஒலிவமரங்களும், எண்ணெயும் தேனுமுள்ள தேசம்,
- Genesis 43:11 ஆதியாகமம் 43:11அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால் ஒன்று செய்யுங்கள்; இந்தத் தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள்.
- 2 Chronicles 2:10 2 நாளாகமம் 2:10அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரருக்கு இருபதினாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதினாயிரம் குடம் திராட்சரசத்தையும், இருபதினாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான்.
- Acts 12:20 அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:20அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர்பேரிலும் மிகவும் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து; ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாத்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்.
- Jeremiah 8:22 எரேமியா 8:22கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?
Original words (Hebrew)
- Judah · H3063יְהוּדָה Yᵉhûwdâh
- land · H776אֶרֶץ ʼerets
- Israel · H3478יִשְׂרָאֵל Yisrâʼêl
- merchants · H7402רָכַל râkal
- traded · H5414נָתַן nâthan
- market · H4627מַעֲרָב maʻărâb
- wheat · H2406חִטָּה chiṭṭâh
- Minnith · H4511מִנִּית Minnîyth
- Pannag · H6436פַּנַּג pannag
- honey · H1706דְּבַשׁ dᵉbash
- oil · H8081שֶׁמֶן shemen
- balm · H6875צְרִי tsᵉrîy
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.