Ezekiel 27:19 in Tamil
தாண் நாட்டாரும், போக்கும்வரத்துமான யாவானரும் துலக்கப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும் வசம்பையும் உன் சந்தைகளில்கொண்டுவந்து உன் தொழில்துறையில் விற்றார்கள்.
Thaan naattaarum, pokkumvaraththumaana yaavaanarum thulakkappatta irumbaiyum ilavangaththaiyum vasambaiyum un santhaigalilkonduvanthu un thozhilthuraiyil vitraarkal.
Ezekiel 27:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாண் நாட்டாரும், போக்கும்வரத்துமான யாவானரும் தீட்டப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும், வசம்பையும் உன்னுடைய சந்தைகளில் கொண்டுவந்து உன்னுடைய தொழில்துறையில் விற்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- வேதண் என்கிற தாண் நாட்டாரும் கிரேக்கரும் ஊசாவிலிருந்து வந்து, உனது வர்த்தகப் பொருட்களை வாங்கினார்கள். அவர்கள் அடித்துச் செய்யப்பட்ட இரும்பையும், கறுவாவையும், வசம்பையும் உனது வர்த்தகப் பொருள்களுக்காக மாற்றீடு செய்தார்கள்.
- Tamil Easy Reading Version
- தமஸ்கு உசேரில் உள்ள திராட்சை ரசத்தை உன் பொருட்களுக்காகக் கொடுத்தனர். அவர்கள் துலக்கப்பட்ட இரும்பையும், இலவங்கத்தையும், வசம்பையும் உன் சந்தைகளில் விற்றார்கள்.
Ezekiel 27:19 in English
- King James Version (KJV)
- Dan also and Javan going to and fro occupied in thy fairs: bright iron, cassia, and calamus, were in thy market.
- World English Bible (WEB)
- “‘“Vedan and Javan traded with yarn for your wares; wrought iron, cassia, and calamus were among your merchandise.
- American Standard Version (ASV)
- Vedan and Javan traded with yarn for thy wares: bright iron, cassia, and calamus, were among thy merchandise.
- Bible in Basic English (BBE)
- ... for your goods: they gave polished iron and spices for your goods.
- Darby Translation (DBY)
- Vedan and Javan of Uzal traded in thy markets: wrought iron, cassia, and calamus were in thy traffic.
- Webster's Bible (WBS)
- Dan also and Javan going to and fro occupied in thy fairs: bright iron, cassia, and calamus, were in thy market.
- Young's Literal Translation (YLT)
- Vedan and Javan go about with thy remnants, They have given shining iron, cassia, and cane, In thy merchandise it hath been.
Read in context
- 17யூதரும் இஸ்ரவேல் தேசத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணி, மின்னீத், பன்னாக் என்கிற ஊர்களின் கோதுமையையும், தேனையும், எண்ணெயையும், பிசின்தைலத்தையும் உன் தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள்.
- 18தமஸ்கு உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தமும், சகலவிதப் பொருள்களின் திரட்சியினிமித்தமும் உன்னோடே வர்த்தகம்பண்ணி, கெல்போனின் திராட்சரசத்தையும் வெண்மையான ஆட்டுமயிரையும் உனக்கு விற்றார்கள்.
- 19தாண் நாட்டாரும், போக்கும்வரத்துமான யாவானரும் துலக்கப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும் வசம்பையும் உன் சந்தைகளில்கொண்டுவந்து உன் தொழில்துறையில் விற்றார்கள்.
- 20இரதங்களுக்குப் போடுகிற மேன்மையான இரத்தினக்கம்பளங்களைத் தேதானின் மனுஷர் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.
- 21அரபியரும், கேதாரின் சகல பிரபுக்களும் உனக்கு வாடிக்கையானவர்த்தகராகி, ஆட்டுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள்.
Cross references
- Exodus 30:23–24 யாத்திராகமம் 30:23–24மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் இடையையும், சுகந்தகருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும், இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் இடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து,
- Judges 18:29 நியாயாதிபதிகள் 18:29பூர்வத்திலே லாயீஸ் என்னும் பேர் கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
- Song of Solomon 4:13–14 உன்னதப்பாட்டு 4:13–14உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும், நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்காரவனமாயிருக்கிறது.
- Psalm 45:8 சங்கீதம் 45:8தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.