Ezekiel 34:10 in Tamil
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.
Karththaraagiya aandavar sollugiraar: itho, naan maeypparukku virothamaaga vanthu, en aadugalai avarkal kaiyilae kaettu, maeyppar inith thangalaiyae maeykkaathabadi, manthaiyai maeykkum thozhilaivittu avarkalai vilakki, en aadugal avarkalukku aagaaramaayiraathabadi, avaigalai avarkal vaaykkuth thappappannuvaen endru sollu.
Ezekiel 34:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பர்களுக்கு விரோதமாக வந்து, என்னுடைய ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர்கள் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என்னுடைய ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாக இல்லாதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் காப்பாற்றுவேன் என்று சொல்லு.
- Open Tamil Contemporary Version
- ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் மேய்ப்பர்களுக்கு விரோதமாயிருக்கிறேன். என் மந்தைக்கு அவர்களே கணக்குக் கொடுக்கவேண்டும். நான் அவர்களை மந்தை மேய்ப்பதினின்றும் விலக்கிவிடுவேன். மேய்ப்பர்கள் இனியொருபோதும் என் மந்தையைத் தங்களுக்கு உணவாக்க மாட்டார்கள். நான் அவர்கள் வாயினின்று என் மந்தையைத் தப்புவிப்பேன். அவை இனியொருபோதும் அவர்களுக்கு உணவாயிருக்கப் போவதில்லை என்பதும் நிச்சயம்.
- Tamil Easy Reading Version
- கர்த்தர் கூறுகிறார்: “நான் அம்மேய்ப்பர்களுக்கு விரோதமானவன்! நான் என் ஆடுகளை அவர்களிடமிருந்து வற்புறுத்தி உரிமையுடன் கேட்பேன்! நான் அவர்களை வேலையைவிட்டு நீக்குவேன். அவர்கள் இனி என் மேய்ப்பர்களாக இருக்கமாட்டார்கள். எனவே மேய்ப்பர்களால் தங்களுக்கே உணவளித்துக்கொள்ள முடியாது. நான் அவர்களின் வாயிலிருந்து என் மந்தையைக் காப்பேன். பிறகு என் மந்தை அவர்களுக்கு உணவாகாது.”
Ezekiel 34:10 in English
- King James Version (KJV)
- Thus saith the Lord GOD; Behold, I [am] against the shepherds; and I will require my flock at their hand, and cause them to cease from feeding the flock; neither shall the shepherds feed themselves any more; for I will deliver my flock from their mouth, that they may not be meat for them.
- World English Bible (WEB)
- The Lord GOD says: “Behold, I am against the shepherds. I will require my sheep at their hand, and cause them to cease from feeding the sheep. The shepherds won’t feed themselves any more. I will deliver my sheep from their mouth, that they may not be food for them.”
- American Standard Version (ASV)
- Thus saith the Lord Jehovah, Behold, I am against the shepherds; and I will require my sheep at their hand, and cause them to cease from feeding the sheep; neither shall the shepherds feed themselves any more; and I will deliver my sheep from their mouth, that they may not be food for them.
- Bible in Basic English (BBE)
- This is what the Lord has said: See I am against the keepers of the flock, and I will make search and see what they have done with my sheep, and will let them be keepers of my sheep no longer; and the keepers will no longer get food for themselves; I will take my sheep out of their mouths so that they may not be food for them.
- Darby Translation (DBY)
- Thus saith the Lord Jehovah: Behold, I am against the shepherds; and I will require my sheep at their hand, and cause them to cease from feeding the flock: that the shepherds may feed themselves no more; and I will deliver my sheep from their mouth, that they may not be food for them.
- Webster's Bible (WBS)
- Thus saith the Lord God; Behold, I [am] against the shepherds; and I will require my flock at their hand, and cause them to cease from feeding the flock; neither shall the shepherds feed themselves any more; for I will deliver my flock from their mouth, that they may not be food for them.
- Young's Literal Translation (YLT)
- Thus said the Lord Jehovah: Lo, I [am] against the shepherds, And have required My flock from their hand, And caused them to cease from feeding the flock, And no more do the shepherds feed themselves, And I have delivered My flock from their mouth, And they are not to them for food.
Read in context
- 8கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள்.
- 9ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
- 10கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு.
- 11கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன்.
- 12ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத்தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பி வரப்பண்ணி,
Cross references
- Zechariah 10:3 சகரியா 10:3மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம்மூண்டது, கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் கர்த்தர் யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார்.
- Ezekiel 34:2 எசேக்கியேல் 34:2மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை; நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும்.
- Jeremiah 21:13 எரேமியா 21:13இதோ, பள்ளத்தாக்கில் வாசம் பண்ணுகிறவளே, சமனான இடத்தில் கன்மலையாய் இருக்கிறவளே, எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்றும், எங்கள் வாசஸ்தலங்களுக்குள் வருகிறவன் யார் என்றும் சொல்லுகிற உனக்கு நான் எதிராளியாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Ezekiel 13:8 எசேக்கியேல் 13:8ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நீங்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
- Jeremiah 52:24–27 எரேமியா 52:24–27காவற்சேனாதிபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான். நகரத்திலோவென்றால் அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழு பேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலேபட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபதுபேரையும் பிடித்துக்கொண்டு போனான். அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய் விட்டான். அப்பொழுது பாபிலோன் ராஜா ஆமாத் என்னும் தேசத்தின் பட்டணமாகிய ரிப்லாவிலே அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்; இவ்விதமாக யூதர்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறைகளாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.
- Psalm 23:5 சங்கீதம் 23:5என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.
- Hebrews 13:17 எபிரெயர் 13:17உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம் பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே.
- Nahum 2:13 நாகூம் 2:13இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, இரதங்களைப் புகையெழும்ப எரித்துப்போடுவேன்; பட்டயம் உன் பாலசிங்கங்களைப் பட்சிக்கும்; நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையைத் தேசத்தில் அற்றுப்போகப்பண்ணுவேன்; உன் ஸ்தானாபதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
- Ezekiel 34:8 எசேக்கியேல் 34:8கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள்.
- Psalm 72:12–14 சங்கீதம் 72:12–14கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.
- Ezekiel 3:18 எசேக்கியேல் 3:18சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்தத் துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்.
- Psalm 102:19–20 சங்கீதம் 102:19–20கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், தம்முடைய உயர்ந்த பரிசுத்தஸ்தலத்திலிருந்துபார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.
Original words (Hebrew)
- saith · H559אָמַר ʼâmar
- Lord · H136אֲדֹנָי ʼĂdônây
- shepherds · H7462רָעָה râʻâh
- require · H1875דָּרַשׁ dârash
- flock · H6629צֹאן tsôʼn
- hand · H3027יָד yâd
- cease · H7673שָׁבַת shâbath
- feeding · H7462רָעָה râʻâh
- flock · H6629צֹאן tsôʼn
- shepherds · H7462רָעָה râʻâh
- feed · H7462רָעָה râʻâh
- deliver · H5337נָצַל nâtsal
- flock · H6629צֹאן tsôʼn
- mouth · H6310פֶּה peh
- meat · H402אׇכְלָה ʼoklâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.