Ezekiel 35:3 in Tamil
அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன்.
Atharkus sollavaendiyathu ennavendraal: karththaraagiya aandavar uraikkiraar, saeyeermalaiyae, itho, naan unakku virothamaaga vanthu, en kaiyai unakku virothamaaga neetti, unnaip paazhum avaantharaveliyumaakkuvaen.
Ezekiel 35:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு எதிராக வந்து, என்னுடைய கையை உனக்கு எதிராக நீட்டி, உன்னைப் பாழும் பாலைநிலமாக்குவேன்.
- Open Tamil Contemporary Version
- நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. சேயீர்மலையே! நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன். நான் உனக்கு விரோதமாய் எனது கரத்தை நீட்டி, உன்னைப் பாழாக்குவேன்.
- Tamil Easy Reading Version
- அதனிடம் சொல், எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். “‘சேயீர் மலையே, நான் உனக்கு விரோதமானவன்! நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னை வெறுமையான நிலமாக்குவேன்.
Ezekiel 35:3 in English
- King James Version (KJV)
- And say unto it, Thus saith the Lord GOD; Behold, O mount Seir, I [am] against thee, and I will stretch out mine hand against thee, and I will make thee most desolate.
- World English Bible (WEB)
- and tell it, ‘The Lord GOD says: “Behold, I am against you, Mount Seir, and I will stretch out my hand against you. I will make you a desolation and an astonishment.
- American Standard Version (ASV)
- and say unto it, Thus saith the Lord Jehovah: Behold, I am against thee, O mount Seir, and I will stretch out my hand against thee, and I will make thee a desolation and an astonishment.
- Bible in Basic English (BBE)
- And say to it, This is what the Lord has said: See, I am against you, O Mount Seir, and my hand will be stretched out against you, and I will make you a waste and a cause for wonder.
- Darby Translation (DBY)
- and say unto it, Thus saith the Lord Jehovah: Behold, I am against thee, mount Seir, and I will stretch out my hand upon thee, and I will make thee a desolation and an astonishment.
- Webster's Bible (WBS)
- And say to it, Thus saith the Lord GOD; Behold, O mount Seir, I [am] against thee, and I will stretch out my hand against thee, and I will make thee most desolate.
- Young's Literal Translation (YLT)
- and thou hast said to it: Thus said the Lord Jehovah: Lo, I [am] against thee, O mount Seir, And have stretched out My hand against thee, And made thee a desolation and an astonishment.
Read in context
- 1கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
- 2மனுபுத்திரனே, நீ உன் முகத்தைச் சேயீர்மலைக்கு நேராகத் திருப்பி அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து,
- 3அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன்.
- 4உன் பட்டணங்களை வனாந்தரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய்.
- 5நீ பழைய பகையை வைத்து, இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால்,
Cross references
- Jeremiah 6:12 எரேமியா 6:12அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடையமனைவிகளோடே ஏகமாய் அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Ezekiel 35:7 எசேக்கியேல் 35:7நான் சேயீர்மலையைப் பாழும் அவாந்தர இடமுமாக்கி, அதிலே போக்குவரவு செய்வார் இல்லாதபடிசங்காரஞ்செய்து,
- Jeremiah 15:6 எரேமியா 15:6நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப்பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Ezekiel 6:14 எசேக்கியேல் 6:14நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, அவர்களுடைய எல்லா வாசஸ்தலங்களுமுள்ள தேசத்தை அழித்து, அதைத் திப்லாத்தின் வனாந்தரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்ப் பாழாக்குவேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
- Ezekiel 21:3 எசேக்கியேல் 21:3இஸ்ரவேல் தேசத்தை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவி, உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணுவேன்.
- Nahum 3:5 நாகூம் 3:5இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும், ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி,
- Jeremiah 21:13 எரேமியா 21:13இதோ, பள்ளத்தாக்கில் வாசம் பண்ணுகிறவளே, சமனான இடத்தில் கன்மலையாய் இருக்கிறவளே, எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்றும், எங்கள் வாசஸ்தலங்களுக்குள் வருகிறவன் யார் என்றும் சொல்லுகிற உனக்கு நான் எதிராளியாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Ezekiel 29:10 எசேக்கியேல் 29:10ஆகையால், இதோ, நான் உனக்கும் உன் நதிகளுக்கும் விரோதமாக வந்து, மிக்தோல்முதல் எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனேவரைக்கும் எகிப்துதேசத்தை அவாந்தரமும் பாழுமான வனாந்தரங்களாக்குவேன்.
- Ezekiel 25:13 எசேக்கியேல் 25:13கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் ஏதோம் தேசத்துக்கு விரோதமாக என் கையை நீட்டி அதில் மனுஷரையும் மிருகங்களையும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, அதைத் தேமான் துவக்கித் தேதான் மட்டும் வனாந்தரமாக்குவேன்; பட்டயத்தால் விழுவார்கள்.
- Ezekiel 5:8 எசேக்கியேல் 5:8இதோ, நான், நானே உனக்கு விரோதமாக வந்து, புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக உன் நடுவிலே நீதி செலுத்தி,
- Jeremiah 51:25 எரேமியா 51:25இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன பர்வதமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Ezekiel 5:15 எசேக்கியேல் 5:15நான் கோபத்தாலும் உக்கிரத்தாலும் கொடிய தண்டனைகளாலும், உன்னில் நீதிசெலுத்தும்போது, உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்கு அது நிந்தையும் துர்க்கீர்த்தியும் எச்சரிப்பும் பிரமிப்புமாய் இருக்கும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.