Ezekiel 36:15 in Tamil
நான் இனிமேல் புறஜாதிகள் செய்யும் அவமானத்தை உன்னிடத்திலே கேட்கப்பண்ணுவதுமில்லை, நீ ஜனங்களின் நிந்தையை இனிமேல் சுமப்பதுமில்லை; நீ இனிமேல் உன் ஜாதிகளைச் சாகக்கொடுப்பதுமில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
Naan inimael purajaathigal seyyum avamaanaththai unnidaththilae kaedkappannuvathumillai, nee janangalin ninthaiyai inimael sumappathumillai; nee inimael un jaathigalais saagakkoduppathumillaiyendru karththaraagiya aandavar uraikkiraar endru sol endraar.
Ezekiel 36:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் இனிமேல் அந்நியமக்கள் செய்யும் அவமானத்தை உன்னிடத்திலே கேட்கச்செய்வதுமில்லை, நீ மக்களின் நிந்தையை இனிமேல் சுமப்பதுமில்லை; நீ இனிமேல் உன்னுடைய தேசங்களைச் சாகக்கொடுப்பதுமில்லையென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
- Open Tamil Contemporary Version
- நான் உங்களை இனிமேல் நாடுகளின் பழிச்சொல்லைக் கேட்கச்செய்யமாட்டேன். மக்கள் கூட்டங்களின் ஏளனத்தால் இனி நீங்கள் வேதனையடைவதுமில்லை. அல்லது உங்கள் நாட்டை நான் விழப்பண்ணப்போவதுமில்லை என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.’ ”
- Tamil Easy Reading Version
- “நான் இனிமேல் பிறநாட்டார் உன்னை அவமானம் செய்யும்படிவிடமாட்டேன். நீ இனிமேல் அந்த ஜனங்களால் பாதிக்கப்படமாட்டாய். நீ அவர்களை இனிமேல் குழந்தை இல்லாமல் இருக்கும்படிச் செய்யமாட்டாய்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
Ezekiel 36:15 in English
- King James Version (KJV)
- Neither will I cause [men] to hear in thee the shame of the heathen any more, neither shalt thou bear the reproach of the people any more, neither shalt thou cause thy nations to fall any more, saith the Lord GOD.
- World English Bible (WEB)
- “I won’t let you hear the shame of the nations any more. You won’t bear the reproach of the peoples any more, and you won’t cause your nation to stumble any more,” says the Lord GOD.’”
- American Standard Version (ASV)
- neither will I let thee hear any more the shame of the nations, neither shalt thou bear the reproach of the peoples any more, neither shalt thou cause thy nation to stumble any more, saith the Lord Jehovah.
- Bible in Basic English (BBE)
- And I will not let the shaming of the nations come to your ears, and no longer will you be looked down on by the peoples, says the Lord.
- Darby Translation (DBY)
- neither will I cause thee to hear the ignominy of the nations any more, and thou shalt not bear the reproach of the peoples any more, neither shalt thou cause thy nation to fall any more, saith the Lord Jehovah.
- Webster's Bible (WBS)
- Neither will I cause [men] to hear in thee the shame of the heathen any more, neither shalt thou bear the reproach of the people any more, neither shalt thou cause thy nations to fall any more, saith the Lord GOD.
- Young's Literal Translation (YLT)
- And I proclaim not unto thee any more the shame of the nations, And the reproach of peoples thou bearest no more, And thy nations stumble not any more, An affirmation of the Lord Jehovah.'
Read in context
- 13கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஜனங்கள் உன்னைப்பார்த்து: நீ மனுஷரைப் பட்சிக்கிற தேசமென்றும், நீ உன் ஜனங்களைச் சாகக்கொடுக்கிற தேசமென்றும் சொல்லுகிறபடியினால்,
- 14நீ இனிமேல் மனுஷரைப் பட்சிப்பதுமில்லை, இனிமேல் உன் ஜனங்களைச் சாகக்கொடுப்பதுமில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
- 15நான் இனிமேல் புறஜாதிகள் செய்யும் அவமானத்தை உன்னிடத்திலே கேட்கப்பண்ணுவதுமில்லை, நீ ஜனங்களின் நிந்தையை இனிமேல் சுமப்பதுமில்லை; நீ இனிமேல் உன் ஜாதிகளைச் சாகக்கொடுப்பதுமில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
- 16பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
- 17மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் சுயதேசத்திலே குடியிருக்கையில் அதைத் தங்கள் நடக்கையினாலும் தங்கள் கிரியைகளினாலும்தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என் முகத்துக்கு முன்பாகத் தூரஸ்திரீயின் தீட்டைப்போல் இருந்தது.
Cross references
- Ezekiel 34:29 எசேக்கியேல் 34:29நான் அவர்களுக்குக் கீர்த்தி பொருந்திய ஒரு நாற்றை எழும்பப்பண்ணுவேன்; அவர்கள் இனி தேசத்திலே பஞ்சத்தால் வாரிக்கொள்ளப்படுவதுமில்லை, இனிப் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமப்பதுமில்லை.
- Psalm 89:50 சங்கீதம் 89:50ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம்பண்ணினவனின்காலடிகளையும் நிந்திக்கிறபடியினால்,
- Isaiah 54:4 ஏசாயா 54:4பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய்.
- Ezekiel 36:6 எசேக்கியேல் 36:6ஆகையால், நீ இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, நீங்கள் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமந்தபடியினால் நான் என் எரிச்சலினாலும் என் உக்கிரத்தினாலும் பேசினேன்,
- Isaiah 60:14 ஏசாயா 60:14உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள்.
- Zephaniah 3:19–20 செப்பனியா 3:19–20இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின யாவரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; அவர்கள் வெட்கம் அநுபவித்த சகலதேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச் செய்வேன். அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன்; அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Micah 7:8–10 மீகா 7:8–10என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார். நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன். உன் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் சத்துருவானவள் அதைப் பார்க்கும்போது வெட்கம் அவளை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள்.
- Zephaniah 2:8 செப்பனியா 2:8மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்துபெருமைபாராட்டிச் சொன்ன தூஷணங்களையும் கேட்டேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.