Ezekiel 41:5 in Tamil
பின்பு அவர் ஆலயத்தின் சுவரை ஆறு முழமாகவும், ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த சுற்றுக்கட்டினுடைய அகலத்தை நாலுமுழமாகவும் அளந்தார்.
Pinpu avar aalayaththin suvarai aaru muzhamaagavum, aalayaththais sutrilum iruntha sutrukkattinudaiya agalaththai naalumuzhamaagavum alanthaar.
Ezekiel 41:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு அவர் ஆலயத்தின் சுவரை ஆறு முழமாகவும், ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த சுற்றுசுவரின் அகலத்தை நான்குமுழமாகவும் அளந்தார்.
- Open Tamil Contemporary Version
- பின்பு அவன் ஆலயத்தின் சுவரை அளந்தான். அது ஆறுமுழ தடிப்பாயிருந்தது. ஆலயத்தைச் சுற்றியிருந்த பக்க அறைகள் ஒவ்வொன்றும் நான்கு முழ அகலமாயிருந்தன.
- Tamil Easy Reading Version
- பிறகு அம்மனிதன் ஆலயத்தின் சுவரை அளந்தான். அது 6 முழம் கனமாகயிருந்தது. ஆலயத்தைச் சுற்றிலும் பக்கத்து அறைகள் இருந்தன. இவை 4 முழம் (7’) அகலமுடையதாக இருந்தன.
Ezekiel 41:5 in English
- King James Version (KJV)
- After he measured the wall of the house, six cubits; and the breadth of [every] side chamber, four cubits, round about the house on every side.
- World English Bible (WEB)
- Then he measured the wall of the house, six cubits; and the width of every side room, four cubits, all around the house on every side.
- American Standard Version (ASV)
- Then he measured the wall of the house, six cubits; and the breadth of every side-chamber, four cubits, round about the house on every side.
- Bible in Basic English (BBE)
- Then he took the measure of the wall of the house, which was six cubits; and of the side-rooms round the house, which were four cubits wide.
- Darby Translation (DBY)
- And he measured the wall of the house, six cubits; and the breadth of the side-chambers, four cubits, round about the house on every side.
- Webster's Bible (WBS)
- Afterward he measured the wall of the house, six cubits; and the breadth of [every] side-chamber, four cubits, round the house on every side.
- Young's Literal Translation (YLT)
- And he measureth the wall of the house six cubits, and the breadth of the side-chamber four cubits, all round the house round about.
Read in context
- 3பின்பு அவர் உள்ளே போய், வாசல் நடையின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறு முழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார்.
- 4பின்பு அவர் தேவாலயத்தின் முன்புறத்திலே அதின் நீளத்தை இருபது முழமாகவும், அதின் அகலத்தை இருபது முழமாகவும் அளந்து, என்னை நோக்கி: இது மகா பரிசுத்த ஸ்தலம் என்றார்.
- 5பின்பு அவர் ஆலயத்தின் சுவரை ஆறு முழமாகவும், ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த சுற்றுக்கட்டினுடைய அகலத்தை நாலுமுழமாகவும் அளந்தார்.
- 6இந்தச் சுற்றுக்கட்டுகள் பக்கக்கட்டின்மேல் பக்கக்கட்டான வரிசைகளாய் முப்பத்துமூன்று இருந்தது; அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் ஊன்றியிராமல், சுற்றுக்கட்டுகளுக்கா கச்சுற்றிலும் அவைகள் ஊன்றும் படிக்கு ஆலயத்துக்கு அடுத்திருந்த ஒட்டுச்சுவரிலேபாய்ந்திருந்தது.
- 7உயர உயரச் சுற்றிலும் சுற்றுக்கட்டுகளுக்கு அகலம் அதிகமாயிருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாயிருந்தது; ஆதலால் இவ்விதமாய்க் கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாய் மேல்நிலைக்கு ஏறும் வழியிருந்தது.
Cross references
- Ezekiel 41:6–9 எசேக்கியேல் 41:6–9இந்தச் சுற்றுக்கட்டுகள் பக்கக்கட்டின்மேல் பக்கக்கட்டான வரிசைகளாய் முப்பத்துமூன்று இருந்தது; அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் ஊன்றியிராமல், சுற்றுக்கட்டுகளுக்கா கச்சுற்றிலும் அவைகள் ஊன்றும் படிக்கு ஆலயத்துக்கு அடுத்திருந்த ஒட்டுச்சுவரிலேபாய்ந்திருந்தது. உயர உயரச் சுற்றிலும் சுற்றுக்கட்டுகளுக்கு அகலம் அதிகமாயிருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாயிருந்தது; ஆதலால் இவ்விதமாய்க் கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாய் மேல்நிலைக்கு ஏறும் வழியிருந்தது. மாளிகைக்குச் சுற்றிலும் இருந்த உயரத்தையும் பார்த்தேன், சுற்றுக்கட்டுகளின் அஸ்திபாரங்கள் ஆறு பெரிய முழங்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாயிருந்தது. புறம்பே சுற்றுக்கட்டுக்கு இருந்த சுவரின் அகலம் ஐந்துமுழமாயிருந்தது; ஆலயத்துக்கு இருக்கும் சுற்றுக்கட்டுகளின் மாளிகையிலே வெறுமையாய் விட்டிருந்த இடங்களும் அப்படியே இருந்தது.
- Ezekiel 42:3–14 எசேக்கியேல் 42:3–14உட்பிராகாரத்தில் இருந்த இருபது முழத்துக்கு எதிராகவும் வெளிப்பிராகாரத்தில் இருந்த தளவரிசைக்கு எதிராகவும் ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளுள்ள நடைகாவணங்கள் இருந்தது. உட்புறத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது. உயர இருந்த அறைவீடுகள் அகலக்கட்டையாயிருந்தது; நடைகாவணங்கள் கீழேயிருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவேயிருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாயிருந்தது. அவைகள் மூன்று அடுக்குகளாயிருந்தது; பிராகாரங்களின் தூண்களுக்கு இருந்ததுபோல, அவைகளுக்குத் தூண்களில்லை; ஆகையால் தரையிலிருந்து அளக்க, அவைகள் கீழேயும் நடுவேயும் இருக்கிறவைகளைப்பார்க்கிலும் அகலக்கட்டையாயிருந்தது. புறம்பே அறைவீடுகளுக்கு எதிரேவெளிப்பிராகாரத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம். வெளிப்பிராகாரத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்துக்கு முன்னே நூறு முழமாயிருந்தது. கிழக்கே வெளிப்பிராகாரத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் பிரவேசிக்கிற நடை அவைகளின் கீழே இருந்தது. கீழ்த்திசையான பிராகாரத்து மதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது. அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும், எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாயிருந்தது. தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது; கீழ்த்திசையில் அவைகளுக்குப் பிரவேசிக்கும் இடத்திலே செம்மையான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசலிருந்தது. அவர் என்னை நோக்கி: பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருக்கிற வடபுறமான அறைவீடுகளும், தென்புறமான அறைவீடுகளும், பரிசுத்த அறைவீடுகளாயிருக்கிறது; கர்த்தரிடத்தில் சேருகிற ஆசாரியர் அங்கே மகா பரிசுத்தமானதையும், போஜனபலியையும், பாவநிவாரண பலியையும், குற்றநிவாரண பலியையும் வைப்பார்கள்; அந்த ஸ்தலம் பரிசுத்தமாயிருக்கிறது. ஆசாரியர் உட்பிரவேசிக்கும் போது, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளிப்பிராகாரத்துக்கு வராததற்கு முன்னே, அங்கே தாங்கள் ஆராதனை செய்து, உடுத்தியிருந்த வஸ்திரங்களைக் கழற்றிவைப்பார்கள்; அவ்வஸ்திரங்கள் பரிசுத்தமானவைகள்; வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, ஜனத்தின் பிராகாரத்திலேபோவார்கள் என்றார்.
- 1 Kings 6:5–6 1 இராஜாக்கள் 6:5–6அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி ஸ்தானச்சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுக்கட்டுகளைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான். கீழே இருக்கிற சுற்றுக்கட்டு ஐந்து முழ அகலமும், நடுவே இருக்கிறது ஆறு முழ அகலமும், மூன்றாவதாயிருக்கிறது ஏழுமுழ அகலமுமாயிருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய சுவர்களிலே தாங்காதபடிக்கு ஆலயத்தைச் சுற்றிலும் புறம்பே ஒட்டுச்சுவர்களைக் கட்டுவித்தான்.
Original words (Hebrew)
- measured · H4058מָדַד mâdad
- wall · H7023קִיר qîyr
- house · H1004בַּיִת bayith
- six · H8337שֵׁשׁ shêsh
- cubits · H520אַמָּה ʼammâh
- breadth · H7341רֹחַב rôchab
- chamber · H6763צֵלָע tsêlâʻ
- four · H702אַרְבַּע ʼarbaʻ
- cubits · H520אַמָּה ʼammâh
- about · H5439סָבִיב çâbîyb
- house · H1004בַּיִת bayith
- side · H5439סָבִיב çâbîyb
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.