Ezekiel 45:7 in Tamil
பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கும் நகரத்தின் காணியாட்சிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், பரிசுத்த படைப்புக்கு முன்பாகவும், நகரத்தின் காணிக்குமுன்பாகவும், அதிபதியினுடைய பங்கு மேற்கிலே மேற்புறமாகவும் கிழக்கிலேகீழ்ப்புறமாகவும் இருப்பதாக; அதின் நீளம் மேல் எல்லை துவக்கிக் கீழ் எல்லைமட்டும் பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் எதிராயிருக்கவேண்டும்.
Parisuththa pangaagap padaikkappattatharkum nagaraththin kaaniyaatchikkum inthappuraththilum anthappuraththilum, parisuththa padaippukku munpaagavum, nagaraththin kaanikkumunpaagavum, athibathiyinudaiya pangu maerkilae maerpuramaagavum kizhakkilaegeezhppuramaagavum iruppathaaga; athin neelam mael ellai thuvakkik keezh ellaimattum pangugalil ovvondrukkum ethiraayirukkavaendum.
Ezekiel 45:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கும் நகரத்தின் இடத்திற்கும் இந்தப்பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும், பரிசுத்தப் படைப்புக்கு முன்பாகவும், நகரத்தின் இடத்திற்கு முன்பாகவும், அதிபதியினுடைய பங்கு மேற்கிலே மேற்கு பக்கமாகவும் கிழக்கிலே கிழக்கு பக்கமாகவும் இருப்பதாக; அதின் நீளம் மேற்கு எல்லை துவக்கிக் கிழக்கு எல்லைவரை பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் எதிராக இருக்கவேண்டும்.
- Open Tamil Contemporary Version
- “ ‘ஒவ்வொரு புறத்திலும் பரிசுத்த பகுதியின் எல்லைகளையும் நகரத்துக்குரிய சொத்தின் எல்லையையும் கொண்டதாக அரசனுக்குரிய நிலம் அமைந்திருக்கும். அது மேற்குப்புறத்தில் மேற்குப்பக்கமாகவும், கிழக்குப்புறத்தில் கிழக்குப்பக்கமாகவும் அகன்றிருக்கும். மேற்கிலிருந்து கிழக்கு எல்லைவரையுள்ள பகுதி நீளமாய்போய் ஒரு கோத்திரப் பங்குக்கு எதிராயிருக்கவேண்டும்.
- Tamil Easy Reading Version
- அதிபதி பரிசுத்தமான பகுதியின் இருபக்கங்களிலுள்ள நிலத்தையும் நகரத்திற்குச் சொந்தமான நிலத்தையும் பெறுவான். இது பரிசுத்தமான பகுதிக்கும் நகரப்பகுதிக்கும் இடையில் இருக்கும். இது வம்சத்தாருக்குரிய பகுதியின் பரப்பைப் போன்ற அளவுடையதாக இருக்க வேண்டும். இதன் நீளம் மேல் எல்லை தொடங்கி கீழ் எல்லை மட்டும் இருக்கும்.
Ezekiel 45:7 in English
- King James Version (KJV)
- And a [portion shall be] for the prince on the one side and on the other side of the oblation of the holy [portion], and of the possession of the city, before the oblation of the holy [portion], and before the possession of the city, from the west side westward, and from the east side eastward: and the length [shall be] over against one of the portions, from the west border unto the east border.
- World English Bible (WEB)
- “‘“What is for the prince shall be on the one side and on the other side of the holy allotment and of the possession of the city, in front of the holy allotment and in front of the possession of the city, on the west side westward, and on the east side eastward, and in length corresponding to one of the portions, from the west border to the east border.
- American Standard Version (ASV)
- And [whatsoever is] for the prince [shall be] on the one side and on the other side of the holy oblation and of the possession of the city, in front of the holy oblation and in front of the possession of the city, on the west side westward, and on the east side eastward; and in length answerable unto one of the portions, from the west border unto the east border.
- Bible in Basic English (BBE)
- And for the ruler there is to be a part on one side and on the other side of the holy offering and of the property of the town, in front of the holy offering and in front of the property of the town on the west of it and on the east: measured in the same line as one of the parts of the land, from its limit on the west to its limit on the east of the land.
- Darby Translation (DBY)
- And the prince shall have [his portion] on the one side and on the other side of the holy heave-offering and of the possession of the city, over against the holy heave-offering, and over against the possession of the city, from the west side westward, and from the east side eastward; and in length answering to one of the portions [of the tribes] from the west border unto the east border.
- Webster's Bible (WBS)
- And [a portion shall be] for the prince on the one side and on the other side of the oblation of the holy [portion] , and of the possession of the city, before the oblation of the holy [portion] , and before the possession of the city, from the west side westward, and from the east side eastward: and the length [shall be] over against one of the portions, from the west border to the east border.
- Young's Literal Translation (YLT)
- As to the prince, on this side, and on that side, of the heave-offering of the holy place, and of the possession of the city, at the front of the heave-offering of the holy place, and at the front of the possession of the city, from the west corner westward, and from the east corner eastward — and the length [is] over-against one of the portions from the west border unto the east border —
Read in context
- 5பின்னும் இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமான இடம் ஆலயத்தின் பணிவிடைக்காரராகிய லேவியருடையதாயிருக்கும்; அது அவர்களுடைய காணியாட்சி; அதில் இருபது அறைவீடுகள் இருக்கவேண்டும்.
- 6பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கு எதிரே நகரத்தின் காணியாட்சியாக ஐயாயிரங்கோல் அகலத்தையும் இருபத்தையாயிரங்கோல்நீளத்தையும் அளந்து கொடுப்பீர்களாக; அது இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் சொந்தமாயிருக்கும்.
- 7பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கும் நகரத்தின் காணியாட்சிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், பரிசுத்த படைப்புக்கு முன்பாகவும், நகரத்தின் காணிக்குமுன்பாகவும், அதிபதியினுடைய பங்கு மேற்கிலே மேற்புறமாகவும் கிழக்கிலேகீழ்ப்புறமாகவும் இருப்பதாக; அதின் நீளம் மேல் எல்லை துவக்கிக் கீழ் எல்லைமட்டும் பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் எதிராயிருக்கவேண்டும்.
- 8இது அவனுக்கு இஸ்ரவேலிலேகாணிபூமியாக இருக்கக்கடவது; என் அதிபதிகள் இனி என் ஜனத்தை ஒடுக்காமல் தேசத்தை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு அவர்களுடைய கோத்திரங்களுக்குத்தக்கதாக விட்டுவிடுவார்களாக.
- 9கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலின் அதிபதிகளே, நீங்கள் செய்தது போதும்; நீங்கள் கொடுமையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்; உங்கள் உத்தண்டங்களை என் ஜனத்தைவிட்டு அகற்றுங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
Cross references
- Ezekiel 48:21 எசேக்கியேல் 48:21பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கும்நகரத்தின் காணிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், அர்ப்பிதநிலத்தினுடைய இருபத்தையாயிரங்கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைமட்டுக்கும், மேற்கிலே இருபத்தையாயிரங்கோலின் முன்பாக மேற்கு எல்லைமட்டுக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரான அது அதிபதியினுடையதாயிருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பிதநிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும்.
- Ezekiel 34:24 எசேக்கியேல் 34:24கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்.
- Ezekiel 37:24 எசேக்கியேல் 37:24என் தாசனாகிய தாவீது என்பவர் அவர்கள்மேல் ராஜாவாக இருப்பார்; அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பர் இருப்பார்; அப்பொழுது அவர்கள் என் நியாயங்களில் நடந்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து,
- Ezekiel 46:16–18 எசேக்கியேல் 46:16–18கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அதிபதி தன் குமாரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவன் குமாரருடையதாயிருக்கும்; அது சுதந்தரவீதமாய் அவர்களுக்குச் சொந்தமாகும். அவன் தன் ஊழியக்காரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தானேயாகில், அது விடுதலையின் வருஷமட்டும் அவனுடையதாயிருந்து, பின்பு, திரும்ப அதிபதியின் வசமாய்ச் சேரும்; அதின் சுதந்தரம் அவன் குமாரருக்கே உரியது, அது அவர்களுடையதாயிருக்கும். அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி, அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது; என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன்.
- Isaiah 9:5–6 ஏசாயா 9:5–6அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும். நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
- Luke 1:32–33 லூக்கா 1:32–33அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான்.
- Psalm 2:8–9 சங்கீதம் 2:8–9என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர்என்றுசொன்னார்.
Original words (Hebrew)
- prince · H5387נָשִׂיא nâsîyʼ
- oblation · H8641תְּרוּמָה tᵉrûwmâh
- holy · H6944קֹדֶשׁ qôdesh
- possession · H272אֲחֻזָּה ʼăchuzzâh
- city · H5892עִיר ʻîyr
- before · H6440פָּנִים pânîym
- oblation · H8641תְּרוּמָה tᵉrûwmâh
- holy · H6944קֹדֶשׁ qôdesh
- before · H6440פָּנִים pânîym
- possession · H272אֲחֻזָּה ʼăchuzzâh
- city · H5892עִיר ʻîyr
- west · H3220יָם yâm
- side · H6285פֵּאָה pêʼâh
- westward · H3220יָם yâm
- east · H6924קֶדֶם qedem
- side · H6285פֵּאָה pêʼâh
- eastward · H6921קָדִים qâdîym
- length · H753אֹרֶךְ ʼôrek
- against · H5980עֻמָּה ʻummâh
- one · H259אֶחָד ʼechâd
- portions · H2506חֵלֶק chêleq
- west · H3220יָם yâm
- border · H1366גְּבוּל gᵉbûwl
- east · H6921קָדִים qâdîym
- border · H1366גְּבוּל gᵉbûwl
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.