Ezekiel 48:19 in Tamil
இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து குறிக்கப்பட்ட சிலர் நகரத்திற்காகப் பணிவிடை செய்வார்கள்.
Isravaelin sagala koththirangalilumirunthu kurikkappatta silar nagaraththirkaagap panividai seyvaarkal.
Ezekiel 48:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களிலுமிருந்து குறிக்கப்பட்ட சிலர் நகரத்திற்காகப் பணிவிடை செய்வார்கள்.
- Open Tamil Contemporary Version
- நகரில் இருந்து அங்கு விவசாயம் செய்யவரும் தொழிலாளர், இஸ்ரயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமிருந்தும் வருவார்கள்.
- Tamil Easy Reading Version
- நகர வேலைக்காரர்களுக்காக இந்த நிலத்தை உழுவார்கள். அவர்கள் எல்லா கோத்திரங்களிலிருந்தும் இருப்பார்கள்.
Ezekiel 48:19 in English
- King James Version (KJV)
- And they that serve the city shall serve it out of all the tribes of Israel.
- World English Bible (WEB)
- Those who labor in the city, out of all the tribes of Israel, shall cultivate it.
- American Standard Version (ASV)
- And they that labor in the city, out of all the tribes of Israel, shall till it.
- Bible in Basic English (BBE)
- It will be farmed by workers of the town from all the tribes of Israel.
- Darby Translation (DBY)
- And they that serve the city shall serve it out of all the tribes of Israel.
- Webster's Bible (WBS)
- And they that serve the city shall serve it out of all the tribes of Israel.
- Young's Literal Translation (YLT)
- even [to] him who is serving the city, they serve it out of all the tribes of Israel.
Read in context
- 17நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாயிருப்பதாக.
- 18பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராக நீளத்தில் மீதியானது கிழக்கேபதினாயிரங்கோலும் மேற்கே பதினாயிரங்கோலுமாம்; அது பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராயிருக்கும்; அதின் வருமானம் நகரத்திற்காக ஊழியஞ்செய்கிறவர்களுக்கு ஆகாரமாயிருப்பதாக.
- 19இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து குறிக்கப்பட்ட சிலர் நகரத்திற்காகப் பணிவிடை செய்வார்கள்.
- 20அர்ப்பிதநிலமனைத்தும் இருபத்தையாயிரங்கோல் நீளமும், இருபத்தையாயிரங்கோல் அகலமுமாய் இருக்கக்கடவது; பட்டணத்தின் காணி உட்பட இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலம்சதுரமாய் இருக்கவேண்டும்.
- 21பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கும்நகரத்தின் காணிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், அர்ப்பிதநிலத்தினுடைய இருபத்தையாயிரங்கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைமட்டுக்கும், மேற்கிலே இருபத்தையாயிரங்கோலின் முன்பாக மேற்கு எல்லைமட்டுக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரான அது அதிபதியினுடையதாயிருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பிதநிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும்.
Cross references
- 1 Kings 4:7–23 1 இராஜாக்கள் 4:7–23ராஜாவுக்கும் அவன் அரமனைக்கும்வேண்டிய உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு மணியகாரர் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்துக்கு ஒவ்வொருவராக வருஷமுழுவதும் பராமரித்துவந்தார்கள். அவர்கள் நாமங்களாவன: ஊரின் குமாரன், இவன் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருந்தான். தேக்கேரின் குமாரன், இவன் மாக்காத்சிலும், சால்பீமிலும், பெத்ஷிமேசிலும், ஏலோன்பெத்தானானிலும் இருந்தான். ஏசேதின் குமாரன், இவன் அறுபோத்தில் இருந்தான்; சோகோவும் எப்பேர் சீமையனைத்தும் இவன் விசாரிப்பில் இருந்தது. அபினதாபின் குமாரன், இவன் தோரின் நாட்டுப்புறமனைத்திற்கும் விசாரிப்புக்காரனாயிருந்தான்; சாலொமோனின் குமாரத்தியாகிய தாபாத் இவனுக்கு மனைவியாயிருந்தாள். அகிலூதின் குமாரனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான் தொடங்கி ஆபேல் மெகொல்லாமட்டும்யக்மெயாமுக்கு அப்புறத்துமட்டும் இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது. கேபேரின் குமாரன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் குமாரனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கலத் தாழ்ப்பாள்களுமுள்ளபாசான்தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் சீமையும் இவன் விசாரிப்பில் இருந்தது. இத்தோவின் குமாரன் அகினதாப், இவன் மக்னாயீமில் இருந்தான். அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான். ஊசாயின் குமாரன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான். பருவாவின் குமாரன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான். ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான். ஊரியின் குமாரன் கேபேர், இவன் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத்தேசத்தில் இருந்தான்; இவன்மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாய் இருந்தான். யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். நதிதொடங்கி, பெலிஸ்தர் தேசவழியாய் எகிப்தின் எல்லைமட்டும் இருக்கிற சகல ராஜ்யங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனைச் சேவித்தார்கள். நாள் ஒன்றிற்குச் சாலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும், கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுக்கப்பட்டபத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாம்.
- Ezekiel 45:6 எசேக்கியேல் 45:6பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கு எதிரே நகரத்தின் காணியாட்சியாக ஐயாயிரங்கோல் அகலத்தையும் இருபத்தையாயிரங்கோல்நீளத்தையும் அளந்து கொடுப்பீர்களாக; அது இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் சொந்தமாயிருக்கும்.
- Nehemiah 11:1–36 நெகேமியா 11:1–36ஜனத்தின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற ஜனங்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கப் பண்ண, சீட்டுகளைப் போட்டார்கள். ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்தமனுஷர்களையெல்லாம் ஜனங்கள் வாழ்த்தினார்கள். யூதாவின் பட்டணங்களில் இஸ்ரவேலரும், ஆசாரியரும், லேவியரும், நிதனீமியரும், சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரும், அவரவர் தங்கள் பட்டணங்களிலுள்ள தங்கள் காணிபூமியிலே குடியிருந்தார்கள்; எருசலேமிலே குடியிருந்த நாடுகளின் தலைவர் யாரென்றால்: எருசலேமிலே யூதா புத்திரரில் சிலரும், பென்யமீன் புத்திரரில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா புத்திரரிலே பேரேசின் புத்திரருக்குள் ஒருவனான மகலாலெயேலின் குமாரனாகிய செபதியாவின் குமாரன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்குக் குமாரனான உசியாவின் மகன் அத்தாயாவும், சீலோனின் குமாரன் சகரியாவுக்குக் குமாரனாகிய யோயாரிபுக்குக்குமாரனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் குமாரன் கொல்லோசே பெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே. எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் புத்திரரெல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள். பென்யமீன் புத்திரரில் யாரென்றால், சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேலுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் இதியேலுக்கும், இவன் எசாயாவுக்கும் குமாரனானவன். அவனுக்குப்பின் கப்பாய், சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுப்பேர். அவர்கள்மேல் விசாரிப்புக்காரனான சிக்ரியின் குமாரன் யோவேலும், பட்டணத்தின்மேல் இரண்டாவதுவிசாரிப்புக்காரனான செனுவாவின்குமாரன் யூதாவுமே. ஆசாரியர்களில் யோயாரிபின் குமாரன் யெதாயா, யாகின் என்பவர்களும், அகிதூபின் குமாரன் மெராயோத் துக்குப் பிறந்த சாதோக்கின் குமாரன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் விசாரணைக்கர்த்தனும், ஆலயத்திலே பணிவிடை செய்கிற அவர்கள் சகோதரராகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் குமாரன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் குமாரன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் குமாரன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும், பிதா வம்சத்தலைவராகிய அவனுடைய சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டுபேரும், இம்மேரின் குமாரன் மெசில்லேமோத்தின் மகனாகிய அகசாய்க்குப் பிறந்த அசரெயேலின் மகன் அமாசாயும், அவர்களுடைய சகோதரராகிய பராக்கிரமசாலிகள் நூற்று இருபத்தெட்டுப்பேருமே; இவர்கள்மேல் அகெதோலிமின் குமாரன் சப்தியேல் விசாரிப்புக்காரனாயிருந்தான். லேவியரிலே புன்னியின் குமாரன் அசபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் குமாரனான அசூபின் மகன் செமாயாவும், தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியரின் தலைவரிலே சபெதாயும், யோசபாத்தும், ஆசாபின் குமாரன் சப்தியின் குமாரனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவன் சகோதரரில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் குமாரன் காலாவின் மகனாகிய சமுவாவின் குமாரன் அப்தாவுமே. பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர் எல்லாரும் இருநூற்று எண் பத்துநாலுபேர். வாசல் காவலாளர் அக்கூபும், தல்மோனும், வாசல்களில் காவல்காக்கிற அவர்கள் சகோதரரும் நூற்று எழுபத்திரண்டுபேர். மற்ற இஸ்ரவேலரும், ஆசாரியரும், லேவியரும், யூதாவின் சகல பட்டணங்களிலும், அவரவர் தங்கள் சுதந்தரத்திலிருந்தார்கள். நிதனீமியர் ஓபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள். எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் மீகாவின் குமாரன் மத்தனியாவின் மகனாகிய அசபியாவுக்குப் பிறந்த பானியின் குமாரன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்துக்கு நிற்கிற பாடகராகிய ஆசாபின் குமாரரில் ஒருவன். பாடகராகிய அவர்களுக்காக அன்றாடகப்படி கொடுக்கப்படும்படி ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது. யூதாவின் குமாரனாகிய சேராக்கின் புத்திரரில் மெசெசாபெயேலின் குமாரன் பெத்தகியா ஜனத்தின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் சமுகத்தில் நின்றான். தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் புத்திரரில் சிலர் கிரியாத்அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும், யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும், ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும் அதின் கிராமங்களிலும், சிக்லாகிலும், மேகோனாகிலும் அதின் கிராமங்களிலும், என்ரிம்மோனிலும், சாரேயாகிலும், யர்மூத்திலும், சானோவாகிலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபா தொடங்கி இன்னோமின் பள்ளத்தாக்குமட்டும் குடியேறினார்கள். கேபாவின் ஊராராயிருந்தபென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும், ஆனதோத், நோப், அனனியா, ஆத்சோர், ராமா, கித்தாயிம், ஆதீத், செபோயிம், நெபலாத், லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள். லேவியரிலே சில வகுப்பார் யூதாவிலும், சிலர் பென்யமீனிலும் இருந்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.