Ezekiel 7:23 in Tamil
ஒரு சங்கிலியைப் பண்ணிவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது.
Oru sangiliyaip pannivai; thaesam niyaayaththeerppukkullaana iraththappazhigalaal nirainthirukkirathu; nagaram kodumaiyaal nirainthirukkirathu.
Ezekiel 7:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒரு சங்கிலியை செய்துவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது.
- Open Tamil Contemporary Version
- “ ‘நீ சங்கிலிகளை ஆயத்தப்படுத்திக்கொள். நாடு இரத்தம் சிந்துதலால் நிறைந்திருக்கிறது; நகரம் வன்செயலாலும் நிறைந்துள்ளது.
- Tamil Easy Reading Version
- “சிறைக் கைதிகளுக்காகச் சங்கிலிகளைச் செய்யுங்கள்! ஏனென்றால், மற்றவர்களைக் கொல்லுகிற ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள். நகரத்தின் ஒவ்வொரு இடத்திலும் வன்முறை நிகழும்.
Ezekiel 7:23 in English
- King James Version (KJV)
- Make a chain: for the land is full of bloody crimes, and the city is full of violence.
- World English Bible (WEB)
- “‘Make chains, for the land is full of bloody crimes, and the city is full of violence.
- American Standard Version (ASV)
- Make the chain; for the land is full of bloody crimes, and the city is full of violence.
- Bible in Basic English (BBE)
- Make the chain: for the land is full of crimes of blood, and the town is full of violent acts.
- Darby Translation (DBY)
- Make the chain; for the land is full of bloody crimes, and the city is full of violence.
- Webster's Bible (WBS)
- Make a chain: for the land is full of bloody crimes, and the city is full of violence.
- Young's Literal Translation (YLT)
- Make the chain; for the land Hath been full of bloody judgments, And the city hath been full of violence.
Read in context
- 21அதை அந்நியர் கையிலே கொள்ளையாகவும், பூமியில் துஷ்டர்களுக்குச்சூறையாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.
- 22என் முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவேன்; அதினால் என் அந்தரங்க ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்; பறிகாரர் அதற்குள் பிரவேசித்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.
- 23ஒரு சங்கிலியைப் பண்ணிவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது.
- 24ஆகையால் புறஜாதிகளின் துஷ்டர் களை வரப்பண்ணுவேன், அவர்கள் இவர்களுடைய வீடுகளைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பலவான்களின் பெருமையை ஒழியப்பண்ணுவேன், அவர்கள் பரிசுத்த ஸ்தலங்கள் பரிசுத்தக்குலைச்சலாகும்.
- 25சங்காரம் வருகிறது; அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் அது கிடையாது.
Cross references
- Jeremiah 27:2 எரேமியா 27:2கர்த்தர் என்னை நோக்கி: நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும் உண்டுபண்ணி, அவைகளை உன் கழுத்திலே பூட்டிக்கொண்டு,
- Ezekiel 9:9 எசேக்கியேல் 9:9அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய வம்சத்தாரின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்; கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.
- Ezekiel 11:6 எசேக்கியேல் 11:6இந்த நகரத்தில் நீங்கள் அநேகரைக் கொலைசெய்தீர்கள்; அதின் வீதிகளைக் கொலையுண்டவர்களால் நிரப்பினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 2 Kings 21:16 2 இராஜாக்கள் 21:16கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணின அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நாலு மூலைவரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாய், குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான்.
- Hosea 4:2 ஓசியா 4:2பொய்யாணையிட்டு, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்பண்ணி, மிஞ்சி மிஞ்சிப்போகிறார்கள்; இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகிறது.
- Nahum 3:10 நாகூம் 3:10ஆயினும் அவள் குடிவிலக்கப்பட்டுச் சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவள் குழந்தைகள் எல்லா வீதிகளின் முகனைகளிலும்மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள்பேரில் சீட்டுப்போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லாரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள்.
- Isaiah 1:15 ஏசாயா 1:15நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
- Ezekiel 22:27 எசேக்கியேல் 22:27அதின் நடுவில் இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள்; அநியாயமாய்ப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தஞ்சிந்துகிறார்கள்; ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள்.
- Jeremiah 2:34 எரேமியா 2:34உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.
- Ezekiel 22:13 எசேக்கியேல் 22:13இதோ, நீ அநியாயமாய்ச் சம்பாதித்த பொருளினிமித்தமும், உன் நடுவில் நீ சிந்தின இரத்தத்தினிமித்தமும் நான் கைகொட்டுகிறேன்.
- Micah 7:2 மீகா 7:2தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான்.
- Ezekiel 19:3–6 எசேக்கியேல் 19:3–6தன் குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது. புறஜாதிகளும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள். தாய்ச்சிங்கம் காத்திருந்து, தன் நம்பிக்கை அபத்தமாய்ப் போயிற்றென்று கண்டு, அது தன் குட்டிகளில் வேறொன்றை எடுத்து, அதைப் பாலசிங்கமாக வைத்தது. அது சிங்கங்களுக்குள்ளே சஞ்சரித்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.