Hebrews 9:5 in Tamil
அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைக்குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுதுசமயமில்லை.
Atharku maelae magimaiyulla kaerubeengal vaikkappattuk kirubaasanaththai nizhalittirunthana; ivaigalaikkuriththu vivaramaayppaesa ippozhuthusamayamillai.
Hebrews 9:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைப்பற்றி விளக்கிச்சொல்ல இப்பொழுது நேரமில்லை.
- Open Tamil Contemporary Version
- அந்த பெட்டகத்தின் மேலாக மகிமையின் கேரூபீன்கள் கிருபாசனத்தை நிழலிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இவை எல்லாவற்றையும், விரிவாய் சொல்ல இப்பொழுது இயலாது.
- Tamil Easy Reading Version
- அப்பெட்டியின் மேல் கிருபையாகிய இருக்கையை மறைத்தபடி தேவனுடைய விசேஷ தூதர்கள் இருந்தார்கள். (இப்பொழுது இவற்றைப் பற்றிய உண்மையான விபரங்களைச் சொல்லக் காலம் போதாது.)
Hebrews 9:5 in English
- King James Version (KJV)
- And over it the cherubims of glory shadowing the mercyseat; of which we can not now speak particularly.
- World English Bible (WEB)
- and above it cherubim of glory overshadowing the mercy seat, of which things we can’t speak now in detail.
- American Standard Version (ASV)
- and above it cherubim of glory overshadowing the mercy-seat; of which things we cannot now speak severally.
- Bible in Basic English (BBE)
- And over it were the winged ones of glory with their wings covering the mercy-seat; about which it is not possible now to say anything in detail.
- Darby Translation (DBY)
- and above over it the cherubim of glory shadowing the mercy-seat; concerning which it is not now [the time] to speak in detail.
- Webster's Bible (WBS)
- And over it the cherubim of glory shadowing the mercy-seat; of which we cannot now speak particularly.
- Young's Literal Translation (YLT)
- and over it cherubim of the glory, overshadowing the mercy-seat, concerning which we are not now to speak particularly.
Read in context
- 3இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது.
- 4அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
- 5அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைக்குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுதுசமயமில்லை.
- 6இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்குமுதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள்.
- 7இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.
Cross references
- Leviticus 16:2 லேவியராகமம் 16:2கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
- Numbers 7:89 எண்ணாகமம் 7:89மோசே தேவனோடே பேசும்படி ஆசரிப்புக்கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போது, தன்னோடே பேசுகிறவரின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்துண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடே பேசுவார்.
- Exodus 25:17–22 யாத்திராகமம் 25:17–22பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; அது இரண்டரை முழு நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது. பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக. ஒரு புறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய். அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக. கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில்வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக. அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்.
- 1 Kings 8:6–7 1 இராஜாக்கள் 8:6–7அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடையசெட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள். கேருபீன்கள் பெட்டியிருக்கும் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு செட்டைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.
- Psalm 80:1 சங்கீதம் 80:1இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும்.
- Psalm 99:1 சங்கீதம் 99:1கர்த்தர்ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார், பூமி அசைவதாக.
- Leviticus 16:13 லேவியராகமம் 16:13தான் சாகாதபடிக்குத் தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின் மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்.
- Hebrews 4:16 எபிரெயர் 4:16ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க்கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். அதிகாரம்
- Exodus 37:6–9 யாத்திராகமம் 37:6–9கிருபாசனத்தையும் பசும்பொன்னினால் பண்ணினான்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமானது. தகடாய் அடிக்கப்பட்ட பொன்னினால் இரண்டு கேருபீன்களையும் உண்டாக்கி, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலே, ஒருபுறத்து ஓரத்தில் ஒரு கேருபீனும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனுமாக அந்தக் கேருபீன்களைக் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏக வேலைப்பாடாகவே பண்ணினான். அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாயிருந்தது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக்கொண்டிருந்தது.
- 1 Samuel 4:4 1 சாமுவேல் 4:4அப்படியே கேருபீன்களின் மத்தியிலே வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவர, ஜனங்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியண்டையில் இருந்தார்கள்.
- 1 Chronicles 28:11 1 நாளாகமம் 28:11தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானமும் இருக்க வேண்டிய மாதிரியையும்,
- 1 Peter 1:12 1 பேதுரு 1:12தங்கள் நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்கத் தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- over · G5231ὑπεράνω hyperánō
- it · G846αὐτός autós
- cherubims · G5502χερουβίμ cheroubím
- glory · G1391δόξα dóxa
- shadowing · G2683κατασκιάζω kataskiázō
- mercyseat · G2435ἱλαστήριον hilastḗrion
- of · G4012περί perí
- which · G3739ὅς hós
- can · G2076ἐστί estí
- not · G3756οὐ ou
- now · G3568νῦν nŷn
- speak · G3004λέγω légō
- particularly · G3313μέρος méros
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.