Isaiah 23:7 in Tamil
பூர்வநாட்கள்முதல் நிலைபெற்றுக்களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? பரதேசம்போய்ச் சஞ்சரிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாய்க் கொண்டுபோம்.
Poorvanaadkalmuthal nilaibetrukkaligoornthiruntha ungal pattanam ithuthaanaa? parathaesamboys sanjsarikkiratharku aval kaalkalae avalaith thooramaayk kondubom.
Isaiah 23:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆரம்பநாட்கள்முதல் நிலைபெற்று களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? தூரதேசம்போய் வசிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாகக் கொண்டுபோகும்.
- Open Tamil Contemporary Version
- அந்தப் பழைய பட்டணம் இதுதானா? களியாட்டத்தில் ஈடுபட்ட உங்கள் பட்டணம் இதுவா? தூர நாடுகளில் குடியிருக்கும்படி, தன் மக்களை அனுப்பிய பட்டணம் இதுவா?
- Tamil Easy Reading Version
- கடந்த காலத்தில், தீரு நகரில் சந்தோஷமாக இருந்தீர்கள். அந்நகரம் துவக்க காலம் முதல் வளர்ந்து வந்தது. அந்நகர ஜனங்கள் தொலை தூரங்களுக்குப் பயணம் செய்து வாழ்ந்திருக்கின்றனர்.
Isaiah 23:7 in English
- King James Version (KJV)
- [Is] this your joyous [city], whose antiquity [is] of ancient days? her own feet shall carry her afar off to sojourn.
- World English Bible (WEB)
- Is this your joyous city, whose antiquity is of ancient days, whose feet carried her far away to travel?
- American Standard Version (ASV)
- Is this your joyous [city], whose antiquity is of ancient days, whose feet carried her afar off to sojourn?
- Bible in Basic English (BBE)
- Is this the town which was full of joy, whose start goes back to times long past, whose wanderings took her into far-off countries?
- Darby Translation (DBY)
- Is this your joyous [city], whose antiquity is of ancient days? Her feet shall carry her afar off to sojourn.
- Webster's Bible (WBS)
- [Is] this your joyous [city] , whose antiquity [is] of ancient days? her own feet shall carry her far off to sojourn.
- Young's Literal Translation (YLT)
- Is this your exulting one? From the days of old [is] her antiquity, Carry her do her own feet afar off to sojourn.
Read in context
- 5எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் நோய் உண்டானதுபோல, தீருவின் செய்தி கேட்கப்படுவதினாலும் நோய் உண்டாகும்.
- 6கரைதுறைக் குடிகளே, நீங்கள் தர்ஷீஸ்மட்டும் புறப்பட்டுப்போய் அலறுங்கள்.
- 7பூர்வநாட்கள்முதல் நிலைபெற்றுக்களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? பரதேசம்போய்ச் சஞ்சரிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாய்க் கொண்டுபோம்.
- 8கிரீடம் தரிப்பிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வர்த்தகர் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.
- 9சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்கவும், பூமியின் கனவான்கள் யாவரையும் கனஈனப்படுத்தவும், சேனைகளின் கர்த்தரே இதை யோசித்துத் தீர்மானித்தார்.
Cross references
- Isaiah 22:2 ஏசாயா 22:2சந்தடிகளால் நிறைந்து ஆரவாரம்பண்ணி, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலையுண்டவர்கள் பட்டயத்தால் கொலையுண்டதில்லை, யுத்தத்தில் செத்ததும் இல்லை.
- Ecclesiastes 10:7 பிரசங்கி 10:7வேலைக்காரர் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர் போல் தரையிலே நடக்கிறதையும் கண்டேன்.
- Isaiah 47:1–2 ஏசாயா 47:1–2பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ செருக்குக்காரியும் சுகசெல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை. ஏந்திரத்தை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; வெறுங்காலும் அம்மணத்தொடையுமாய் ஆறுகளைக் கடந்துபோ.
- Joshua 19:29 யோசுவா 19:29அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம்மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும்.
- Isaiah 32:13 ஏசாயா 32:13என் ஜனத்தினுடைய நிலத்திலும், களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.