Isaiah 50:1 in Tamil
கர்த்தர் சொல்லுகிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன் கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களினிமித்தம் நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களினிமித்தம் உங்கள் தாய் அனுப்பிவிடப்பட்டாள்.
Karththar sollugiraar: naan ungal thaayai anuppivittabothu, avalukkuk koduththa thallutharseettu engae? allathu enakkuk kadan koduththa evanukku ungalai naan vitruppottaen? itho, ungal akkiramangalinimiththam neengal virkappatteerkal; ungal paathagangalinimiththam ungal thaay anuppividappattaal.
Isaiah 50:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவா சொல்கிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன் கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களின்காரணமாக நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களின்காரணமாக உங்களுடைய தாய் அனுப்பிவிடப்பட்டாள்.
- Open Tamil Contemporary Version
- யெகோவா சொல்வது இதுவே: “உங்கள் தாயை நான் விவாகரத்துச் செய்து அனுப்பியபோது, அவளுக்குக் கொடுத்த விவாகரத்துச் சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன் கொடுத்தவர்களில் யாருக்காவது நான் உங்களை விற்றேனா? உங்கள் பாவங்களின் காரணமாகவே நீங்கள் விற்கப்பட்டீர்கள். உங்கள் மீறுதல்களின் காரணமாகவே உங்களுடைய தாயும் துரத்திவிடப்பட்டாள்.
- Tamil Easy Reading Version
- கர்த்தர் சொல்கிறார், “இஸ்ரவேல் ஜனங்களே! உனது தாயான எருசலேமை விவாகரத்து செய்தேன் என்று நீ சொல்கிறாய். ஆனால், அவளை நான் விவாகரத்து செய்தேன் என்பதை நிரூபிக்கும் பத்திரம் எங்கே உள்ளது? எனது பிள்ளைகளே, யாருக்காவது பணம் கடன்பட்டேனா? எனது கடனுக்காக உங்களை விற்றேனா? இல்லை. நீங்கள் விற்கப்பட்டீர்கள். ஏனென்றால், நீங்கள் கெட்டச் செயல்களைச் செய்தீர்கள். நான் உங்கள் தாயை (எருசலேம்) அனுப்பினேன். ஏனென்றால், நீங்கள் கெட்டச் செய்களைச் செய்தீர்கள்.
Isaiah 50:1 in English
- King James Version (KJV)
- Thus saith the LORD, Where [is] the bill of your mother’s divorcement, whom I have put away? or which of my creditors [is it] to whom I have sold you? Behold, for your iniquities have ye sold yourselves, and for your transgressions is your mother put away.
- World English Bible (WEB)
- The LORD says, “Where is the bill of your mother’s divorce, with which I have put her away? Or to which of my creditors have I sold you? Behold, you were sold for your iniquities, and your mother was put away for your transgressions.
- American Standard Version (ASV)
- Thus saith Jehovah, Where is the bill of your mother’s divorcement, wherewith I have put her away? or which of my creditors is it to whom I have sold you? Behold, for your iniquities were ye sold, and for your transgressions was your mother put away.
- Bible in Basic English (BBE)
- This is the word of the Lord: Where is the statement which I gave your mother when I put her away? or to which of my creditors have I given you for money? It was for your sins that you were given into the hands of others, and for your evil-doing was your mother put away.
- Darby Translation (DBY)
- Thus saith Jehovah: Where is the bill of your mother's divorce, whom I have put away? or which of my creditors is it to whom I have sold you? Behold, through your iniquities have ye sold yourselves, and for your transgressions is your mother put away.
- Webster's Bible (WBS)
- Thus saith the LORD, Where [is] the bill of your mother's divorcement, whom I have put away? or which of my creditors [is it] to whom I have sold you? Behold, for your iniquities have ye sold yourselves, and for your transgressions is your mother put away.
- Young's Literal Translation (YLT)
- Thus said Jehovah: 'Where [is] this — the bill of your mother's divorce, Whom I sent away? Or to which of My creditors have I sold you? Lo, for your iniquities ye have been sold, And for your transgressions Hath your mother been sent away.
Read in context
- 1கர்த்தர் சொல்லுகிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன் கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களினிமித்தம் நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களினிமித்தம் உங்கள் தாய் அனுப்பிவிடப்பட்டாள்.
- 2நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுஉத்தரவு கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கண்டிதத்தினாலே கடலைவற்றப்பண்ணி, நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாறுகின்றது.
- 3நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, இரட்டை அவைகளின் மூடுசீலையாக்குகிறேன்.
Cross references
- Deuteronomy 32:30 உபாகமம் 32:30அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?
- Jeremiah 3:8 எரேமியா 3:8சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பி விட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.
- Matthew 18:25 மத்தேயு 18:25கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக்கட்டளையிட்டான்.
- Nehemiah 5:5 நெகேமியா 5:5எங்கள் உடலும் எங்கள் சகோதரர் உடலும் சரி; எங்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ, நாங்கள் எங்கள் குமாரரையும் எங்கள் குமாரத்திகளையும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவேண்டியதாயிருக்கிறது; அப்படியே எங்கள் குமாரத்திகளில் சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்குநிர்வாகமில்லை; எங்கள் நிலங்களும் எங்கள் திராட்சத்தோட்டங்களும்வேறே மனிதர் கைவசமாயிற்று என்றார்கள்.
- 2 Kings 4:1 2 இராஜாக்கள் 4:1தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்துபோனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள்.
- Isaiah 52:3 ஏசாயா 52:3விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள்என்றுகர்த்தர் சொல்லுகிறார்.
- Hosea 2:2–4 ஓசியா 2:2–4உங்கள் தாயோடே வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குப் புருஷனுமல்ல; அவள் தன் வேசித்தனங்களைத் தன் முகத்தினின்றும், தன் விபசாரங்களைத் தன் ஸ்தனங்களின்நடுவினின்றும் விலக்கிப்போடக்கடவள். இல்லாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக உரிந்து, அவள் பிறந்தநாளில் இருந்தவண்ணமாக அவளை நிறுத்தி, அவளை அந்தரவெளியைப்போலாக்கி, அவளை வறண்டபூமியைப்போல் விட்டு, அவளைத் தாகத்தால் சாகப்பண்ணுவேன்; அவளுடைய பிள்ளைகள் சோரப்பிள்ளைகளாகையால் அவர்களுக்கு இரங்காதிருப்பேன்.
- Deuteronomy 24:1–4 உபாகமம் 24:1–4ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம் பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம். அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம். அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம்பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்துபோனாலும், அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தின புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக.
- Isaiah 59:1–2 ஏசாயா 59:1–2இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
- Psalm 44:12 சங்கீதம் 44:12நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே.
- 2 Kings 17:17 2 இராஜாக்கள் 17:17அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி, குறிகேட்டு நிமித்தங்கள்பார்த்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள்.
- Jeremiah 3:1 எரேமியா 3:1ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய், அந்நியபுருஷனுக்குமனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப்போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ? என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Original words (Hebrew)
- saith · H559אָמַר ʼâmar
- bill · H5612סֵפֶר çêpher
- mother’s · H517אֵם ʼêm
- divorcement · H3748כְּרִיתוּת kᵉrîythûwth
- away · H7971שָׁלַח shâlach
- creditors · H5383נָשָׁה nâshâh
- sold · H4376מָכַר mâkar
- iniquities · H5771עָוֺן ʻâvôn
- sold · H4376מָכַר mâkar
- transgressions · H6588פֶּשַׁע peshaʻ
- mother · H517אֵם ʼêm
- away · H7971שָׁלַח shâlach
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.