Isaiah 59:10 in Tamil
நாங்கள் குருடரைப்போல் சுவரைப் பிடித்து, கண்ணில்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழிடங்களில் இருக்கிறோம்.
Naangal kurudaraippol suvaraip pidiththu, kannillaathavarkalaippol thadavugirom; iravil idarugirathubolap pattappagalilum idarugirom; seththavarkalaippol paazhidangalil irukkirom.
Isaiah 59:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நாங்கள் குருடரைபோல் சுவரைப்பிடித்து, கண் இல்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழான இடங்களில் இருக்கிறோம்.
- Open Tamil Contemporary Version
- நாங்கள் குருடர்களைப்போல் சுவரைப் பிடித்து, தடவித் திரிகிறோம்; கண்கள் இல்லாதவர்களைப்போல் எங்கள் வழியில் தடுமாறுகிறோம். மங்கிய மாலைப் பொழுதில் இடறுகிறதுபோல நடுப்பகலில் இடறுகிறோம்; பெலனுள்ளவர்கள் மத்தியில் மரித்தவரைப்போல் இருக்கிறோம்.
- Tamil Easy Reading Version
- கண்கள் இல்லாத ஜனங்களைப் போன்றிருக்கிறோம். நாம் குருடர்களைப்போன்று சுவர்களில் மோதுகிறோம். இருட்டில் இருப்பதுபோல இடறிக் கீழே விழுகிறோம். பகலிலும்கூட நம்மால் பார்க்க முடிவதில்லை. மத்தியான வேளையில் நாம் மரித்தவர்களைப்போன்று விழுகிறோம்.
Isaiah 59:10 in English
- King James Version (KJV)
- We grope for the wall like the blind, and we grope as if [we had] no eyes: we stumble at noonday as in the night; [we are] in desolate places as dead [men].
- World English Bible (WEB)
- We grope for the wall like the blind. Yes, we grope as those who have no eyes. We stumble at noon as if it were twilight. Among those who are strong, we are like dead men.
- American Standard Version (ASV)
- We grope for the wall like the blind; yea, we grope as they that have no eyes: we stumble at noonday as in the twilight; among them that are lusty we are as dead men.
- Bible in Basic English (BBE)
- We go on our way, like blind men feeling for the wall, even like those who have no eyes: we are running against things in daylight as if it was evening; our place is in the dark like dead men.
- Darby Translation (DBY)
- We grope for the wall like the blind, and we grope as if we had no eyes: we stumble at midday as in the twilight; amongst the flourishing we are as the dead.
- Webster's Bible (WBS)
- We grope for the wall like the blind, and we grope as if [we had] no eyes: we stumble at noon day as in the night; [we are] in desolate places as dead [men] .
- Young's Literal Translation (YLT)
- We feel like the blind [for] the wall, Yea, as without eyes we feel, We have stumbled at noon as at twilight, In desolate places as the dead.
Read in context
- 8சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத்தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான்.
- 9ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்துக்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்துக்குக் காத்திருந்தோம், ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம்.
- 10நாங்கள் குருடரைப்போல் சுவரைப் பிடித்து, கண்ணில்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழிடங்களில் இருக்கிறோம்.
- 11நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று.
- 12எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுகிறது; எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம்.
Cross references
- Deuteronomy 28:29 உபாகமம் 28:29குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோம்; உதவிசெய்வாரில்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாய் இருப்பாய்.
- Job 5:14 யோபு 5:14அவர்கள் பகற்காலத்திலே அந்தகாரத்துக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோலத்தடவித் திரிகிறார்கள்.
- Lamentations 3:6 புலம்பல் 3:6பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார்.
- John 12:35 யோவான் 12:35அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.
- John 12:40 யோவான் 12:40அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான்.
- Isaiah 8:15 ஏசாயா 8:15அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள்.
- Lamentations 4:14 புலம்பல் 4:14குருடர்போல வீதிகளில் அலைந்து, ஒருவரும் அவர்கள் வஸ்திரங்களைத் தொடக்கூடாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள்.
- John 11:9–10 யோவான் 11:9–10இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார்.
- Jeremiah 13:16 எரேமியா 13:16அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள்.
- 1 John 2:11 1 யோவான் 2:11தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.
- Proverbs 4:19 நீதிமொழிகள் 4:19துன்மார்க்கருடைய பாதையோகாரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.
- Amos 8:9 ஆமோஸ் 8:9அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி, பட்டப்பகலிலே தேசத்தை அந்தகாரப்படுத்தி,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.