Isaiah 64:12 in Tamil
கர்த்தாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாய் எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ?
Karththaavae, ivaigal ippadiyirunthum adakkikkondiruppeero? mavunamaayirunthu, athigamaay engalais sirumaippaduththuveero?
Isaiah 64:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெகோவாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாக எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ?
- Open Tamil Contemporary Version
- யெகோவாவே, இவற்றுக்குப் பின்னும் நீர் ஒன்றுமே செய்யாதிருப்பீரோ? நீர் மவுனமாயிருந்து அளவுக்கதிகமாக எங்களைத் தண்டிக்கப் போகிறீரோ?
- Tamil Easy Reading Version
- இவையனைத்தும் எப்பொழுதும் எங்களிடம் அன்பு காட்டுவதிலிருந்து உம்மை விலக்குமோ? நீர் தொடர்ந்து எதுவும் பேசாமல் இருப்பீரோ? நீர் என்றென்றும் எங்களைத் தண்டிப்பீரோ?
Isaiah 64:12 in English
- King James Version (KJV)
- Wilt thou refrain thyself for these [things], O LORD? wilt thou hold thy peace, and afflict us very sore?
- World English Bible (WEB)
- Will you hold yourself back for these things, LORD? Will you keep silent and punish us very severely?
- American Standard Version (ASV)
- Wilt thou refrain thyself for these things, O Jehovah? wilt thou hold thy peace, and afflict us very sore?
- Bible in Basic English (BBE)
- In view of all this, will you still do nothing, O Lord? will you keep quiet, and go on increasing our punishment?
- Darby Translation (DBY)
- Wilt thou restrain thyself in presence of these things, Jehovah? Wilt thou hold thy peace, and afflict us very sore?
- Webster's Bible (WBS)
- Wilt thou refrain thyself for these [things] , O LORD? wilt thou hold thy peace, and grievously afflict us?
- Young's Literal Translation (YLT)
- For these dost Thou refrain Thyself, Jehovah? Thou art silent, and dost afflict us very sore!'
Read in context
- 10உமது பரிசுத்த பட்டணங்கள் வனாந்தரமாயின; சீயோன் வனாந்தரமாயிற்று; எருசலேம் பாழாய்க்கிடக்கிறது.
- 11எங்கள் பிதாக்கள் உம்மைத் துதித்த பரிசுத்தமும் மகிமையுமான எங்களுடைய ஆலயம் அக்கினிக்கு இரையாகி, இன்பமான எங்களுடையஸ்தானங்களெல்லாம் பாழாயின.
- 12கர்த்தாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாய் எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ?
Cross references
- Isaiah 42:14 ஏசாயா 42:14நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.
- Psalm 74:10–11 சங்கீதம் 74:10–11தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ? உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும்.
- Psalm 74:18–19 சங்கீதம் 74:18–19கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும். உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடாதேயும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவாதேயும்.
- Zechariah 1:12 சகரியா 1:12அப்பொழுது கர்த்தருடைய தூதன் மறுமொழியாக: சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின் மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல,
- Psalm 83:1 சங்கீதம் 83:1தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும்.
- Psalm 79:5 சங்கீதம் 79:5எதுவரைக்கும் கர்த்தாவே! நீர் என்றைக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ?
- Psalm 10:1 சங்கீதம் 10:1கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில்நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
- Revelation 6:10 வெளிப்படுத்தின விசேஷம் 6:10அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
- Psalm 89:46–51 சங்கீதம் 89:46–51எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ? என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்கவேண்டியதென்ன? மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.) ஆண்டவரே, நீர் தாவீதுக்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின உமது பூர்வ கிருபைகள் எங்கே? ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம்பண்ணினவனின்காலடிகளையும் நிந்திக்கிறபடியினால், கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையானஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும்.
- Psalm 80:3–4 சங்கீதம் 80:3–4தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.