Isaiah 66:3 in Tamil
மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான்; இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.
Maattai vettugiravan manushanaik kollugiravanaagavum, aattaip paliyidugiravan naayaik kazhuththarukkiravanaagavum, kaanikkaiyaip padaikkiravan pandri iraththaththaip padaikkiravanaagavum, thoobangaattugiravan vikkiragaththai sthoththirikkiravanaagavum irukkiraan; ivarkal thangal vazhigalaiyae therinthugollugiraarkal; ivarkaludaiya aaththumaa thangal aruvaruppugalinmael viruppamaayirukkirathu.
Isaiah 66:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மாட்டை வெட்டுகிறவன் மனிதனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் சிலையை போற்றுகிறவனாகவும் இருக்கிறான்; இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.
- Open Tamil Contemporary Version
- காளையைப் பலியிடுகிறவர் மனிதனைக் கொல்லுகிறவராகவும், செம்மறியாட்டுக் குட்டியைப் பலியிடுகிறவர் நாயின் கழுத்தை முறிப்பவராகவும், தானியபலி செலுத்துகிறவர் பன்றியின் இரத்தத்தைப் படைப்பவராகவும், நினைவுப் படையலாகிய தூபங்காட்டுதலைச் செய்கிறவர் விக்கிரகத்தை வணங்குபவராகவும் இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் சொந்த வழிகளைத் தெரிந்துகொள்கிறார்கள், அவர்களுடைய ஆத்துமா அவர்களுடைய அருவருப்புகளில் மகிழ்ச்சியாயிருக்கின்றன.
- Tamil Easy Reading Version
- சில ஜனங்கள் காளைகளைப் பலியிடுகிறார்கள். ஆனால், அவர்கள் ஜனங்களையும் அடிக்கிறார்கள். அந்த ஜனங்கள் ஆடுகளைப் பலியாகக் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் நாய்களின் கழுத்துகளையும் உடைக்கிறார்கள். அவர்கள் பன்றியின் இரத்தத்தையும் எனக்கு பலியாகச் செலுத்துகிறார்கள். அந்த ஜனங்கள் நறுமணப் பொருட்களை எரிக்க நினைவுகொள்வார்கள். ஆனால், அவர்கள் தமது பயனற்ற விக்கிரகங்களை நேசிக்கிறார்கள். அவர்கள் எனது வழியை அல்ல. தங்கள் சொந்த வழியையே தேர்ந்து எடுப்பார்கள். அவர்கள் தங்களது பயங்கரமான விக்கிரகங்களை நேசிக்கிறார்கள்.
Isaiah 66:3 in English
- King James Version (KJV)
- He that killeth an ox [is as if] he slew a man; he that sacrificeth a lamb, [as if] he cut off a dog’s neck; he that offereth an oblation, [as if he offered] swine’s blood; he that burneth incense, [as if] he blessed an idol. Yea, they have chosen their own ways, and their soul delighteth in their abominations.
- World English Bible (WEB)
- He who kills an ox is as he who kills a man; he who sacrifices a lamb, as he who breaks a dog’s neck; he who offers an offering, as he who offers pig’s blood; he who burns frankincense, as he who blesses an idol. Yes, they have chosen their own ways, and their soul delights in their abominations.
- American Standard Version (ASV)
- He that killeth an ox is as he that slayeth a man; he that sacrificeth a lamb, as he that breaketh a dog’s neck; he that offereth an oblation, [as he that offereth] swine’s blood; he that burneth frankincense, as he that blesseth an idol. Yea, they have chosen their own ways, and their soul delighteth in their abominations:
- Bible in Basic English (BBE)
- He who puts an ox to death puts a man to death; he who makes an offering of a lamb puts a dog to death; he who makes a meal offering makes an offering of pig's blood; he who makes an offering of perfumes for a sign gives worship to an image: as they have gone after their desires, and their soul takes pleasure in their disgusting things;
- Darby Translation (DBY)
- He that slaughtereth an ox, smiteth a man; he that sacrificeth a lamb, breaketh a dog's neck; he that offereth an oblation, [it is as] swine's blood; he that presenteth a memorial of incense, [is as] he that blesseth an idol. As they have chosen their own ways, and their soul delighteth in their abominations,
- Webster's Bible (WBS)
- He that killeth an ox [is as if] he slew a man; he that sacrificeth a lamb, [as if] he cut off a dog's neck; he that offereth an oblation, [as if he offered] swine's blood; he that burneth incense, [as if] he blessed an idol. Yes, they have chosen their own ways, and their soul delighteth in their abominations.
- Young's Literal Translation (YLT)
- Whoso slaughtereth the ox smiteth a man, Whoso sacrificeth the lamb beheadeth a dog, Whoso is bringing up a present — The blood of a sow, Whoso is making mention of frankincense, Is blessing iniquity. Yea, they have fixed on their own ways, And in their abominations their soul hath delighted.
Read in context
- 1கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது?
- 2என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
- 3மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான்; இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.
- 4நான் கூப்பிட்டும் மறுஉத்தரவு கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.
- 5கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே; அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள்.
Cross references
- Proverbs 15:8 நீதிமொழிகள் 15:8துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
- Amos 5:21–22 ஆமோஸ் 5:21–22உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை. உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன்.
- Isaiah 1:11–15 ஏசாயா 1:11–15உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்குஎன்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை. நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்? இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச் சகிக்கமாட்டேன். உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன். நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது.
- Leviticus 2:2 லேவியராகமம் 2:2அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல்ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன்; அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.
- Isaiah 65:12 ஏசாயா 65:12உங்களை நான் பட்டயத்துக்கு எண்ணிக்கொடுப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைசெய்யப்படக் குனிவீர்கள்; நான் கூப்பிட்டும் நீங்கள் மறு உத்தரவு கொடுக்கவில்லை; நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லை; என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குப் பிரியமல்லாததைத் தெரிந்துகொண்டீர்கள்.
- Isaiah 66:17 ஏசாயா 66:17தங்களைத்தாங்களே பரிசுத்தப் படுத்திக் கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத்தாங்களே ஒருவர்பின் ஒருவராய்ச்சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Deuteronomy 23:18 உபாகமம் 23:18வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்.
- Deuteronomy 14:8 உபாகமம் 14:8பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத்தொடாமலும் இருப்பீர்களாக.
- Proverbs 21:27 நீதிமொழிகள் 21:27துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடேசெலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்.
- Isaiah 65:3–4 ஏசாயா 65:3–4அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி, பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து:
- Judges 10:14 நியாயாதிபதிகள் 10:14நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.
- Isaiah 57:17 ஏசாயா 57:17நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலேமாறுபாடாய் நடந்தார்களே.
Original words (Hebrew)
- killeth · H7819שָׁחַט shâchaṭ
- ox · H7794שׁוֹר shôwr
- slew · H5221נָכָה nâkâh
- man · H376אִישׁ ʼîysh
- sacrificeth · H2076זָבַח zâbach
- lamb · H7716שֶׂה seh
- off · H6202עָרַף ʻâraph
- dog’s · H3611כֶּלֶב keleb
- neck · H6202עָרַף ʻâraph
- offereth · H5927עָלָה ʻâlâh
- oblation · H4503מִנְחָה minchâh
- swine’s · H2386חֲזִיר chăzîyr
- blood · H1818דָּם dâm
- burneth · H2142זָכַר zâkar
- incense · H3828לְבוֹנָה lᵉbôwnâh
- blessed · H1288בָרַךְ bârak
- idol · H205אָוֶן ʼâven
- chosen · H977בָּחַר bâchar
- ways · H1870דֶּרֶךְ derek
- soul · H5315נֶפֶשׁ nephesh
- delighteth · H2654חָפֵץ châphêts
- abominations · H8251שִׁקּוּץ shiqqûwts
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.