Jeremiah 16:21 in Tamil
ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப் பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
Aathalaal, itho, ippozhuthu naan avarkalukkuth theriyappannuvaen; en karaththaiyum en pelaththaiyumae avarkalukkuth theriyap pannuvaen; en naamam yaegovaa endru arinthugolvaarkal.
Jeremiah 16:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆதலால் இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியவைப்பேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரிவிப்பேன்; என் பெயர் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
- Open Tamil Contemporary Version
- “ஆகையால் நான் அவர்களுக்குக் போதிப்பேன். இம்முறையோ என் வல்லமையையும், ஆற்றலையும் போதிப்பேன். அப்பொழுது என் பெயர் யெகோவா என்று அவர்கள் அறிந்துகொள்வார்கள்.
- Tamil Easy Reading Version
- கர்த்தர், “எனவே, விக்கிரகங்களை உருவாக்கும் அவர்களுக்கு நான் பாடம் கற்பிப்பேன். இப்போது நான் அவர்களுக்கு எனது அதிகாரம் மற்றும் பலம் பற்றி கற்பிப்பேன். பிறகு, அவர்கள் நானே தேவன் என்பதை அறிந்துகொள்வார்கள். நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிந்துக்கொள்வார்கள்” என்று கூறுகிறார்.
Jeremiah 16:21 in English
- King James Version (KJV)
- Therefore, behold, I will this once cause them to know, I will cause them to know mine hand and my might; and they shall know that my name [is] The LORD.
- World English Bible (WEB)
- “Therefore behold, I will cause them to know, this once I will cause them to know my hand and my might. Then they will know that my name is the LORD.”
- American Standard Version (ASV)
- Therefore, behold, I will cause them to know, this once will I cause them to know my hand and my might; and they shall know that my name is Jehovah.
- Bible in Basic English (BBE)
- For this reason, truly, I will make them see, this once I will give them knowledge of my hand and my power; and they will be certain that my name is the Lord.
- Darby Translation (DBY)
- Therefore, behold, I will this once cause them to know, I will cause them to know my hand and my might; and they shall know that my name is Jehovah.
- Webster's Bible (WBS)
- Therefore behold, I will this once cause them to know, I will cause them to know my hand and my might; and they shall know that my name [is] JEHOVAH.
- Young's Literal Translation (YLT)
- Therefore, lo, I am causing them to know at this time, I cause them to know My hand and My might, And they have known that My name [is] Jehovah!
Read in context
- 19என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புறஜாதிகள் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள்.
- 20மனுஷன் தனக்குத் தேவர்களை உண்டுபண்ணலாமோ? அவைகள் தேவர்கள் அல்லவே.
- 21ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப் பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
Cross references
- Psalm 9:16 சங்கீதம் 9:16கர்த்தர் தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.)
- Psalm 83:18 சங்கீதம் 83:18அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக. (கித்தீத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்)
- Jeremiah 33:2 எரேமியா 33:2இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்:
- Amos 5:8 ஆமோஸ் 5:8அவர் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரண இருளை விடியற்காலமாக மாற்றி, பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
- Isaiah 43:3 ஏசாயா 43:3நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன்.
- Exodus 15:3 யாத்திராகமம் 15:3கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
- Ezekiel 24:24 எசேக்கியேல் 24:24அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும் செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று உரைத்தார் என்றேன்.
- Ezekiel 24:27 எசேக்கியேல் 24:27அந்த நாளிலேதானே உன் வாய் திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனோடேபேசுவாய்; இனி மவுனமாயிருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.
- Ezekiel 6:7 எசேக்கியேல் 6:7கொலைசெய்யப்பட்டவர்கள் உங்கள் நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.
- Exodus 9:14–18 யாத்திராகமம் 9:14–18விடாதிருந்தால், பூமியெங்கும் என்னைப்போல வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர்மேலும் உன் ஜனங்கள்மேலும் அனுப்புவேன். நீ பூமியில் இராமல் நாசமாய்ப்போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன். என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும் படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன். நீ என் ஜனங்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாய் உன்னை உயர்த்துகிறாயா? எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம்பெய்யப்பண்ணுவேன்.
- Ezekiel 25:14 எசேக்கியேல் 25:14நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தின் கையினால் ஏதோமினிடத்தில் பழிவாங்குவேன்; அவர்கள் என் கோபத்தின்படியும் என் உக்கிரத்தின்படியும் ஏதோமுக்குச் செய்வார்கள்; அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
- Exodus 14:4 யாத்திராகமம் 14:4ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.