Jeremiah 16:19 in Tamil
என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புறஜாதிகள் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள்.
En pelanum, en kottaiyum, nerukkappadugira naalil en adaikkalamumaagiya karththaavae, purajaathigal poomiyin kadaiyaantharangalilirunthu ummidaththil vanthu: meyyaagavae, engal pithaakkal pirayojanamillaatha poyyaiyum maayaiyaiyum kaippatrinaarkal enpaarkal.
Jeremiah 16:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய யெகோவாவே, அந்நியமக்கள் பூமியின் கடைசிமுனைகளிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் முற்பிதாக்கள் பிரயோஜனமில்லாத வீணான விக்கிரங்களைக் கைப்பற்றினார்கள் என்பார்கள்.
- Open Tamil Contemporary Version
- யெகோவாவே, நீரே என் பெலன், என் கோட்டை, துன்ப நாளில் என் அடைக்கலம்; பூமியின் கடைசி எல்லைகளிலிருந்து பிறநாட்டினர் உம்மிடம் வருவார்கள். அவர்கள் வந்து, “எங்கள் முற்பிதாக்கள் போலியான பாரம்பரியங்களைத் தவிர வேறொன்றையும் வைத்திருக்கவில்லை. அவைகளோ பயனற்ற விக்கிரகங்கள், அவைகளால் அவர்களுக்கு எந்த நன்மையும் உண்டாகவில்லை.
- Tamil Easy Reading Version
- கர்த்தாவே, நீரே எனது பலமும் காவலும்! நீரே துன்பக்காலத்தில் நான் ஓடி வரத்தக்கப் பாதுகாப்பான இடம். உலகம் முழுவதிலுமிருந்து நாடுகள் உம்மிடம் வரும். அவர்கள், “எங்கள் தந்தையர்கள் அந்நிய தெய்வங்களை வைத்திருந்தனர். அவர்கள் அந்தப் பயனற்ற விக்கிரகங்களை தொழுதுகொண்டனர். ஆனால் அந்த விக்கிரகங்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் உதவவில்லை” என்பார்கள்.
Jeremiah 16:19 in English
- King James Version (KJV)
- O LORD, my strength, and my fortress, and my refuge in the day of affliction, the Gentiles shall come unto thee from the ends of the earth, and shall say, Surely our fathers have inherited lies, vanity, and [things] wherein [there is] no profit.
- World English Bible (WEB)
- LORD, my strength, my stronghold, and my refuge in the day of affliction, the nations will come to you from the ends of the earth, and will say, “Our fathers have inherited nothing but lies, vanity and things in which there is no profit.
- American Standard Version (ASV)
- O Jehovah, my strength, and my stronghold, and my refuge in the day of affliction, unto thee shall the nations come from the ends of the earth, and shall say, Our fathers have inherited nought but lies, [even] vanity and things wherein there is no profit.
- Bible in Basic English (BBE)
- O Lord, my strength and my strong tower, my safe place in the day of trouble, the nations will come to you from the ends of the earth, and say, The heritage of our fathers is nothing but deceit, even false things in which there is no profit.
- Darby Translation (DBY)
- Jehovah, my strength and my fortress, and my refuge in the day of distress, unto thee shall the nations come from the ends of the earth, and they shall say, Surely our fathers have inherited falsehood [and] vanity; and in these things there is no profit.
- Webster's Bible (WBS)
- O LORD, my strength and my fortress, and my refuge in the day of affliction, the Gentiles shall come to thee from the ends of the earth, and shall say, Surely our fathers have inherited lies, vanity, and [things] in which [there is] no profit.
- Young's Literal Translation (YLT)
- O Jehovah, my strength, and my fortress, And my refuge in a day of adversity, Unto Thee nations do come from the ends of earth, And say, Only falsehood did our fathers inherit, Vanity, and none among them is profitable.
Read in context
- 17என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை; அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை.
- 18முதலாவது நான் அவர்களுடைய அக்கிரமத்துக்கும், அவர்களுடையபாவத்துக்கும் இரட்டிப்பாய் நீதியைச் சரிக்கட்டுவேன்; அவர்கள் என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தைச் சீயென்று அருவருக்கப்படத்தக்க தங்கள் காரியங்களின் நாற்றமான விக்கிரகங்களினாலே நிரப்பினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 19என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புறஜாதிகள் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள்.
- 20மனுஷன் தனக்குத் தேவர்களை உண்டுபண்ணலாமோ? அவைகள் தேவர்கள் அல்லவே.
- 21ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப் பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.
Cross references
- Isaiah 25:4 ஏசாயா 25:4கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்.
- Nahum 1:7 நாகூம் 1:7கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார்.
- Isaiah 2:2–3 ஏசாயா 2:2–3கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
- Jeremiah 17:17 எரேமியா 17:17நீர் எனக்குப் பயங்கரமாயிராதேயும்; தீங்குநாளில் நீரே என் அடைக்கலம்.
- Jeremiah 10:14–15 எரேமியா 10:14–15மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை. அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.
- Psalm 91:1–2 சங்கீதம் 91:1–2உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
- Micah 4:1–2 மீகா 4:1–2ஆனாலும் கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதனிடத்திற்கு ஓடிவருவார்கள். திரளான ஜாதிகள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.
- Psalm 86:9 சங்கீதம் 86:9ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.
- Isaiah 44:10 ஏசாயா 44:10ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்?
- Jeremiah 2:11 எரேமியா 2:11எந்த ஜாதியாவது தேவர்களல்லாததங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.
- Psalm 18:1–2 சங்கீதம் 18:1–2என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
- Jeremiah 10:5 எரேமியா 10:5அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக்கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
Original words (Hebrew)
- strength · H5797עֹז ʻôz
- fortress · H4581מָעוֹז mâʻôwz
- refuge · H4498מָנוֹס mânôwç
- day · H3117יוֹם yôwm
- affliction · H6869צָרָה tsârâh
- Gentiles · H1471גּוֹי gôwy
- come · H935בּוֹא bôwʼ
- ends · H657אֶפֶס ʼepheç
- earth · H776אֶרֶץ ʼerets
- say · H559אָמַר ʼâmar
- fathers · H1אָב ʼâb
- inherited · H5157נָחַל nâchal
- lies · H8267שֶׁקֶר sheqer
- vanity · H1892הֶבֶל hebel
- profit · H3276יַעַל yaʻal
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.