Jeremiah 22:13 in Tamil
தனக்கு விஸ்தாரமான வீட்டையும், காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவேனென்று சொல்லி, பலகணிகளைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, ஜாதிலிங்கவருணம் பூசி,
Thanakku visthaaramaana veettaiyum, kaatru veesum visaalamaana maelaraigalaiyum kattuvaenendru solli, palaganigalaith thanakkuth thiranthu, kaethuru palagaigalai vaiththu, jaathilingavarunam poosi,
Jeremiah 22:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தனக்கு விசாலமான வீட்டையும், காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவேனென்று சொல்லி, ஜன்னல்களைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, தெளிவான சிவப்பு வண்ணம் பூசி,
- Open Tamil Contemporary Version
- “அநியாயத்தினால் தன் அரண்மனையையும், அநீதியினால் தன் மேலறையையும் கட்டுகிறவனுக்கு ஐயோ கேடு! அவன் தன் நாட்டு மனிதரின் உழைப்புக்குக் கூலிகொடாமல் வேலை வாங்குகிறான்.
- Tamil Easy Reading Version
- யோயாக்கீம் அரசனுக்கு இது மிகவும் தீயதாக இருக்கும். அவன் தீயவற்றைச் செய்துகொண்டிருக்கிறான். எனவே, அவனால் அவனது அரண்மனையைக் கட்ட முடியும். அவன் ஜனங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறான். எனவே, அவனால் மேல்மாடியில் அறைகளைக் கட்டமுடியும். அவன் தனது சொந்த ஜனங்களை வீணாக வேலை செய்ய வைப்பான். அவன் அவர்களது வேலைக்குச் சம்பளம் தரமாட்டான்.
Jeremiah 22:13 in English
- King James Version (KJV)
- Woe unto him that buildeth his house by unrighteousness, and his chambers by wrong; [that] useth his neighbour’s service without wages, and giveth him not for his work;
- World English Bible (WEB)
- “Woe to him who builds his house by unrighteousness, and his rooms by injustice; who uses his neighbor’s service without wages, and doesn’t give him his hire;
- American Standard Version (ASV)
- Woe unto him that buildeth his house by unrighteousness, and his chambers by injustice; that useth his neighbor’s service without wages, and giveth him not his hire;
- Bible in Basic English (BBE)
- A curse is on him who is building his house by wrongdoing, and his rooms by doing what is not right; who makes use of his neighbour without payment, and gives him nothing for his work;
- Darby Translation (DBY)
- Woe unto him that buildeth his house by unrighteousness, and his upper chambers by injustice; that taketh his neighbour's service without wages, and giveth him not his earning;
- Webster's Bible (WBS)
- Woe to him that buildeth his house by unrighteousness, and his chambers by wrong; [that] useth his neighbor's service without wages, and giveth him not for his work;
- Young's Literal Translation (YLT)
- Woe to him who is building his house by unrighteousness, And his upper chambers by injustice, On his neighbour he layeth service for nought, And his wage he doth not give to him.
Read in context
- 11தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின்குமாரனாகிய சல்லூமைக்குறித்து: அவன் இனி இங்கே திரும்ப வராமல்,
- 12தான் கொண்டுபோகப்பட்ட ஸ்தலத்திலே மரிப்பான்; இந்தத் தேசத்தை அவன் இனிக் காண்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 13தனக்கு விஸ்தாரமான வீட்டையும், காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவேனென்று சொல்லி, பலகணிகளைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, ஜாதிலிங்கவருணம் பூசி,
- 14அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினாலே தன் மேலறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்குக் கூலிகொடாமல், அவனைச் சும்மா வேலைகொள்ளுகிறவனுக்கு ஐயோ!
- 15நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜாவாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாயமும் நீதியுஞ்செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ?
Cross references
- James 5:4 யாக்கோபு 5:4இதோ, உங்கள் வயல்களை அறுத்தவேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது.
- Leviticus 19:13 லேவியராகமம் 19:13பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.
- Micah 3:10 மீகா 3:10சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுவிக்கிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள்.
- Deuteronomy 24:14–15 உபாகமம் 24:14–15உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக. அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும்.
- Malachi 3:5 மல்கியா 3:5நான் நியாயத்தீர்ப்புச் செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபச்சாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
- Habakkuk 2:9–11 ஆபகூக் 2:9–11தீமையின் வல்லமைக்குத் தப்ப வேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ! அநேக ஜனங்களை வெட்டிப்போட்டதினால் உன் வீட்டுக்கு வெட்கமுண்டாக ஆலோசனைபண்ணினாய்; உன் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தாய். கல்லு சுவரிலிருந்து கூப்பிடும், உத்திரம் மச்சிலிருந்து சாட்சியிடும்.
- 2 Chronicles 36:4 2 நாளாகமம் 36:4அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின் மேலும் ராஜாவாக்கி, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான்.
- Jeremiah 22:18 எரேமியா 22:18ஆகையால் கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக்குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை.
- 2 Kings 23:35–37 2 இராஜாக்கள் 23:35–37அந்த வெள்ளியையும் பொன்னையும் யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுத்தான்; ஆனாலும் பார்வோனுடைய கட்டளையின்படி அந்தப் பணத்தைக் கொடுக்கும்படி அவன் தேசத்தை மதிப்பிட்டு, அவரவர் மதிப்பின்படி அந்த வெள்ளியையும் பொன்னையும் பார்வோன்நேகோவுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தேசத்து ஜனங்களின் கையிலே தண்டினான். யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ரூமா ஊரானாகிய பெதாயாமின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் செபுதாள். அவன் தன் பிதாக்கள் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
- Job 24:10–11 யோபு 24:10–11அவனை வஸ்திரமில்லாமல் நடக்கவும், பட்டினியாய் அரிக்கட்டுகளைச் சுமக்கவும், தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும், தாகத்தவனமாய் ஆலையாட்டவும் பண்ணுகிறார்கள்.
Original words (Hebrew)
- Woe · H1945הוֹי hôwy
- buildeth · H1129בָּנָה bânâh
- house · H1004בַּיִת bayith
- by · H3808לֹא lôʼ
- unrighteousness · H6664צֶדֶק tsedeq
- chambers · H5944עֲלִיָּה ʻălîyâh
- wrong · H4941מִשְׁפָּט mishpâṭ
- neighbour’s · H7453רֵעַ rêaʻ
- service · H5647עָבַד ʻâbad
- wages · H2600חִנָּם chinnâm
- giveth · H5414נָתַן nâthan
- work · H6467פֹּעַל pôʻal
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.