Jeremiah 22:26 in Tamil
உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் ஜநநபூமியல்லாத அந்நிய தேசத்திலே துரத்திவிடுவேன். அங்கே சாவீர்கள்.
Unnaiyum, unnaip petra thaayaiyum, ungal jananaboomiyallaatha anniya thaesaththilae thuraththividuvaen. angae saaveerkal.
Jeremiah 22:26 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் பிறந்த தேசமில்லாத அந்நிய தேசத்தில் துரத்திவிடுவேன். அங்கே இறப்பீர்கள்.
- Open Tamil Contemporary Version
- நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன். நான் உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், நீங்கள் பிறவாத வேறொரு நாட்டில் எறிந்துவிடுவேன். அங்கே நீங்கள் இருவரும் சாவீர்கள்.
- Tamil Easy Reading Version
- நீங்கள் யாரும் பிறந்திருக்காத வேறு நாட்டில் உன்னையும், உனது தாயையும் வீசுவேன். அந்த நாட்டில் நீயும், உன் தாயும் மரிப்பீர்கள்.
Jeremiah 22:26 in English
- King James Version (KJV)
- And I will cast thee out, and thy mother that bare thee, into another country, where ye were not born; and there shall ye die.
- World English Bible (WEB)
- I will cast you out with your mother who bore you into another country, where you were not born; and there you will die.
- American Standard Version (ASV)
- And I will cast thee out, and thy mother that bare thee, into another country, where ye were not born; and there shall ye die.
- Bible in Basic English (BBE)
- I will send you out, and your mother who gave you birth, into another country not the land of your birth; and there death will come to you.
- Darby Translation (DBY)
- And I will cast thee out, and thy mother that bare thee, into another country, where ye were not born; and there shall ye die.
- Webster's Bible (WBS)
- And I will cast thee out, and thy mother that bore thee, into another country, where ye were not born; and there shall ye die.
- Young's Literal Translation (YLT)
- And I have cast thee, And thy mother who bore thee, unto another country, Where ye were not born, and there do ye die.
Read in context
- 24யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா, என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 25உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும், நீ பயப்படுகிறவர்களின் கையிலும் உன்னை ஒப்புக்கொடுப்பேன்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயரின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்.
- 26உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் ஜநநபூமியல்லாத அந்நிய தேசத்திலே துரத்திவிடுவேன். அங்கே சாவீர்கள்.
- 27திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா வாஞ்சிக்கும் தேசத்துக்கு அவர்கள் திரும்பிவருவதில்லை.
- 28கோனியா என்கிற இந்த மனுஷன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ? ஒருவரும் விரும்பாத பாத்திரமோ? அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாத தேசத்திலே துரத்திவிடப்பட்டதும் ஏது?
Cross references
- 2 Kings 24:15 2 இராஜாக்கள் 24:15அவன் யோயாக்கீனையும், ராஜாவின் தாயையும், ராஜாவின் ஸ்திரீகளையும், அவன் பிரதானிகளையும், தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.
- 2 Kings 24:8 2 இராஜாக்கள் 24:8யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின்பேர் நெகுஸ்தாள்.
- Isaiah 22:17 ஏசாயா 22:17இதோ, பெலவான் ஒருவனைத் துரத்துகிறவண்ணமாகக் கர்த்தர் உன்னைத்துரத்திவிட்டு, நிச்சயமாய் உன்னை மூடிப்போடுவார்.
- Jeremiah 15:2–4 எரேமியா 15:2–4எங்கே புறப்பட்டுப்போவோம் என்று இவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு. கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்கு விதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எசேக்கியாவின் குமாரனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையப்பண்ணுவேன்.
- 2 Chronicles 36:9–10 2 நாளாகமம் 36:9–10யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். மறுவருஷத்தின் ஆரம்பத்திலே நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் திவ்வியமான பணிமுட்டுகளையும் பாபிலோனுக்குக் கொண்டுவரப்பண்ணி, அவன் சிறிய தகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின் மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.
- Ezekiel 19:9–14 எசேக்கியேல் 19:9–14அவர்கள் அதைச் சங்கிலிகளினால் கட்டி, ஒரு கூட்டுக்குட்படுத்தி, அதைப் பாபிலோன் ராஜாவினிடத்துக்குக்கொண்டுபோனார்கள்; இனி அதின் சத்தம் இஸ்ரவேலின் பர்வதங்களின்மேல் கேட்கப்படாதபடிக்கு அதை அரணான இடங்களில் கொண்டுபோய் அடைத்தார்கள். நீ அமரிக்கையோடு இருக்கையில் உன் தாய் தண்ணீர் ஓரமாய் நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் கனிதருகிறதும் தழைத்திருக்கிறதுமானதிராட்சச்செடியாயிருந்தாள். ஆளுகிறவர்களின் செங்கோலுக்கேற்ற பலத்த கொப்புகள் அதற்கு இருந்தது; அதின் வளர்த்தி அடர்த்தியான கிளைகளுக்குள்ளே உயர ஓங்கி, தன் உயர்த்தியினாலே தன் திரளான கொடிகளோடுங்கூடத் தோன்றிற்று. ஆனாலும் அது உக்கிரமாய்ப் பிடுங்கப்பட்டு, தரையிலே தள்ளுண்டது; கீழ்காற்றினால் அதின் கனி காய்ந்து போயிற்று; அதின் பலத்த கொப்புகள் முறிந்து, பட்டுப் போயின; அக்கினி அவைகளைப் பட்சித்தது. இப்பொழுது அது வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான வனாந்தர பூமியிலே நடப்பட்டிருக்கிறது. அதின் கொடிகளிலுள்ள ஒரு கொப்பிலிருந்து அக்கினி புறப்பட்டு, அதின் கனியைப் பட்சித்தது; ஆளுகிற செங்கோலுக்கேற்ற பலத்த கொப்பு இனி அதில் இல்லையென்று சொல்; இதுவே புலம்பல், இதுவே புலம்பலாயிருக்கும் என்றார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.