Jeremiah 30:11 in Tamil
உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.
Unnai ratchippatharkaaga naan unnodae irukkiraen endru karththar sollugiraar; unnais sitharadiththa ellaa jaathigalaiyum naan nirmoolamaakkuvaen; unnaiyo naan nirmoolamaakkaamalum, mutrilum thandiyaamal vidaamalum, mattaayth thandippaen.
Jeremiah 30:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உன்னைக் காப்பாற்றுவதற்காக நான் உன்னுடன் இருக்கிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா தேசங்களையும் நான் அழிப்பேன்; உன்னையோ நான் அழிக்காமலும், முற்றிலும் தண்டிக்காமல், மட்டாகத் தண்டிப்பேன்.
- Open Tamil Contemporary Version
- நான் உங்களோடு இருக்கிறேன்; உங்களைக் காப்பாற்றுவேன்’ என்று யெகோவா அறிவிக்கிறார். ‘எந்த நாடுகளின் மத்தியில் நான் உங்களைச் சிதறடித்தேனோ, அந்த நாடுகளை நான் முற்றிலும் அழித்தாலும், உங்களை முற்றிலும் அழிக்கமாட்டேன். உங்களை நான் தண்டித்துச் சீர்படுத்துவேன். உங்களைத் தண்டிக்காமல் விடமாட்டேன், ஆனாலும் நீதியாகவே தண்டிப்பேன்.’
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களே, நான் உங்களோடு இருக்கிறேன்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது “நான் உங்களைக் காப்பேன். நான் அந்நாடுகளுக்கு உங்களை அனுப்பினேன். ஆனால் நான் அந்நாடுகளை முழுமையாக அழிப்பேன். இது உண்மை. நான் அந்நாடுகளை அழிப்பேன். ஆனால் உங்களை அழிக்கமாட்டேன். நீங்கள் செய்த தீயவற்றுக்காக நீங்கள் தண்டிக்கப்பட வேண்டும் ஆனால் நான் சரியாக உங்களை ஒழுங்குப்படுத்துவேன்.”
Jeremiah 30:11 in English
- King James Version (KJV)
- For I [am] with thee, saith the LORD, to save thee: though I make a full end of all nations whither I have scattered thee, yet will I not make a full end of thee: but I will correct thee in measure, and will not leave thee altogether unpunished.
- World English Bible (WEB)
- For I am with you, says the LORD, to save you; for I will make a full end of all the nations where I have scattered you, but I will not make a full end of you; but I will correct you in measure, and will in no way leave you unpunished.”
- American Standard Version (ASV)
- For I am with thee, saith Jehovah, to save thee: for I will make a full end of all the nations whither I have scattered thee, but I will not make a full end of thee; but I will correct thee in measure, and will in no wise leave thee unpunished.
- Bible in Basic English (BBE)
- For I am with you, says the Lord, to be your saviour: for I will put an end to all the nations where I have sent you wandering, but I will not put an end to you completely: though with wise purpose I will put right your errors, and will not let you go quite without punishment.
- Darby Translation (DBY)
- For I am with thee, saith Jehovah, to save thee: for I will make a full end of all the nations whither I have scattered thee; yet of thee will I not make a full end, but I will correct thee with judgment, and will not hold thee altogether guiltless.
- Webster's Bible (WBS)
- For I [am] with thee, saith the LORD, to save thee: though I make a full end of all nations whither I have scattered thee, yet will I not make a full end of thee: but I will correct thee in measure, and will not leave thee altogether unpunished.
- Young's Literal Translation (YLT)
- For with thee [am] I, An affirmation of Jehovah — to save thee, For I make an end of all the nations Whither I have scattered thee, Only, of thee I do not make an end, And I have chastised thee in judgment, And do not entirely acquit thee.
Read in context
- 9தங்கள் தேவனாகிய கர்த்தரையும், நான் தங்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள்.
- 10ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பிவந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை.
- 11உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.
- 12கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடிதாயும் இருக்கிறது.
- 13உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச் சொஸ்தப்படுத்தும் ஒளஷதங்களுமில்லை.
Cross references
- Jeremiah 10:24 எரேமியா 10:24கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும், நான் அவமாய்ப்போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும்.
- Jeremiah 1:19 எரேமியா 1:19அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Isaiah 8:10 ஏசாயா 8:10ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்.
- Jeremiah 4:27 எரேமியா 4:27தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன்என்றுகர்த்தர் சொல்லுகிறார்.
- Jeremiah 1:8 எரேமியா 1:8நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன்என்று கர்த்தர் சொல்லி,
- Jeremiah 15:20 எரேமியா 15:20உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன்என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 2 Timothy 4:22 2 தீமோத்தேயு 4:22கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.
- Jeremiah 5:10 எரேமியா 5:10அதின் மதில்கள்மேலேறி அழித்துப்போடுங்கள்; ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் கர்த்தருடையவைகள் அல்ல.
- 2 Timothy 4:17–18 2 தீமோத்தேயு 4:17–18கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும்கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன். கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
- Psalm 6:1 சங்கீதம் 6:1கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும்.
- Acts 18:10 அப்போஸ்தலருடைய நடபடிகள் 18:10நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார்.
- Ezekiel 11:16–17 எசேக்கியேல் 11:16–17ஆகையால் நான் அவர்களைத் தூரமாகப் புறஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களைத் தேசங்களிலே சிதறடித்திருந்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்ச காலத்துக்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல். ஆதலால் நான் உங்களை ஜனங்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.
Original words (Hebrew)
- saith · H5002נְאֻם nᵉʼum
- save · H3467יָשַׁע yâshaʻ
- make · H6213עָשָׂה ʻâsâh
- end · H3617כָּלָה kâlâh
- nations · H1471גּוֹי gôwy
- scattered · H6327פּוּץ pûwts
- make · H6213עָשָׂה ʻâsâh
- end · H3617כָּלָה kâlâh
- correct · H3256יָסַר yâçar
- measure · H4941מִשְׁפָּט mishpâṭ
- altogether · H5352נָקָה nâqâh
- unpunished · H5352נָקָה nâqâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.