Jeremiah 33:1 in Tamil
எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலேஅடைக்கப்பட்டிருக்கையில், கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் அவனுக்கு உண்டாகி, அவர்:
Eraemiyaa innum kaavarsaalaiyin mutraththilaeadaikkappattirukkaiyil, karththarudaiya vaarththai irandaantharam avanukku undaagi, avar:
Jeremiah 33:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எரேமியா இன்னும் காவல்நிலையத்தின் முற்றத்தில் அடைக்கப்பட்டிருக்கும்போது, யெகோவாவுடைய வார்த்தை இரண்டாம்முறை அவனுக்கு உண்டாகி, அவர்:
- Open Tamil Contemporary Version
- எரேமியா இன்னும் காவற்கூடத்தின் முற்றத்திலேயே சிறைப்பட்டிருக்கும்போது, இரண்டாம் முறையும் யெகோவாவின் வார்த்தை அவனுக்கு வந்தது:
- Tamil Easy Reading Version
- கர்த்தரிடமிருந்து வார்த்தை இரண்டாவது முறையாக எரேமியாவிற்கு வந்தது. எரேமியா இன்னும் காவல் முற்றத்தில் சிறைபட்டிருக்கிறான்.
Jeremiah 33:1 in English
- King James Version (KJV)
- Moreover the word of the LORD came unto Jeremiah the second time, while he was yet shut up in the court of the prison, saying,
- World English Bible (WEB)
- Moreover the LORD’s word came to Jeremiah the second time, while he was still locked up in the court of the guard, saying,
- American Standard Version (ASV)
- Moreover the word of Jehovah came unto Jeremiah the second time, while he was yet shut up in the court of the guard, saying,
- Bible in Basic English (BBE)
- Then the word of the Lord came to Jeremiah the second time, while he was still shut up in the place of the armed watchmen, saying,
- Darby Translation (DBY)
- And the word of Jehovah came to Jeremiah the second time, while he was still shut up in the court of the prison, saying,
- Webster's Bible (WBS)
- Moreover the word of the LORD came to Jeremiah the second time, while he was yet confined in the court of the prison, saying,
- Young's Literal Translation (YLT)
- And there is a word of Jehovah unto Jeremiah a second time — and he [is] yet detained in the court of the prison — saying:
Read in context
- 1எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலேஅடைக்கப்பட்டிருக்கையில், கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் அவனுக்கு உண்டாகி, அவர்:
- 2இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்:
- 3என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
Cross references
- Jeremiah 32:2–3 எரேமியா 32:2–3அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றிக்கை போட்டிருந்தது; எரேமியா தீர்க்கதரிசியோ, யூதா ராஜாவின் அரமனையிலுள்ள காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருந்தான். ஏனென்றால், இதோ, இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதைப் பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும்,
- Jeremiah 37:21 எரேமியா 37:21அப்பொழுது எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலே காக்கவும், நகரத்திலே அப்பமிருக்குமட்டும் அப்பஞ்சுடுகிறவர்களின் வீதியிலே தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக்கொடுக்கவும் கட்டளையிட்டான்; அப்படியே எரேமியா காவற்சாலையின் முற்றத்திலே இருந்தான்.
- Jeremiah 38:28 எரேமியா 38:28அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்மட்டாகக் காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டுப்போனபோதும் அங்கேயே இருந்தான்.
- Jeremiah 32:8 எரேமியா 32:8அப்படியே என் பெரிய தகப்பன் மகனாகிய அனாமெயேல், கர்த்தருடைய வார்த்தையின்படி காவற்சாலையின் முற்றத்தில் என்னிடத்துக்கு வந்து: பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சுதந்தரபாத்தியம் உமக்குண்டு, அதை மீட்கும் அதிகாரம் உமக்கு அடுத்தது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்; அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன்.
- 2 Timothy 2:9 2 தீமோத்தேயு 2:9இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.