Jeremiah 35:7 in Tamil
நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலும், வீட்டைக் கட்டாமலும், விதையை விதையாமலும், திராட்சத்தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும், உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களிலே குடியிருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.
Neengalum ungal pillaigalum endrendraikkum thiraatcharasam kudiyaamalum, veettaik kattaamalum, vithaiyai vithaiyaamalum, thiraatchaththottaththai naattaamalum, athaik kaiyaalaamalum, ungaludaiya ellaa naadkalilum koodaarangalilae kudiyiruppeerkalaaga endru engalukkuk kattalaiyittaar.
Jeremiah 35:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சைரசம் குடிக்காமலும், வீட்டைக் கட்டாமலும், விதையை விதைக்காமலும், திராட்சைத்தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும், உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களில் குடியிருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.
- Open Tamil Contemporary Version
- அத்துடன் நீங்கள் ஒருபோதும் வீடுகளைக் கட்டவோ, விதையை விதைக்கவோ, திராட்சைத் தோட்டங்களை நாட்டவோ வேண்டாம். இவற்றில் ஒன்றையும் உங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ளவும் வேண்டாம். ஆனால் எப்பொழுதும் கூடாரங்களிலேயே வசிக்கவேண்டும். அப்பொழுது நீங்கள் நாடோடிகளாய் இருக்கும் நாட்டில் நீடித்த நாட்களுக்கு வாழ்வீர்கள் என்று கட்டளையிட்டிருக்கிறார் என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- நீங்கள் எப்பொழுதும் வீடுகளைக் கட்ட வேண்டாம். விதைகளை நடவேண்டாம், அல்லது திராட்சை கொடிகளைப் பயிரிடவேண்டாம். நீங்கள் இக்காரியங்கள் எதுவும் செய்யவேண்டாம். நீங்கள் கூடாரங்களில் மட்டுமே வாழ வேண்டும். நீங்கள் இவ்வாறு செய்தால் பிறகு நீங்கள் நீண்ட காலம் இடம் விட்டு இடம் போய் வாழ்வீர்கள்.’
Jeremiah 35:7 in English
- King James Version (KJV)
- Neither shall ye build house, nor sow seed, nor plant vineyard, nor have [any:] but all your days ye shall dwell in tents; that ye may live many days in the land where ye [be] strangers.
- World English Bible (WEB)
- You shall not build a house, sow seed, plant a vineyard, or have any; but all your days you shall dwell in tents, that you may live many days in the land in which you live as nomads.’
- American Standard Version (ASV)
- neither shall ye build house, nor sow seed, nor plant vineyard, nor have any; but all your days ye shall dwell in tents; that ye may live many days in the land wherein ye sojourn.
- Bible in Basic English (BBE)
- And you are to make no houses, or put in seed, or get vine-gardens planted, or have any: but all your days you are to go on living in tents, so that you may have a long life in the land where you are living as in a strange country.
- Darby Translation (DBY)
- neither shall ye build house, nor sow seed, nor plant vineyard, nor shall ye have [any]; but all your days ye shall dwell in tents, that ye may live many days in the land where ye sojourn.
- Webster's Bible (WBS)
- Neither shall ye build house, nor sow seed, nor plant vineyard, nor have [any] : but all your days ye shall dwell in tents; that ye may live many days in the land where ye [are] strangers.
- Young's Literal Translation (YLT)
- and a house ye do not build, and seed ye do not sow, and a vineyard ye do not plant, nor have ye any; for in tents do ye dwell all your days, that ye may live many days on the face of the ground whither ye are sojourning.
Read in context
- 5திராட்சரசத்தினால் நிரப்பப்பட்ட குடங்களையும் கிண்ணங்களையும் ரேகாபியருடைய குடும்பத்தைச் சேர்ந்த புத்திரரின் முன்னே வைத்து, அவர்களை நோக்கி: திராட்சரசம் குடியுங்கள் என்றேன்.
- 6அதற்கு அவர்கள்: நாங்கள் திராட்சரசம் குடிக்கிறதில்லை; ஏனென்றால், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாப், நீங்கள் பரதேசிகளாய்த் தங்குகிற தேசத்தில் நீடித்திருக்கும்படிக்கு,
- 7நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலும், வீட்டைக் கட்டாமலும், விதையை விதையாமலும், திராட்சத்தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும், உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களிலே குடியிருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.
- 8அப்படியே எங்களுடைய எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் ஸ்திரீகளும் எங்கள் குமாரரும் எங்கள் குமாரத்திகளும் திராட்சரசம் குடியாமலும்,
- 9நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டாமலும், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம்; எங்களுக்குத் திராட்சத்தோட்டமும் வயலும் விதைப்பாடுமில்லை.
Cross references
- Jeremiah 35:10 எரேமியா 35:10நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் தகப்பனாகிய யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்து வந்தோம்.
- Exodus 20:12 யாத்திராகமம் 20:12உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
- Genesis 25:27 ஆதியாகமம் 25:27இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான்.
- Nehemiah 8:14–16 நெகேமியா 8:14–16அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியருக்கிறதைக் கண்டார்கள். ஆகையால் எழுதியிருக்கிறபடி கூடாரங்களைப் போடும்படிக்கு, நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப்போய் ஒலிவக்கிளைகளையும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும், பேரிச்ச மட்டைகளையும், அடர்ந்த மரக்கிளைகளையும் கொண்டுவாருங்கள் என்று தங்களுடைய சகல பட்டணங்களிலும், எருசலேமிலும் கூறிப் பிரசித்தப்படுத்தினார்கள். அப்படியே ஜனங்கள் வெளியே போய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் முற்றங்களிலும், தேவனுடைய ஆலயப்பிரகாரங்களிலும், தண்ணீர் வாசல் வீதியிலும், எப்பிராயீம் வாசல் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள்.
- Leviticus 23:42–43 லேவியராகமம் 23:42–43நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின போது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு, ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லோரும் கூடாரங்களில் வாசம் பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
- Ephesians 6:2–3 எபேசியர் 6:2–3உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும். உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது.
- Ephesians 5:18 எபேசியர் 5:18துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;
- Hebrews 11:9–13 எபிரெயர் 11:9–13விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்; ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான். விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும்பிள்ளைபெற்றாள். ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள். இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள்.
- 1 Peter 2:11 1 பேதுரு 2:11பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிறமாம்சஇச்சைகளை விட்டு விலகி,
Original words (Hebrew)
- build · H1129בָּנָה bânâh
- house · H1004בַּיִת bayith
- sow · H2232זָרַע zâraʻ
- seed · H2233זֶרַע zeraʻ
- plant · H5193נָטַע nâṭaʻ
- vineyard · H3754כֶּרֶם kerem
- days · H3117יוֹם yôwm
- dwell · H3427יָשַׁב yâshab
- tents · H168אֹהֶל ʼôhel
- live · H2421חָיָה châyâh
- many · H7227רַב rab
- days · H3117יוֹם yôwm
- in · H6440פָּנִים pânîym
- land · H127אֲדָמָה ʼădâmâh
- strangers · H1481גּוּר gûwr
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.