Jeremiah 44:28 in Tamil
ஆனாலும் பட்டயத்துக்குத் தப்புகிறவர்கள் எகிப்துதேசத்திலிருந்துயூதாதேசத்துக்குக் கொஞ்சம் பேராய்த் திரும்புவார்கள்; அப்படியே எகிப்துதேசத்திலே தங்கியிருக்க வந்த யூதாவில் மீதியான அனைவரும் அக்காலத்திலே தங்களுடைய வார்த்தையோ, என் வார்த்தையோ, யாருடைய வார்த்தை மெய்ப்படும் என்று அறிவார்கள்.
Aanaalum pattayaththukkuth thappugiravarkal egipthuthaesaththilirunthuyoothaathaesaththukkuk konjsam paeraayth thirumbuvaarkal; appadiyae egipthuthaesaththilae thangiyirukka vantha yoothaavil meethiyaana anaivarum akkaalaththilae thangaludaiya vaarththaiyo, en vaarththaiyo, yaarudaiya vaarththai meyppadum endru arivaarkal.
Jeremiah 44:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆனாலும் பட்டயத்திற்குத் தப்புகிறவர்கள் எகிப்துதேசத்திலிருந்து யூதா தேசத்திற்குக் கொஞ்சம் பேராய்த் திரும்புவார்கள்; அப்படியே எகிப்துதேசத்தில் தங்கியிருக்க வந்த யூதாவில் மீதியான அனைவரும் அக்காலத்தில் தங்களுடைய வார்த்தையோ, என் வார்த்தையோ, யாருடைய வார்த்தை உண்மையாகும் என்று அறிவார்கள்.
- Open Tamil Contemporary Version
- வாளுக்குத் தப்பி எகிப்து நாட்டிலிருந்து யூதா நாட்டுக்குத் திரும்புகிறவர்களோ மிகச் சிலராய் இருப்பார்கள். அப்பொழுது யூதாவில் மீதியாயிருந்து எகிப்தில் குடியிருக்கும்படி போன நீங்கள் அனைவரும், என்னுடைய வார்த்தையோ அல்லது உங்களுடைய வார்த்தையோ எது நிலைநிற்கும் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
- Tamil Easy Reading Version
- யூதா ஜனங்களில் சிலர் வாளால் கொல்லப்படுவதிலிருந்து தப்புவார்கள். அவர்கள் எகிப்திலிருந்து யூதாவிற்குத் திரும்பி வருவார்கள். ஆனால் தப்பி வருகிற யூதாவின் ஜனங்கள் மிகச் சிலராக இருப்பார்கள். பிறகு தப்பிப்பிழைத்த அந்த யூதா ஜனங்கள், எகிப்தில் வாழ்பவர்கள், யாருடைய வார்த்தை உண்மையாகிறது என்பதை அறிந்துக்கொள்வார்கள். எனது வார்த்தையா? அல்லது அவர்களின் வார்த்தையா? எது உண்மையானது என்பதை அவர்கள் அறிவார்கள்.
Jeremiah 44:28 in English
- King James Version (KJV)
- Yet a small number that escape the sword shall return out of the land of Egypt into the land of Judah, and all the remnant of Judah, that are gone into the land of Egypt to sojourn there, shall know whose words shall stand, mine, or theirs.
- World English Bible (WEB)
- Those who escape the sword will return out of the land of Egypt into the land of Judah few in number. All the remnant of Judah, who have gone into the land of Egypt to live there, will know whose word will stand, mine or theirs.
- American Standard Version (ASV)
- And they that escape the sword shall return out of the land of Egypt into the land of Judah, few in number; and all the remnant of Judah, that are gone into the land of Egypt to sojourn there, shall know whose word shall stand, mine, or theirs.
- Bible in Basic English (BBE)
- And those who get away safe from the sword will come back from the land of Egypt to the land of Judah, a very small number; and all the rest of Judah, who have gone into the land of Egypt and are living there, will see whose word has effect, mine or theirs.
- Darby Translation (DBY)
- And they that escape the sword shall return out of the land of Egypt into the land of Judah, a very small company; and all the remnant of Judah, that have come into the land of Egypt to sojourn there, shall know whose word shall stand, mine or theirs.
- Webster's Bible (WBS)
- Yet a small number that escape the sword shall return from the land of Egypt into the land of Judah, and all the remnant of Judah, that have gone into the land of Egypt to sojourn there, shall know whose words shall stand, mine, or theirs.
- Young's Literal Translation (YLT)
- 'And the escaped of the sword turn back out of the land of Egypt to the land of Judah, few in number, and known have all the remnant of Judah who are coming into the land of Egypt to sojourn there, whose word is established, Mine or theirs.
Read in context
- 26ஆகையால், எகிப்துதேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ, கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கப்படுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக்கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 27இதோ, நான் அவர்கள்மேல் நன்மைக்கல்ல தீமைக்கே ஜாக்கிரதையாயிருப்பேன்; எகிப்து தேசத்திலிருக்கிற யூதா மனுஷர் எல்லாரும் ஒழிந்துதீருமளவும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சங்காரமாவார்கள்.
- 28ஆனாலும் பட்டயத்துக்குத் தப்புகிறவர்கள் எகிப்துதேசத்திலிருந்துயூதாதேசத்துக்குக் கொஞ்சம் பேராய்த் திரும்புவார்கள்; அப்படியே எகிப்துதேசத்திலே தங்கியிருக்க வந்த யூதாவில் மீதியான அனைவரும் அக்காலத்திலே தங்களுடைய வார்த்தையோ, என் வார்த்தையோ, யாருடைய வார்த்தை மெய்ப்படும் என்று அறிவார்கள்.
- 29நான் இவ்விடத்தில் உங்களைத் தண்டிப்பேன் என்று உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன என் வார்த்தைகள் மெய்ப்படுமென்று நீங்கள் அறிவதற்கு உங்களுக்கு இதுவே அடையாளம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- 30இதோ, நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை, அவனுடைய சத்துருவும் அவன் பிராணனை வாங்கத் தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்ததுபோல, நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும், அவனுடைய சத்துருக்களின் கையிலும், அவன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Cross references
- Jeremiah 44:14 எரேமியா 44:14எகிப்துதேசத்திலே தங்கவும், மறுபடியும் தங்கள் ஆத்துமா வாஞ்சித்திருக்கிற யூதா தேசத்திலே குடியேறுவதற்கு அங்கே திரும்பிப்போகவும்வேண்டுமென்று இங்கே வந்த மீதியானயூதரிலே மீதியாயிருக்கிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை; தப்பிப்போகிறவர்களாகிய மற்றவர்களேயொழிய அவர்களில் ஒருவரும் அங்கே திரும்புவதில்லையென்றார் என்று சொன்னான்.
- Jeremiah 44:25–26 எரேமியா 44:25–26இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானராக்கினிக்குத் தூபங்காட்டவும், அவளுக்குப் பானபலிகளைவார்க்கவும், நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று, நீங்களும் உங்கள் ஸ்திரீகளும், உங்கள் வாயினாலே சொல்லி, உங்கள் கைகளினாலே நிறைவேற்றினீர்கள்; நீங்கள் உங்கள் பொருத்தனைகளை ஸ்திரப்படுத்தினது மெய்யே, அவைகளைச் செலுத்தினதும் மெய்யே. ஆகையால், எகிப்துதேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ, கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கப்படுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக்கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Isaiah 27:12–13 ஏசாயா 27:12–13அக்காலத்திலே, கர்த்தர் ஆற்றங்கரையின் விளைவுதொடங்கி எகிப்தின் நதிமட்டும் போரடிப்பார்; இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் ஒவ்வொருவராய்ச்சேர்க்கப்படுவீர்கள். அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது, அசீரியா தேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த பர்வதத்திலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள்.
- Isaiah 10:19 ஏசாயா 10:19காட்டில் அவனுக்கு மீதியான மரங்கள் கொஞ்சமாயிருக்கும், ஒரு சிறுபிள்ளை அவைகளை எண்ணி எழுதலாம்.
- Isaiah 46:10–11 ஏசாயா 46:10–11அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி, உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக்கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனைத் தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்.
- Isaiah 28:16–18 ஏசாயா 28:16–18ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்கு நூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும். நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள்.
- Jeremiah 44:29 எரேமியா 44:29நான் இவ்விடத்தில் உங்களைத் தண்டிப்பேன் என்று உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன என் வார்த்தைகள் மெய்ப்படுமென்று நீங்கள் அறிவதற்கு உங்களுக்கு இதுவே அடையாளம் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- Zechariah 1:6 சகரியா 1:6இராமற்போனாலும், தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்கவில்லையோ? எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் கிரியைகளின்படியேயும் சேனைகளின் கர்த்தர் எங்களுக்குச் செய்ய நிர்ணயித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து சொன்னதில்லையோ என்று சொல் என்றார்.
- Psalm 33:11 சங்கீதம் 33:11கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்.
- Lamentations 3:37–38 புலம்பல் 3:37–38ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக்காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
- Jeremiah 44:16–17 எரேமியா 44:16–17நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல், எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளைவார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நா ங் க ள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.
- Matthew 24:35 மத்தேயு 24:35வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
Original words (Hebrew)
- small · H4962מַת math
- number · H4557מִסְפָּר miçpâr
- escape · H6412פָּלִיט pâlîyṭ
- sword · H2719חֶרֶב chereb
- out · H7725שׁוּב shûwb
- land · H776אֶרֶץ ʼerets
- Egypt · H4714מִצְרַיִם Mitsrayim
- land · H776אֶרֶץ ʼerets
- Judah · H3063יְהוּדָה Yᵉhûwdâh
- remnant · H7611שְׁאֵרִית shᵉʼêrîyth
- Judah · H3063יְהוּדָה Yᵉhûwdâh
- gone · H935בּוֹא bôwʼ
- land · H776אֶרֶץ ʼerets
- Egypt · H4714מִצְרַיִם Mitsrayim
- sojourn · H1481גּוּר gûwr
- know · H3045יָדַע yâdaʻ
- words · H1697דָּבָר dâbâr
- stand · H6965קוּם qûwm
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.