Jeremiah 48:18 in Tamil
தீபோன் பட்டணவாசியான குமாரத்தியே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்தோடே உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் அரண்களை அழித்துப்போடுவான்.
Theebon pattanavaasiyaana kumaaraththiyae, nee un magimaiyai vittirangi, thaagaththodae udkaarnthiru; movaabaip paazhaakkugiravan unakku virothamaay vanthu, un arangalai azhiththuppoduvaan.
Jeremiah 48:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தீபோன் பட்டணவாசியான மகளே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்துடன் உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் மதில்களை அழித்துப்போடுவான்.
- Open Tamil Contemporary Version
- “தீபோன் மகளின் குடிகளே! நீங்கள் உங்கள் மேன்மையிலிருந்து கீழிறங்கி வறண்ட நிலத்தில் உட்காருங்கள். ஏனெனில் மோவாபை அழிப்பவன் உங்களுக்கெதிராய் வந்து உங்கள் அரணுள்ள பட்டணங்களை அழித்துப் போடுவான்.
- Tamil Easy Reading Version
- “தீபோனில் வாழ்கின்ற ஜனங்களே, உங்களது மகிமையுள்ள இடத்தைவிட்டு கீழே இறங்கி வாருங்கள். புழுதித் தரையில் உட்காருங்கள். ஏனென்றால், மோவாபை அழித்தவன் வந்துக் கொண்டிருக்கிறான். அவன் உங்களது பலமான நகரங்களை அழிப்பான்.”
Jeremiah 48:18 in English
- King James Version (KJV)
- Thou daughter that dost inhabit Dibon, come down from [thy] glory, and sit in thirst; for the spoiler of Moab shall come upon thee, [and] he shall destroy thy strong holds.
- World English Bible (WEB)
- “You daughter who dwells in Dibon, come down from your glory, and sit in thirst; for the destroyer of Moab has come up against you. He has destroyed your strongholds.
- American Standard Version (ASV)
- O thou daughter that dwellest in Dibon, come down from thy glory, and sit in thirst; for the destroyer of Moab is come up against thee, he hath destroyed thy strongholds.
- Bible in Basic English (BBE)
- Come down from your glory, O people of Dibon, and take your seat in the place of the waste; for the attacker of Moab has gone up against you, sending destruction on your strong places.
- Darby Translation (DBY)
- Come down from [thy] glory and sit in the drought, O inhabitress, daughter of Dibon; the spoiler of Moab is come up against thee, thy strongholds hath he destroyed.
- Webster's Bible (WBS)
- Thou daughter that dost inhabit Dibon, come down from [thy] glory, and sit in thirst; for the spoiler of Moab shall come upon thee, [and] he shall destroy thy strong holds.
- Young's Literal Translation (YLT)
- Come down from honour, sit in thirst, O inhabitant, daughter of Dibon, For a spoiler of Moab hath come up to thee, He hath destroyed thy fenced places.
Read in context
- 16மோவாபின் ஆபத்துவரச் சமீபமாயிருக்கிறது; அதின் தீங்கு மிகவும் தீவிரித்துவருகிறது.
- 17அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் பேரை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் அதற்காக அங்கலாய்த்துக்கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.
- 18தீபோன் பட்டணவாசியான குமாரத்தியே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்தோடே உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் அரண்களை அழித்துப்போடுவான்.
- 19ஆரோவேரில் குடியிருக்கிறவளே, நீ வழியிலே நின்று பார்த்துக்கொண்டிரு; நடந்ததென்னவென்று ஓடிவருகிறவனையும் தப்பிவருகிறவனையும் கேள்.
- 20மோவாப் முறிய அடிக்கப்பட்டபடியினால் கலங்கிப்போயிற்று; அலறிக்கூப்பிடுங்கள்; மோவாப் பாழாக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள்.
Cross references
- Numbers 21:30 எண்ணாகமம் 21:30அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம் தீபோன் ஊர்வரைக்கும் நாசமாயிற்று; மேதேபாவுக்குச் சமீபமான நோப்பா பட்டணபரியந்தம் அவர்களைப் பாழாக்கினோம் என்று பாடினார்கள்.
- Isaiah 47:1 ஏசாயா 47:1பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ செருக்குக்காரியும் சுகசெல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை.
- Isaiah 15:2 ஏசாயா 15:2அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.
- Jeremiah 48:22 எரேமியா 48:22தீபோனின்மேலும், நேபோவின்மேலும், பெத்திப்லாத்தாயீமின்மேலும்,
- Joshua 13:17 யோசுவா 13:17சமபூமியிலிருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால் மெயோன்,
- Judges 15:18 நியாயாதிபதிகள் 15:18அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான்.
- Numbers 32:3 எண்ணாகமம் 32:3கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.
- Isaiah 5:13 ஏசாயா 5:13என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டுபோகிறார்கள்.
- Exodus 17:3 யாத்திராகமம் 17:3ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர் என்றார்கள்.
- Genesis 21:16 ஆதியாகமம் 21:16பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
- Ezekiel 19:13 எசேக்கியேல் 19:13இப்பொழுது அது வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான வனாந்தர பூமியிலே நடப்பட்டிருக்கிறது.
- Jeremiah 46:18–19 எரேமியா 46:18–19பர்வதங்களில் தாபோரும், சமுத்திரத்தின் அருகே கர்மேலும் இருக்கிறநிச்சயம்போல் அவன் வருவானென்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா தம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறார். எகிப்துதேசவாசியாகிய குமாரத்தியே, சிறையிருப்புக்குப் போகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்து, நோப் பாழாகும்; அது குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கும்.
Original words (Hebrew)
- daughter · H1323בַּת bath
- inhabit · H3427יָשַׁב yâshab
- Dibon · H1769דִּיבוֹן Dîybôwn
- down · H3381יָרַד yârad
- glory · H3519כָּבוֹד kâbôwd
- sit · H3427יָשַׁב yâshab
- thirst · H6772צָמָא tsâmâʼ
- spoiler · H7703שָׁדַד shâdad
- Moab · H4124מוֹאָב Môwʼâb
- come · H5927עָלָה ʻâlâh
- destroy · H7843שָׁחַת shâchath
- holds · H4013מִבְצָר mibtsâr
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.