Jeremiah 50:42 in Tamil
அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியர்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின்மேல் ஏறி வருவார்கள்.
Avarkal villum vaelum pidiththuvaruvaarkal; avarkal irakkamillaatha kodiyar; avarkal iraichal samuththira iraichalpol irukkum; paabilon kumaaraththiyae, avarkal unakku virothamaaga yuththaththukku aayaththappatta aadkalaayk kuthiraigalinmael aeri varuvaarkal.
Jeremiah 50:42 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியவர்கள்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் மகளே, அவர்கள் உனக்கு விரோதமாக போருக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின்மேல் ஏறி வருவார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் வில்லையும், ஈட்டியையும் ஆயுதமாய் ஏந்தியிருக்கிறார்கள்; அவர்கள் இரக்கமற்ற கொடியவர்கள். அவர்கள் தங்கள் குதிரைகளில் சவாரி செய்யும்போது அவர்களின் சத்தம், இரைகிற கடலைப் போலிருக்கிறது. பாபிலோன் மகளே! அவர்கள் போருக்கு அணிவகுத்த மனிதரைப்போல் உன்னைத் தாக்க வருகிறார்கள்.
- Tamil Easy Reading Version
- அவர்களது படைகள் வில்லும் ஈட்டிகளும் வைத்திருக்கிறார்கள். வீரர்கள் கொடுமையானவர்கள். அவர்களிடம் இரக்கம் இல்லை. வீரர்கள் தங்கள் குதிரைகளின்மேல் சவாரி செய்கிறார்கள். அந்த ஓசை இரைச்சலிடுகிற கடலைப் போன்றுள்ளது. அவர்கள் தம் இடங்களில் நிற்கிறார்கள். போருக்குத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் பாபிலோன் நகரமே, உன்னைத் தாக்கத் தயாராக இருக்கிறார்கள்.
Jeremiah 50:42 in English
- King James Version (KJV)
- They shall hold the bow and the lance: they [are] cruel, and will not shew mercy: their voice shall roar like the sea, and they shall ride upon horses, [every one] put in array, like a man to the battle, against thee, O daughter of Babylon.
- World English Bible (WEB)
- They take up bow and spear. They are cruel, and have no mercy. Their voice roars like the sea. They ride on horses, everyone set in array, as a man to the battle, against you, daughter of Babylon.
- American Standard Version (ASV)
- They lay hold on bow and spear; they are cruel, and have no mercy; their voice roareth like the sea; and they ride upon horses, every one set in array, as a man to the battle, against thee, O daughter of Babylon.
- Bible in Basic English (BBE)
- Bows and spears are in their hands; they are cruel and have no mercy; their voice is like the thunder of the sea, and they go on horses; everyone in his place like men going to the fight, against you, O daughter of Babylon.
- Darby Translation (DBY)
- They lay hold of bow and spear; they are cruel, and will not shew mercy; their voice roareth like the sea, and they ride upon horses — set in array like a man for the battle, against thee, O daughter of Babylon.
- Webster's Bible (WBS)
- They shall hold the bow and the lance: they [are] cruel, and will not show mercy: their voice shall roar like the sea, and they shall ride upon horses, [every one] put in array, like a man to the battle, against thee, O daughter of Babylon.
- Young's Literal Translation (YLT)
- Bow and halbert they seize, Cruel [are] they, and they have no mercy, Their voice as a sea soundeth, and on horses they ride, Set in array as a man for battle, Against thee, O daughter of Babylon.
Read in context
- 40தேவன் சோதோமையும் கொமோராவையும் அதின் சுற்றுப்புறங்களையும் கவிழ்த்துப்போட்டதுபோல இதையும் கவிழ்த்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஒருவரும் அதில் குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதில் தங்குவதுமில்லை.
- 41இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்: பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள்.
- 42அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியர்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின்மேல் ஏறி வருவார்கள்.
- 43அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவவேதனைப்படுகிறவளுக்குண்டாகும்வேதனையைப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும்.
- 44இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியிலே ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்குத் திட்டஞ்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்?
Cross references
- Isaiah 5:30 ஏசாயா 5:30அந்நாளில், சமுத்திரம் இரைவதுபோல் அவர்களுக்கு விரோதமாய் இரைவார்கள்; அப்பொழுது தேசத்தைப்பார்த்தால், இதோ, அந்தகாரமும் வியாகுலமும் உண்டு; அதின் மேகங்களினால் வெளிச்சம் இருண்டு போம்.
- Isaiah 47:6 ஏசாயா 47:6நான் என் ஜனத்தின்மேல் கடுங்கோபமடைந்து, என் சுதந்தரத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம்வையாமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி,
- Jeremiah 8:16 எரேமியா 8:16தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள்.
- Jeremiah 47:3 எரேமியா 47:3அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை அயர்ந்துபோனதினால்தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பாராதிருப்பார்கள்.
- Isaiah 13:17–18 ஏசாயா 13:17–18இதோ, நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதியாமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும், வில்லுகளால் இளைஞரைச்சிதைத்துவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் இரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை.
- Jeremiah 6:22–23 எரேமியா 6:22–23இதோ, வடதேசத்திலிருந்து ஒரு ஜனம் வந்து, பூமியின் கடையெல்லைகளிலிருந்து ஒரு பெரிய ஜாதி எழும்பும். அவர்கள் வில்லும் வேலும் பிடித்து வருவார்கள்; அவர்கள் கொடியர், இரக்கம் அறியாதவர்கள்; அவர்கள் சத்தம் சமுத்திர இரைச்சலுக்குச் சமானமாயிருக்கும்; சீயோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தசந்நத்தராய்க் குதிரைகளின்மேலேறி அணியணியாக வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
- James 2:13 யாக்கோபு 2:13ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.
- Isaiah 14:6 ஏசாயா 14:6உக்கிரங்கொண்டு ஓயாத அடியாய்ஜனங்களை அடித்து, கோபமாய் ஜாதிகளை அரசாண்டவன், தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான்.
- Psalm 137:8–9 சங்கீதம் 137:8–9பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான். உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான். (தாவீதின் சங்கீதம்.)
- Habakkuk 1:6–8 ஆபகூக் 1:6–8இதோ, நான் கல்தேயரென்னும் கொடிதும் வேகமுமான ஜாதியாரை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத வாசஸ்தலங்களைக் கட்டிக் கொள்ளத் தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள். அவர்கள் கெடியும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும். அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளிலும் வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாயிருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்து வருவார்கள்.
- Psalm 46:6 சங்கீதம் 46:6ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று.
- Psalm 46:2–3 சங்கீதம் 46:2–3ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.)
Original words (Hebrew)
- hold · H2388חָזַק châzaq
- bow · H7198קֶשֶׁת qesheth
- lance · H3591כִּידוֹן kîydôwn
- cruel · H394אַכְזָרִי ʼakzârîy
- mercy · H7355רָחַם râcham
- voice · H6963קוֹל qôwl
- roar · H1993הָמָה hâmâh
- sea · H3220יָם yâm
- ride · H7392רָכַב râkab
- horses · H5483סוּס çûwç
- array · H6186עָרַךְ ʻârak
- man · H376אִישׁ ʼîysh
- battle · H4421מִלְחָמָה milchâmâh
- daughter · H1323בַּת bath
- Babylon · H894בָּבֶל Bâbel
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.