Joel 3:10 in Tamil
உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.
Ungal manvettigalaip pattayangalaagavum, ungal arivaalkalai eettigalaagavum adiyungal; palaveenanum thannaip palavaan endru solvaanaaga.
Joel 3:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.
- Open Tamil Contemporary Version
- உங்கள் மண்வெட்டிகளை வாள்களாகவும், உங்கள் வெட்டுக்கத்திகளை ஈட்டிகளாகவும் அடியுங்கள். பெலவீனன், “நான் பெலனுள்ளவன்!” என்று சொல்லட்டும்.
- Tamil Easy Reading Version
- உங்கள் மண்வெட்டிகளை வாள்களாக அடியுங்கள். உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகச் செய்யுங்கள். பலவீனமான மனிதன் “நான் வலிமையான போர்வீரன்” என்று சொல்லட்டும்.
Joel 3:10 in English
- King James Version (KJV)
- Beat your plowshares into swords, and your pruninghooks into spears: let the weak say, I [am] strong.
- World English Bible (WEB)
- Beat your plowshares into swords, and your pruning hooks into spears. Let the weak say, ‘I am strong.’
- American Standard Version (ASV)
- Beat your plowshares into swords, and your pruning-hooks into spears: let the weak say, I am strong.
- Bible in Basic English (BBE)
- Get your plough-blades hammered into swords, and your vine-knives into spears: let the feeble say, I am strong.
- Darby Translation (DBY)
- Beat your ploughshares into swords, and your pruning-knives into spears; let the weak say, I am strong.
- Webster's Bible (WBS)
- Beat your plow-shares into swords, and your pruning-hooks into spears: let the weak say, I [am] strong.
- Young's Literal Translation (YLT)
- Beat your ploughshares to swords, And your pruning-hooks to javelins, Let the weak say, 'I [am] mighty.'
Read in context
- 8உங்கள் குமாரரையும் உங்கள் குமாரத்திகளையும் யூதா புத்திரரின் கையிலேவிற்பேன்; இவர்கள் அவர்களைத் தூரதேசத்தாராகிய சபேயரிடத்தில் விற்றுப்போடுவார்கள்; கர்த்தர் இதைச் சொன்னார்.
- 9இதைப் புறஜாதிகளுக்குள்ளே கூறுங்கள்; யுத்தத்துக்கு ஆயத்தம்பண்ணுங்கள், பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; யுத்தவீரர் எல்லாரும் சேர்ந்து ஏறிவரக்கடவர்கள்.
- 10உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.
- 11சகல ஜாதிகளே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஏகமாய் வந்து கூடுங்கள்; கர்த்தாவே, நீரும் அங்கே உம்முடைய பராக்கிரமசாலிகளை இறங்கப்பண்ணுவீராக.
- 12ஜாதிகள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள ஜாதிகளை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன்.
Cross references
- Zechariah 12:8 சகரியா 12:8அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாகத் தேவனைப்போலும்கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள்.
- Micah 4:3 மீகா 4:3அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
- Isaiah 2:4 ஏசாயா 2:4அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
- 2 Chronicles 25:8 2 நாளாகமம் 25:8போக மனதானால் நீர் போம், காரியத்தை நடத்தும்; யுத்தத்திற்குத் திடன்கொண்டு நில்லும்; தேவன் உம்மைச் சத்துருவுக்கு முன்பாக விழப்பண்ணுவார்; ஒத்தாசை செய்யவும் விழப்பண்ணவும் தேவனாலே கூடும் என்றான்.
- Luke 22:36 லூக்கா 22:36அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.