Joel 3:9 in Tamil
இதைப் புறஜாதிகளுக்குள்ளே கூறுங்கள்; யுத்தத்துக்கு ஆயத்தம்பண்ணுங்கள், பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; யுத்தவீரர் எல்லாரும் சேர்ந்து ஏறிவரக்கடவர்கள்.
Ithaip purajaathigalukkullae koorungal; yuththaththukku aayaththambannungal, paraakkiramasaaligalai ezhuppungal; yuththaveerar ellaarum saernthu aerivarakkadavarkal.
Joel 3:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இதை அந்நியமக்களுக்குள்ளே அறிவியுங்கள்; போருக்கு ஆயத்தம்செய்யுங்கள்; பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; போர்வீரர்கள் எல்லோரும் சேர்ந்து ஏறிவரட்டும்.
- Open Tamil Contemporary Version
- பிற நாடுகளிடையே இதை அறிவியுங்கள்; யுத்தத்திற்குத் தயாராகுங்கள்; இராணுவவீரரை எழுப்புங்கள்; போர்வீரர்கள் அனைவரும் நெருங்கிப்போய் தாக்கட்டும்.
- Tamil Easy Reading Version
- நாடுகளுக்கு இவற்றை அறிவியுங்கள். போருக்குத் தயாராகுங்கள். வலிமையுள்ளவர்களை எழுப்புங்கள். போர்வீரர்கள் எல்லோரும் நெருங்கி வரட்டும். அவர்கள் மேலே வரட்டும்.
Joel 3:9 in English
- King James Version (KJV)
- Proclaim ye this among the Gentiles; Prepare war, wake up the mighty men, let all the men of war draw near; let them come up:
- World English Bible (WEB)
- Proclaim this among the nations: “Prepare for war! Stir up the mighty men. Let all the warriors draw near. Let them come up.
- American Standard Version (ASV)
- Proclaim ye this among the nations; prepare war; stir up the mighty men; let all the men of war draw near, let them come up.
- Bible in Basic English (BBE)
- Give this out among the nations; make ready for war: get the strong men awake; let all the men of war come near, let them come up.
- Darby Translation (DBY)
- Proclaim this among the nations: prepare war, arouse the mighty men, let all the men of war draw near, let them come up.
- Webster's Bible (WBS)
- Proclaim ye this among the Gentiles; Prepare war, wake up the mighty men, let all the men of war draw near; let them come up:
- Young's Literal Translation (YLT)
- Proclaim ye this among nations, Sanctify a war, stir up the mighty ones, Come nigh, come up, let all the men of war.
Read in context
- 7இதோ, நீங்கள் அவர்களை விற்றுப்போட்ட அவ்விடத்திலிருந்து நான் அவர்களை எழும்பிவரப்பண்ணி, நீங்கள் சரிக்கட்டினதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்து,
- 8உங்கள் குமாரரையும் உங்கள் குமாரத்திகளையும் யூதா புத்திரரின் கையிலேவிற்பேன்; இவர்கள் அவர்களைத் தூரதேசத்தாராகிய சபேயரிடத்தில் விற்றுப்போடுவார்கள்; கர்த்தர் இதைச் சொன்னார்.
- 9இதைப் புறஜாதிகளுக்குள்ளே கூறுங்கள்; யுத்தத்துக்கு ஆயத்தம்பண்ணுங்கள், பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; யுத்தவீரர் எல்லாரும் சேர்ந்து ஏறிவரக்கடவர்கள்.
- 10உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக.
- 11சகல ஜாதிகளே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஏகமாய் வந்து கூடுங்கள்; கர்த்தாவே, நீரும் அங்கே உம்முடைய பராக்கிரமசாலிகளை இறங்கப்பண்ணுவீராக.
Cross references
- Jeremiah 46:3–4 எரேமியா 46:3–4கேடகங்களையும் பரிசைகளையும் ஆயத்தம்பண்ணி, யுத்தத்துக்கு வாருங்கள். குதிரைவீரரே, குதிரைகளின்மேல் சேணங்களை வைத்து ஏறி, தலைச்சீராயை அணிந்துகொண்டு நில்லுங்கள்; ஈட்டிகளைத் துலக்கி, கவசங்களைத்தரித்துக்கொள்ளுங்கள்.
- Isaiah 8:9–10 ஏசாயா 8:9–10ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள், ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார்.
- Ezekiel 38:7 எசேக்கியேல் 38:7நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு.
- Jeremiah 31:10 எரேமியா 31:10ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக்காப்பார் என்று சொல்லுங்கள்.
- Ezekiel 21:21–22 எசேக்கியேல் 21:21–22பாபிலோன் ராஜா இரண்டு வழிகளின் முனையாகிய வழிப்பிரிவிலே நிமித்தம் பார்க்கிறதற்காக நிற்பான்; அம்புகளைத் தீட்டி, விக்கிரகங்களை உசாவி, ஈரலால் குறிபார்ப்பான். தலைவரை நியமிக்கிறதற்கும், சங்காரஞ்செய்யும்படி ஆர்ப்பரிக்கிறதற்கும், கெம்பீரமாய்ச் சத்தமிடுகிறதற்கும், வாசல்களை முட்டும் யந்திரங்களை வைக்கிறதற்கும், மண்மேடு போடுகிறதற்கும், கொத்தளங்களைக் கட்டுகிறதற்கும், எருசலேமைக்குறித்து நிமித்தம் பார்க்குதல் அவனுடைய வலதுபுறத்திலே உண்டாயிருக்கும்.
- Psalm 96:10 சங்கீதம் 96:10கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள்.
- Jeremiah 50:2 எரேமியா 50:2பாபிலோன் பிடிபட்டது; பேல் வெட்கப்பட்டது; மெரொதாக் நொறுங்குண்டது; அதினுடைய சிலைகள் இலச்சையடைந்தது; அதினுடைய விக்கிரகங்கள் நொறுங்கிப்போயின என்று ஜாதிகளுக்குள்ளே அறிவித்துப் பிரசித்தம்பண்ணுங்கள்; இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம்பண்ணுங்கள்.
- Isaiah 34:1 ஏசாயா 34:1ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்கக்கடவது.
- Micah 3:5 மீகா 3:5தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்று சொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக் கொடாதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தம்பண்ணி, என் ஜனத்தை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய்க் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.