Joshua 12:2 in Tamil
அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாப்போக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும்,
Antha raajaakkalil, esponil kudiyiruntha emoriyarin raajaavaagiya seegon, arnon aatrangaraiyilirukkira aarovaer thodangi aatrin nadumaiyamum paathik keelaeyaaththumudpada ammon puththirarin ellaiyaana yaappokku aarumattumulla thaesaththaiyum,
Joshua 12:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேர் துவங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத் உட்பட அம்மோனியர்களின் எல்லையான யாப்போக்கு ஆறுவரையுள்ள தேசத்தையும்,
- Open Tamil Contemporary Version
- எமோரிய அரசன் சீகோன் எஸ்போனில் ஆட்சிசெய்தான். அவனுடைய ஆட்சி அர்னோன் கணவாயின் ஓரத்தில் உள்ள அரோயேர் தொடங்கி, அர்னோன் கணவாயின் நடுப்பகுதி வழியாக யாப்போக் ஆறுவரை இருந்தது. யாப்போக் ஆறு அம்மோனியரின் எல்லையாயிருந்தது. இது கீலேயாத்தின் அரைப்பகுதியை உள்ளடக்கியிருந்தது.
- Tamil Easy Reading Version
- அவர்கள் எஸ்போன் நகரில் வாழ்ந்த எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்தனர். அவன் அர்னோன் பள்ளத்தாக்கிலுள்ள ஆரோவேரிலிருந்து யாபோக் நதி வரைக்குமுள்ள தேசத்தை ஆண்டு வந்தான். பள்ளத்தாக்கின் நடுவில் அவன் தேசத்தின் எல்லை (தேசம்) ஆரம்பித்தது. இது அம்மோனியரோடு அவர்களின் எல்லையாக இருந்தது. கீலேயாத்தின் பாதிப் பகுதியும் சீகோனின் ஆளுகைக்குட்பட்டிருந்தது.
Joshua 12:2 in English
- King James Version (KJV)
- Sihon king of the Amorites, who dwelt in Heshbon, [and] ruled from Aroer, which [is] upon the bank of the river Arnon, and from the middle of the river, and from half Gilead, even unto the river Jabbok, [which is] the border of the children of Ammon;
- World English Bible (WEB)
- Sihon king of the Amorites, who lived in Heshbon, and ruled from Aroer, which is on the edge of the valley of the Arnon, and the middle of the valley, and half Gilead, even to the river Jabbok, the border of the children of Ammon;
- American Standard Version (ASV)
- Sihon king of the Amorites, who dwelt in Heshbon, and ruled from Aroer, which is on the edge of the valley of the Arnon, and [the city that is in] the middle of the valley, and half Gilead, even unto the river Jabbok, the border of the children of Ammon;
- Bible in Basic English (BBE)
- Sihon, king of the Amorites, who was living in Heshbon, ruling from Aroer, which is on the edge of the valley of the Arnon, and the town in the middle of the valley, and half Gilead, as far as the river Jabbok, the limits of the children of Ammon;
- Darby Translation (DBY)
- Sihon the king of the Amorites, who dwelt at Heshbon, [and] ruled from Aroer, which is upon the bank of the river Arnon, and from the middle of the ravine, and over half Gilead, as far as the river Jabbok, [which is] the border of the children of Ammon;
- Webster's Bible (WBS)
- Sihon king of the Amorites, who dwelt in Heshbon, [and] ruled from Aroer, which [is] upon the bank of the river Arnon, and from the middle of the river, and from half Gilead, even to the river Jabbok, [which is] the border of the children of Ammon;
- Young's Literal Translation (YLT)
- Sihon, king of the Amorite, who is dwelling in Heshbon, ruling from Aroer which [is] on the border of the brook Arnon, and the middle of the brook, and half of Gilead, and unto Jabok the brook, the border of the Bene-Ammon;
Read in context
- 1யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள.
- 2அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாப்போக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும்,
- 3சமனான வெளிதுவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரோத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல்மட்டும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான்.
- 4இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி,
Cross references
- Genesis 32:22 ஆதியாகமம் 32:22இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான்.
- Numbers 21:23–30 எண்ணாகமம் 21:23–30சீகோன் தன் எல்லைவழியாய்க்கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல், தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான். இஸ்ரவேலர் அவனைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அர்னோன் தொடங்கி அம்மோன் புத்திரரின் தேசத்தைச்சார்ந்தயாப்போக்குவரைக்குமுள்ள அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன் புத்திரரின் எல்லை அரணிப்பானதாயிருந்தது. இஸ்ரவேலர் அந்தப் பட்டணங்கள் யாவையும் பிடித்து, எஸ்போனிலும் அதைச் சார்ந்த எல்லாக் கிராமங்களிலும் எமோரியருடைய எல்லாப் பட்டணங்களிலும் குடியிருந்தார்கள். எஸ்போனானது எமோரியரின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாயிருந்தது; அவன் மோவாபியரின் முந்தின ராஜாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அர்னோன் வரைக்கும் இருந்த அவன் தேசத்தையெல்லாம் அவன் கையிலிருந்து பறித்துக்கொண்டான். அதினாலே கவிகட்டுகிறவர்கள்: எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் ஸ்திரமாய்க் கட்டப்படுவதாக. எஸ்போனிலிருந்து அக்கினியும் சீகோனுடைய பட்டணத்திலிருந்துஜுவாலையும் புறப்பட்டு, மோவாபுடைய ஆர் என்னும் ஊரையும், அர்னோனுடைய மேடுகளிலுள்ள ஆண்டவமார்களையும்பட்சித்தது. ஐயோ, மோவாபே, கேமோஷ் தேவனின் ஜனமே, நீ நாசமானாய்; தப்பி ஓடின தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குச் சிறைகளாக ஒப்புக்கொடுத்தான். அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம் தீபோன் ஊர்வரைக்கும் நாசமாயிற்று; மேதேபாவுக்குச் சமீபமான நோப்பா பட்டணபரியந்தம் அவர்களைப் பாழாக்கினோம் என்று பாடினார்கள்.
- Deuteronomy 3:6–17 உபாகமம் 3:6–17அவைகளையும் சங்காரம்பண்ணினோம்; நாம் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்ததுபோல, அந்த எல்லாப் பட்டணங்களிலுமுள்ள புருஷரையும் ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் சங்காரம்பண்ணினோம். ஆனாலும் பட்டணங்களிலுள்ள ஆஸ்தியையும் சகல மிருகஜீவன்களையும் நமக்கென்று கொள்ளையிட்டோம். இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்கி, எர்மோன் மலைவரைக்குமுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் எமோரியருடைய இரண்டு ராஜாக்களிடத்திலுமிருந்துபிடித்தோம். சீதோனியர் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியரோ அதைச் சேனீர் என்கிறார்கள். சமனான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்யத்தின் பட்டணங்கள்மட்டுமுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம். மீந்திருந்த இராட்சதரில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன்மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினாற்செய்த அவனுடைய கட்டில் மனிதருடைய கை முழத்தின்படியே, ஒன்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; அது அம்மோன் புத்திரருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா? அக்காலத்திலே சுதந்தரமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் தொடங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன். கீலேயாத்தின் மற்றப் பங்கையும், ஓகின் ராஜ்யமாயிருந்த பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்குக் கொடுத்ததும் அன்றி, இராட்சததேசமெனப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் சீமை யாவையும் கொடுத்தேன். மனாசேயின் குமாரனாகிய யாவீர் அர்கோப் சீமை முழுவதையும் கேசூரியர்மாகாத்தியர் என்பவர்களுடைய எல்லை மட்டும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பேரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது. மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன். மேலும் கீலேயாத் தொடங்கி அர்னோன் நதி ஓடுகிற பள்ளத்தாக்கும், கடையாந்தரமுமான அம்மோன் புத்திரரின் எல்லையாகிய யாபோக்கு ஆறுமட்டும் இருக்கிற தேசத்தையும், கின்னரேத் தொடங்கி அஸ்தோத்பிஸ்காவுக்குத் தாழ்வாய்க் கிழக்கே இருக்கிற உப்புக்கடலான சமனான வெளியின் கடல்மட்டும், யோர்தானின் எல்லைக்குள் அடங்கிய சமனான வெளியையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன்.
- Psalm 136:19–20 சங்கீதம் 136:19–20எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
- Judges 11:13 நியாயாதிபதிகள் 11:13அம்மோன் புத்திரரின் ராஜா யெப்தாவின் ஸ்தானாபதிகளை நோக்கி: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவக்கி யாபோக்மட்டும், யோர்தான்மட்டும் இருக்கிற என் தேசத்தைக் கட்டிக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாய்த் திரும்பக் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லுங்கள் என்றான்.
- Psalm 135:11 சங்கீதம் 135:11எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து,
- Judges 11:22 நியாயாதிபதிகள் 11:22யாபோக்மட்டும், வனாந்தரம்துவக்கியோர்தான்மட்டும் இருக்கிற எமோரியரின் எல்லையையெல்லாம் சுதந்தரமாய்க்கட்டிக்கொண்டார்கள்.
- Nehemiah 9:22 நெகேமியா 9:22அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.
- Deuteronomy 2:24–37 உபாகமம் 2:24–37நீங்கள் எழுந்து பிரயாணம்பண்ணி, அர்னோன் ஆற்றைக் கடந்துபோங்கள்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் என்னும் எமோரியனையும் அவன் தேசத்தையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; இதுமுதல் அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அவனோடே யுத்தஞ்செய். வானத்தின்கீழ் எங்குமுள்ள ஜனங்கள் உன்னாலே திகிலும் பயமும் அடையும்படி செய்ய இன்று நான் தொடங்குவேன்; அவர்கள் உன் கீர்த்தியைக் கேட்டு, உன்னிமித்தம் நடுங்கி, வேதனைப்படுவார்கள் என்றார். அப்பொழுது நான் கெதெமோத் வனாந்தரத்திலிருந்து எஸ்போனின் ராஜாவாகிய சீகோனிடத்தில், சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் உம்முடைய தேசத்தைக் கடந்துபோகும்படி உத்தரவுகொடும்; வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் பெரும்பாதை வழியாய் நடப்பேன். சேயீரில் குடியிருக்கிற ஏசாவின் புத்திரரும், ஆர் பட்டணத்தில் குடியிருக்கிற மோவாபியரும் எனக்குச் செய்ததுபோல, நீரும், நான் யோர்தானைக் கடந்து, எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் சேருமட்டும், எனக்குப் புசிக்க ஆகாரத்தையும் குடிக்கத் தண்ணீரையும் கிரயத்துக்குத்தாரும்; நான் கால்நடையாய்க் கடந்து போகமாத்திரம் உத்தரவுகொடும் என்று சொல்லி அனுப்பினேன். ஆனாலும் தன் தேசத்தைக் கடந்து போகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவன் தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவன் தேசத்தை வசப்படுத்தி, சுதந்தரித்துக்கொள் என்றார். சீகோன் தன்னுடைய எல்லா ஜனங்களோடுங்கூட நம்மோடே யுத்தம்பண்ணப் புறப்பட்டு, யாகாசிலே வந்தான். அவனை நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவன் குமாரரையும் அவனுடைய சகல ஜனங்களையும் முறிய அடித்து, அக்காலத்தில் அவன் பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த ஸ்திரீ புருஷரையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் சங்காரம்பண்ணினோம். மிருகஜீவன்களையும் நாம் பிடித்த பட்டணங்களில் கொள்ளையடித்தபொருள்களையுமாத்திரம் நமக்கென்று வைத்துக்கொண்டோம். அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும் ஆற்றண்டையில் இருக்கிற பட்டணமும் தொடங்கி, கீலேயாத்வரைக்கும் நமக்கு எதிர்த்துநிற்கத்தக்க அரணிப்பான பட்டணம் இருந்ததில்லை, எல்லாவற்றையும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார். அம்மோன் புத்திரருடைய தேசத்தையும், யாபோக் ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.
Original words (Hebrew)
- Sihon · H5511סִיחוֹן Çîychôwn
- king · H4428מֶלֶךְ melek
- Amorites · H567אֱמֹרִי ʼĔmôrîy
- dwelt · H3427יָשַׁב yâshab
- Heshbon · H2809חֶשְׁבּוֹן Cheshbôwn
- ruled · H4910מָשַׁל mâshal
- Aroer · H6177עֲרוֹעֵר ʻĂrôwʻêr
- bank · H8193שָׂפָה sâphâh
- river · H5158נַחַל nachal
- Arnon · H769אַרְנוֹן ʼArnôwn
- middle · H8432תָּוֶךְ tâvek
- river · H5158נַחַל nachal
- half · H2677חֵצִי chêtsîy
- Gilead · H1568גִּלְעָד Gilʻâd
- river · H5158נַחַל nachal
- Jabbok · H2999יַבֹּק Yabbôq
- border · H1366גְּבוּל gᵉbûwl
- children · H1121בֵּן bên
- Ammon · H5983עַמּוֹן ʻAmmôwn
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.