Joshua 9:11 in Tamil
ஆகையால், எங்கள் மூப்பரும் எங்கள் தேசத்துக் குடிகளெல்லாரும் எங்களை நோக்கி: உங்கள் கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடத்தில்: நாங்கள் உங்கள் அடியார், எங்களோடே உடன்படிக்கை பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள்.
Aagaiyaal, engal moopparum engal thaesaththuk kudigalellaarum engalai nokki: ungal kaigalil vazhikku aagaaram eduththukkondu, avarkalukku ethirkonduboy, avarkalidaththil: naangal ungal adiyaar, engalodae udanpadikkai pannavaendum endru sollachonnaarkal.
Joshua 9:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகவே, எங்கள் மூப்பர்களும் எங்கள் தேசத்தின் குடிகளெல்லோரும் எங்களை நோக்கி: உங்களுடைய கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடம்: நாங்கள் உங்களுடைய அடியார்கள், எங்களோடு உடன்படிக்கை செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள்.
- Open Tamil Contemporary Version
- எனவே எங்கள் சபைத்தலைவர்களும், எங்கள் தேசத்தில் வாழும் எல்லோரும் எங்களிடம், ‘உங்கள் பயணத்துக்குத் தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு இஸ்ரயேலரிடம் போய், நாங்கள் உங்கள் அடிமைகளாயிருப்போம்; எங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்யுங்கள் என்று சொல்லுங்கள்’ என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- எனவே எங்கள் மூப்பர்களும், ஜனங்களும் எங்களை நோக்கி, ‘உங்கள் பயணத்திற்குத் தேவையான உணவை எடுத்துச் செல்லுங்கள்.’ இஸ்ரவேலரின் ஜனங்களைப் போய்ச் சந்தித்து, அவர்களிடம், ‘நாங்கள் உங்கள் பணியாட்கள். எங்களோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள்’ என்று சொல்லுங்கள்” என்றார்கள்.
Joshua 9:11 in English
- King James Version (KJV)
- Wherefore our elders and all the inhabitants of our country spake to us, saying, Take victuals with you for the journey, and go to meet them, and say unto them, We [are] your servants: therefore now make ye a league with us.
- World English Bible (WEB)
- Our elders and all the inhabitants of our country spoke to us, saying, ‘Take supplies in your hand for the journey, and go to meet them. Tell them, “We are your servants. Now make a covenant with us.”’
- American Standard Version (ASV)
- And our elders and all the inhabitants of our country spake to us, saying, Take provision in your hand for the journey, and go to meet them, and say unto them, We are your servants: and now make ye a covenant with us.
- Bible in Basic English (BBE)
- So the responsible men and all the people of our country said to us, Take food with you for the journey and go to them, and say to them, We are your servants: so now make an agreement with us.
- Darby Translation (DBY)
- And our elders and all the inhabitants of our country spoke to us, saying, Take victuals in your hand for the way, and go to meet them, and say to them, We are your servants, and now make a covenant with us.
- Webster's Bible (WBS)
- Wherefore our elders, and all the inhabitants of our country spoke to us, saying, Take provisions with you for the journey, and go to meet them, and say to them, We [are] your servants: therefore now make ye a league with us:
- Young's Literal Translation (YLT)
- 'And our elders, and all the inhabitants of our land speak unto us, saying, Take in your hand provision for the way, and go to meet them, and ye have said unto them, Your servants we [are], and now, make with us a covenant;
Read in context
- 9அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய கீர்த்தியையும், அவர் எகிப்திலே செய்த யாவையும்,
- 10அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு அப்புறத்திலிருந்த எமோரியரின் இரண்டு இராஜாக்களுக்கும் செய்த யாவையும் கேள்விப்பட்டோம்.
- 11ஆகையால், எங்கள் மூப்பரும் எங்கள் தேசத்துக் குடிகளெல்லாரும் எங்களை நோக்கி: உங்கள் கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடத்தில்: நாங்கள் உங்கள் அடியார், எங்களோடே உடன்படிக்கை பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள்.
- 12உங்களிடத்தில் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்கள் வழிப்பிரயாணத்துக்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது.
- 13நாங்கள் இந்தத் திராட்சரசத் துருத்திகளை நிரப்புகையில் புதிதாயிருந்தது; ஆனாலும் இதோ, கிழிந்துபோயிற்று; எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாலே பழசாய்ப்போயிற்று என்றார்கள்.
Cross references
- Esther 8:17 எஸ்தர் 8:17ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிற பயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூத மார்க்கத்தில் அமைந்தார்கள்.
- Joshua 9:8 யோசுவா 9:8அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்.
- Luke 9:3 லூக்கா 9:3அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம்.
- Matthew 10:9–10 மத்தேயு 10:9–10உங்கள் கச்சைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது, வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான்.
- Genesis 43:12 ஆதியாகமம் 43:12பணத்தை இரட்டிப்பாய் உங்கள் கைகளில் கொண்டுபோங்கள்; சாக்குகளின் வாயிலே திரும்பக் கொண்டுவந்த பணத்தையும் கொண்டுபோங்கள். அது கைப்பிசகாய் வந்திருக்கும்.
- Joshua 1:11 யோசுவா 1:11நீங்கள் பாளயத்தை உருவ நடந்து போய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்கு போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்றுநாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச் சொன்னான்.
Original words (Hebrew)
- elders · H2205זָקֵן zâqên
- inhabitants · H3427יָשַׁב yâshab
- country · H776אֶרֶץ ʼerets
- spake · H559אָמַר ʼâmar
- saying · H559אָמַר ʼâmar
- Take · H3947לָקַח lâqach
- victuals · H6720צֵידָה tsêydâh
- you · H3027יָד yâd
- journey · H1870דֶּרֶךְ derek
- go · H3212יָלַךְ yâlak
- meet · H7125קִרְאָה qirʼâh
- say · H559אָמַר ʼâmar
- servants · H5650עֶבֶד ʻebed
- make · H3772כָּרַת kârath
- league · H1285בְּרִית bᵉrîyth
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.