Judges 18:2 in Tamil
ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோரிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய், அங்கே இராத்தங்கினார்கள்.
Aagaiyaal thaesaththai ulavubaarththu varumbadi, thaan puththirar thangal koththiraththilae palaththa manusharaagiya ainthu paeraith thangal ellaigalil irukkira soraavilum esthaavorilumirunthu anuppi: neengal poy, thaesaththai aaraaynthubaarththu vaarungal endru avarkalodae sonnaarkal; avarkal eppiraayeem malaiththaesaththil irukkira meegaavin veedumattum poy, angae iraaththanginaarkal.
Judges 18:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் மக்கள் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனிதர்களாகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலும் இருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுவரை போய், அங்கே இரவு தங்கினார்கள்.
- Open Tamil Contemporary Version
- எனவே, தாண் கோத்திரத்தினர் சோரா, எஸ்தாவோலிலுள்ள தங்கள் எல்லா வம்சத்திலுமிருந்து ஐந்து வீரரைத் தங்கள் பிரதிநிதிகளாக அனுப்பினார்கள். அவர்கள் அந்த மனிதரிடம், “நீங்கள் போய் எப்பிராயீம் மலைநாட்டை ஆராய்ந்துபார்த்து வாருங்கள்” என்று சொன்னார்கள். அதன்படி அந்த மனிதர்கள் எப்பிராயீம் மலைநாட்டிற்கு வந்து, அங்கே மீகாவின் வீட்டில் இரவு தங்கினார்கள்.
- Tamil Easy Reading Version
- எனவே தாண் கோத்திரத்தினர் ஏதேனும் நிலத்தைப் பார்த்து வருவதற்காக 5 வீரர்களை அனுப்பினார்கள். அவர்கள் குடியேற ஏற்ற இடத்தைக் கண்டு பிடிப்பதற்காகச் சென்றனர். அந்த 5 மனிதர்களும் சோரா, எஸ்தாவோல் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தாணின் கோத்திரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களிடம் “போய் நமக்காக நிலத்தைப் பார்த்து வாருங்கள்” என்று சொல்லப்பட்டது. அந்த 5 மனிதர்களும் எப்பிராயீமின் மலை நாட்டிற்கு வந்தனர். அவர்கள் மீகாவின் வீட்டிற்கு வந்து, இரவை அங்குக் கழித்தனர்.
Judges 18:2 in English
- King James Version (KJV)
- And the children of Dan sent of their family five men from their coasts, men of valour, from Zorah, and from Eshtaol, to spy out the land, and to search it; and they said unto them, Go, search the land: who when they came to mount Ephraim, to the house of Micah, they lodged there.
- World English Bible (WEB)
- The children of Dan sent five men of their family from their whole number, men of valor, from Zorah and from Eshtaol, to spy out the land and to search it. They said to them, “Go, explore the land!” They came to the hill country of Ephraim, to the house of Micah, and lodged there.
- American Standard Version (ASV)
- And the children of Dan sent of their family five men from their whole number, men of valor, from Zorah, and from Eshtaol, to spy out the land, and to search it; and they said unto them, Go, search the land. And they came to the hill-country of Ephraim, unto the house of Micah, and lodged there.
- Bible in Basic English (BBE)
- So the children of Dan sent five men from among their number, strong men, from Zorah and from Eshtaol, to take a look at the land and make a search through it; and they said to them, Go and make a search through the land; and they came to the hill-country of Ephraim, to the house of Micah, where they made a stop for the night.
- Darby Translation (DBY)
- And the children of Dan sent of their family five men of their whole number, men of valour, from Zoreah and from Eshtaol, to spy out the land, and to examine it; and they said to them, Go, examine the land. And they came to the hill-country of Ephraim, to the house of Micah, and lodged there.
- Webster's Bible (WBS)
- And the children of Dan sent of their family five men from their borders, men of valor, from Zorah, and from Eshtaol, to explore the land, and to search it; and they said to them, Go, search the land: who when they came to mount Ephraim, to the house of Micah, they lodged there.
- Young's Literal Translation (YLT)
- And the sons of Dan send, out of their family, five men of them, men, sons of valour, from Zorah, and from Eshtaol, to traverse the land, and to search it, and they say unto them, 'Go, search the land;' and they come into the hill-country of Ephraim, unto the house of Micah, and lodge there.
Read in context
- 1அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை.
- 2ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோரிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய், அங்கே இராத்தங்கினார்கள்.
- 3அவர்கள் மீகாவின் வீட்டண்டை இருக்கையில், லேவியனான வாலிபனுடைய சத்தத்தை அறிந்து, அங்கே அவனிடத்தில் போய்: உன்னை இங்கே அழைத்துவந்தது யார்? இவ்விடத்தில் என்ன செய்கிறாய்? உனக்கு இங்கே இருக்கிறது என்ன என்று அவனிடத்தில் கேட்டார்கள்.
- 4அதற்கு அவன்: இன்ன இன்னபடி மீகா எனக்குச் செய்தான்; எனக்குச் சம்பளம் பொருந்தினான்; அவனுக்கு ஆசாரியனானேன் என்றான்.
Cross references
- Judges 13:25 நியாயாதிபதிகள் 13:25அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.
- Joshua 2:1 யோசுவா 2:1நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய்வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள்.
- Judges 18:11 நியாயாதிபதிகள் 18:11அப்பொழுது சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தாண்கோத்திரத்தாரில் அறுநூறுபேர் ஆயுதபாணிகளாய் அங்கேயிருந்து புறப்பட்டுப்போய்,
- Judges 18:8 நியாயாதிபதிகள் 18:8சோராவிலும் எஸ்தாவோவிலும் இருக்கிற தங்கள் சகோதரரிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். அவர்கள் சகோதரர்: நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள்.
- Numbers 13:17 எண்ணாகமம் 13:17அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,
- Judges 13:2 நியாயாதிபதிகள் 13:2அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள்.
- Judges 19:1 நியாயாதிபதிகள் 19:1இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்நாட்களிலே, எப்பிராயீம் மலைகள் அருகே பரதேசியாய்த் தங்கின ஒரு லேவியன் இருந்தான்; அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராளாகிய ஒரு ஸ்திரீயைத் தனக்கு மறுமனையாட்டியாகக்கொண்டிருந்தான்.
- Joshua 19:41 யோசுவா 19:41அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,
- Proverbs 20:18 நீதிமொழிகள் 20:18ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு.
- Luke 14:31 லூக்கா 14:31அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக்கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ?
- Judges 19:18 நியாயாதிபதிகள் 19:18அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் புறங்கள்மட்டும் போகிறோம்; நான் அவ்விடத்தான்; யூதாவிலுள்ள பெத்லெகேம் மட்டும் போய்வந்தேன்; நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை.
Original words (Hebrew)
- children · H1121בֵּן bên
- Dan · H1835דָּן Dân
- sent · H7971שָׁלַח shâlach
- family · H4940מִשְׁפָּחָה mishpâchâh
- five · H2568חָמֵשׁ châmêsh
- men · H582אֱנוֹשׁ ʼĕnôwsh
- coasts · H7098קָצָה qâtsâh
- men · H1121בֵּן bên
- valour · H2428חַיִל chayil
- Zorah · H6881צׇרְעָה Tsorʻâh
- Eshtaol · H847אֶשְׁתָּאֹל ʼEshtâʼôl
- spy · H7270רָגַל râgal
- land · H776אֶרֶץ ʼerets
- search · H2713חָקַר châqar
- said · H559אָמַר ʼâmar
- Go · H3212יָלַךְ yâlak
- search · H2713חָקַר châqar
- land · H776אֶרֶץ ʼerets
- came · H935בּוֹא bôwʼ
- mount · H2022הַר har
- Ephraim · H669אֶפְרַיִם ʼEphrayim
- house · H1004בַּיִת bayith
- Micah · H4318מִיכָה Mîykâh
- lodged · H3885לוּן lûwn
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.