Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Judges 18:27 in Tamil

அவர்களோ மீகா உண்டுபண்ணினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் ஜனங்களிடத்தில் சேர்த்து, அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டார்கள்.

Avarkalo meegaa undubanninavaigalaiyum, avanudaiya aasaariyanaiyum konduboy, payamillaamal sugamaayirukkira laayees oor janangalidaththil saerththu, avarkalaip pattayak karukkinaal vetti, pattanaththai akkiniyaal sutteriththuppottaarkal.

Download verse image

Judges 18:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களோ மீகா உண்டாக்கினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் மக்களிடத்தில் சேர்த்து, அவர்களைக் கூர்மையான பட்டயத்தால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் எரித்துப்போட்டார்கள்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது தாண் மக்கள் மீகா செய்திருந்த தெய்வங்களை எடுத்துக்கொண்டு, அவனுடைய பூசாரியையும் கூட்டிக்கொண்டு லாயீசுக்கு அங்கே அமைதியோடும், தன்னம்பிக்கையோடும் வாழ்ந்த மக்களுக்கு விரோதமாய்ப் போனார்கள். அவர்கள் அங்குள்ளவர்களை வாளால் வெட்டி அப்பட்டணத்தைத் தீக்கிரையாக்கினார்கள்.
Tamil Easy Reading Version
மீகா செய்த விக்கிரகங்களைத் தாணின் ஆட்கள் எடுத்து சென்றனர். மீகாவுடனிருந்த ஆசாரியனையும் அவர்கள் தங்களுடன் அழைத்து லாயீஸிக்கு வந்தனர். அங்குள்ள ஜனங்கள் அமைதியாக வாழ்ந்தனர். அவர்கள் எந்தத் தாக்குதலையும் எதிர்பார்க்கவில்லை. தாணின் ஆட்கள் தங்கள் வாளால் அவர்களை கொன்றுப் போட்டு, அவர்கள் நகரத்தை எரித்தனர்.

Judges 18:27 in English

King James Version (KJV)
And they took [the things] which Micah had made, and the priest which he had, and came unto Laish, unto a people [that were] at quiet and secure: and they smote them with the edge of the sword, and burnt the city with fire.
World English Bible (WEB)
They took that which Micah had made, and the priest whom he had, and came to Laish, to a people quiet and unsuspecting, and struck them with the edge of the sword; then they burned the city with fire.
American Standard Version (ASV)
And they took that which Micah had made, and the priest whom he had, and came unto Laish, unto a people quiet and secure, and smote them with the edge of the sword; and they burnt the city with fire.
Bible in Basic English (BBE)
And they took that which Micah had made, and his priest, and came to Laish, to a people living quietly and without thought of danger, and they put them to the sword without mercy, burning down their town.
Darby Translation (DBY)
And they took that which Micah had made, and the priest that he had had, and came upon Laish, upon a people quiet and secure; and they smote them with the edge of the sword, and burned the city with fire.
Webster's Bible (WBS)
And they took [the things] which Micah had made, and the priest which he had, and came to Laish, to a people [that were] at quiet and secure: and they smote them with the edge of the sword, and burnt the city with fire.
Young's Literal Translation (YLT)
And they have taken that which Micah had made, and the priest whom he had, and come in against Laish, against a people quiet and confident, and smite them by the mouth of the sword, and the city have burnt with fire,

Read in context

  1. 25தாண் புத்திரர் அவனைப் பார்த்து: எங்கள் காதுகள் கேட்கக் கூக்குரல் இடாதே, இட்டால் கோபிகள் உங்கள்மேல் விழுவார்கள்; அப்பொழுது உன் ஜீவனுக்கும் உன் வீட்டாரின் ஜீவனுக்கும் மோசம் வருவித்துக்கொள்வாய் என்று சொல்லி,
  2. 26தங்கள் வழியே நடந்துபோனார்கள்; அவர்கள் தன்னைப்பார்க்கிலும் பலத்தவர்கள் என்று மீகா கண்டு, அவன் தன் வீட்டுக்குத் திரும்பினான்.
  3. 27அவர்களோ மீகா உண்டுபண்ணினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் ஜனங்களிடத்தில் சேர்த்து, அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டார்கள்.
  4. 28அது சீதோனுக்குத் தூரமாயிருந்தது; வேறே மனுஷரோடே அவர்களுக்குச் சம்பந்தமில்லாமலும் இருந்தபடியால், அவர்களைத் தப்புவிப்பார் ஒருவரும் இல்லை; அந்தப் பட்டணம் பெத்ரேகோபுக்குச் சமீபமான பள்ளத்தாக்கில் இருந்தது; அவர்கள் அதைத் திரும்பக் கட்டி, அதிலே குடியிருந்து,
  5. 29பூர்வத்திலே லாயீஸ் என்னும் பேர் கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
Read all of Judges 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.