Joshua 19:47 in Tamil
தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
Thaan puththirarin ellai avarkalukku odukkamaayirunthabadiyaal, avarkal purappattuppoy, laesaeminmael yuththambanni, athaip pidiththu, pattayakkarukkinaal sangariththu, athais suthanthariththukkondu, athilae kudiyirunthu, laesaemukkuth thangal thagappanaagiya thaanudaiya naamaththinpadiyae thaan endru paerittaarkal.
Joshua 19:47 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாண் கோத்திரத்தார்களின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாக இருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்து, பட்டயத்தினால் அழித்து, அதைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்களுடைய முற்பிதாவாகிய தாணுடைய பெயரின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- ஆனால் தாண் கோத்திரத்தாருக்கோ தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலப்பரப்பைத் தமக்குரியதாக்கிக்கொள்வது கடினமாயிருந்தது. எனவே லெஷேம் என்னும் இடத்திற்குச் சென்று அதைத் தாக்கிக் கைப்பற்றினார்கள். அதன் குடிகளை தம் வாளுக்கு இரையாக்கி, அதில் தாங்கள் குடியேறினார்கள். அவர்கள் லெஷேமில் குடியேறி தங்கள் முற்பிதாவின் பெயரின்படி அதற்குத் தாண் என்று பெயரிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- தாணின் ஜனங்கள் அவர்களுக்குரிய தேசத்தைப் பெறுவதில் தொல்லை நேர்ந்தது. பலமான பகைவர்கள் அங்கே இருந்தனர். தாண் ஜனங்களால் அவர்களை எளிதில் வெல்ல முடியவில்லை. லேசேமின் ஜனங்களுக்கு எதிராக தாண் ஜனங்கள் போர் செய்தனர். லேசேமைத் தோற்கடித்து அங்கு வாழ்ந்த ஜனங்களைக் கொன்றனர். லேசேம் என்னும் ஊரில் தாண் ஜனங்கள் வாழ்ந்தனர். அவர்கள் கோத்திரத்தின் தந்தையாகிய தாண் என்ற பெயரை அதற்குக் கொடுத்தனர்.
Joshua 19:47 in English
- King James Version (KJV)
- And the coast of the children of Dan went out [too little] for them: therefore the children of Dan went up to fight against Leshem, and took it, and smote it with the edge of the sword, and possessed it, and dwelt therein, and called Leshem, Dan, after the name of Dan their father.
- World English Bible (WEB)
- The border of the children of Dan went out beyond them; for the children of Dan went up and fought against Leshem, and took it, and struck it with the edge of the sword, and possessed it, and lived therein, and called Leshem, Dan, after the name of Dan their forefather.
- American Standard Version (ASV)
- And the border of the children of Dan went out beyond them; for the children of Dan went up and fought against Leshem, and took it, and smote it with the edge of the sword, and possessed it, and dwelt therein, and called Leshem, Dan, after the name of Dan their father.
- Bible in Basic English (BBE)
- (But the limit of the children of Dan was not wide enough for them; so the children of Dan went up and made war on Leshem and took it, putting it to the sword without mercy, and they took it for their heritage and made a place for themselves there, giving it the name of Leshem-dan, after the name of their father, Dan.)
- Darby Translation (DBY)
- And the border of the children of Dan ended with these; and the children of Dan went up and fought against Leshem, and took it, and smote it with the edge of the sword, and took possession of it, and dwelt in it, and called Leshem, Dan, after the name of Dan their father.
- Webster's Bible (WBS)
- And the border of the children of Dan, went out [too little] for them: therefore the children of Dan went up to fight against Leshem, and took it, and smote it with the edge of the sword, and possessed it, and dwelt in it, and called Leshem, Dan, after the name of Dan their father.
- Young's Literal Translation (YLT)
- And the border of the sons of Dan goeth out from them, and the sons of Dan go up and fight with Leshem, and capture it, and smite it by the mouth of the sword, and possess it, and dwell in it, and call Leshem, Dan, according to the name of Dan their father.
Read in context
- 45யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன்,
- 46மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யாப்போவுக்கு எதிரான எல்லையுமே.
- 47தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
- 48இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.
- 49தேசத்தை அதின் எல்லைகளின்படி சுதந்தரமாகப் பங்கிட்டுத் தீர்ந்தபோது, இஸ்ரவேல் புத்திரர் நூனின் குமாரனாகியயோசுவாவுக்குத் தங்கள் நடுவிலே ஒரு சுதந்தரத்தைக் கொடுத்தார்கள்.
Cross references
- Judges 1:34–35 நியாயாதிபதிகள் 1:34–35எமோரியர் தாண் புத்திரரைப் பள்ளத்தாக்கில் இறங்கவொட்டாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படி நெருக்கினார்கள். எமோரியர் ஏரேஸ் மலைகளிலும் ஆயலோனிலும் சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தாரின் கைபலத்தபடியினால், அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
- Judges 18:1–29 நியாயாதிபதிகள் 18:1–29அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை. ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்து பேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோரிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய், அங்கே இராத்தங்கினார்கள். அவர்கள் மீகாவின் வீட்டண்டை இருக்கையில், லேவியனான வாலிபனுடைய சத்தத்தை அறிந்து, அங்கே அவனிடத்தில் போய்: உன்னை இங்கே அழைத்துவந்தது யார்? இவ்விடத்தில் என்ன செய்கிறாய்? உனக்கு இங்கே இருக்கிறது என்ன என்று அவனிடத்தில் கேட்டார்கள். அதற்கு அவன்: இன்ன இன்னபடி மீகா எனக்குச் செய்தான்; எனக்குச் சம்பளம் பொருந்தினான்; அவனுக்கு ஆசாரியனானேன் என்றான். அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பிரயாணம் அநுகூலமாய்முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள். அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடே போங்கள்; உங்கள் பிரயாணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான். அப்பொழுது அந்த ஐந்து மனுஷரும் புறப்பட்டு, லாயீசுக்குப் போய், அதில் குடியிருக்கிற ஜனங்கள் சீதோனியருடைய வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமரிக்கையும் சுகமுமாய் இருக்கிறதையும், தேசத்திலே அவர்களை அடக்கி ஆள யாதொரு அதிகாரியும் இல்லை என்பதையும், அவர்கள் சீதோனியருக்குத்தூரமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு ஒருவரோடும் கவை காரியம் இல்லை என்பதையும் கண்டு, சோராவிலும் எஸ்தாவோவிலும் இருக்கிற தங்கள் சகோதரரிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். அவர்கள் சகோதரர்: நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள். அதற்கு அவர்கள்: எழும்புங்கள், அவர்களுக்கு விரோதமாய்ப் போவோம் வாருங்கள்; அந்த தேசத்தைப் பார்த்தோம், அது மிகவும் நன்றாயிருக்கிறது, நீங்கள் சும்மாயிருப்பீர்களா? அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி புறப்பட்டுப்போக அசதியாயிராதேயுங்கள். நீங்கள் அங்கே சேரும்போது, சுகமாய்க் குடியிருக்கிற ஜனங்களிடத்தில் சேருவீர்கள்; அந்த தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; தேவன் அதை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அது பூமியிலுள்ள சகல வஸ்துவும் குறைவில்லாமலிருக்கிற இடம் என்றார்கள். அப்பொழுது சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தாண்கோத்திரத்தாரில் அறுநூறுபேர் ஆயுதபாணிகளாய் அங்கேயிருந்து புறப்பட்டுப்போய், யூதாவிலுள்ள கீரியாத்யாரீமிலேபாளயமிறங்கினார்கள்; ஆதலால் அது இந்நாள்வரைக்கும் மக்னிதான் என்னப்படும்; அது கீரியாத்யாரீமின் பின்னாலே இருக்கிறது. பின்பு அவர்கள் அங்கேயிருந்து எப்பிராயீம் மலைக்குப் போய், மீகாவின் வீடு மட்டும் வந்தார்கள். அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனுஷர் தங்கள் சகோதரரைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதை யோசித்துக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்பொழுது அவ்விடத்திற்குத் திரும்பி, மீகாவின் வீட்டில் இருக்கிற லேவியனான வாலிபனின் வீட்டிலே வந்து, அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள். ஆயுதபாணிகளாகிய தாண் புத்திரர் அறுநூறுபேரும் வாசற்படியிலே நின்றார்கள். ஆசாரியனும் ஆயுதபாணிகளாகிய அறுநூறுபேரும் வாசற்படியிலே நிற்கையில், தேசத்தை உளவுபார்க்கப் போய் வந்த அந்த ஐந்து மனுஷர் உள்ளே புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் மீகாவின் வீட்டிற்குள் புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வருகிறபோது, ஆசாரியன் அவர்களைப் பார்த்து: நீங்கள் செய்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவர்கள்: நீ பேசாதே, உன் வாயை மூடிக்கொண்டு, எங்களோடேகூட வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒரே ஒருவன் வீட்டுக்கு ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? இஸ்ரவேலில் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? என்றார்கள். அப்பொழுது ஆசாரியனுடைய மனது இதமியப்பட்டு, அவன் ஏபோத்தையும் சுரூபங்களையும் வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்குள்ளே புகுந்தான். அவர்கள் திரும்பும்படி புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும் பண்டம்பாடிகளையும், தங்களுக்குமுன்னேபோகும்படி செய்தார்கள். அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் புத்திரரைத் தொடர்ந்துவந்து, அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நான் உண்டுபண்ணின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டுபோகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான். தாண் புத்திரர் அவனைப் பார்த்து: எங்கள் காதுகள் கேட்கக் கூக்குரல் இடாதே, இட்டால் கோபிகள் உங்கள்மேல் விழுவார்கள்; அப்பொழுது உன் ஜீவனுக்கும் உன் வீட்டாரின் ஜீவனுக்கும் மோசம் வருவித்துக்கொள்வாய் என்று சொல்லி, தங்கள் வழியே நடந்துபோனார்கள்; அவர்கள் தன்னைப்பார்க்கிலும் பலத்தவர்கள் என்று மீகா கண்டு, அவன் தன் வீட்டுக்குத் திரும்பினான். அவர்களோ மீகா உண்டுபண்ணினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் ஜனங்களிடத்தில் சேர்த்து, அவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டார்கள். அது சீதோனுக்குத் தூரமாயிருந்தது; வேறே மனுஷரோடே அவர்களுக்குச் சம்பந்தமில்லாமலும் இருந்தபடியால், அவர்களைத் தப்புவிப்பார் ஒருவரும் இல்லை; அந்தப் பட்டணம் பெத்ரேகோபுக்குச் சமீபமான பள்ளத்தாக்கில் இருந்தது; அவர்கள் அதைத் திரும்பக் கட்டி, அதிலே குடியிருந்து, பூர்வத்திலே லாயீஸ் என்னும் பேர் கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள்.
Original words (Hebrew)
- coast · H1366גְּבוּל gᵉbûwl
- children · H1121בֵּן bên
- Dan · H1835דָּן Dân
- out · H3318יָצָא yâtsâʼ
- children · H1121בֵּן bên
- Dan · H1835דָּן Dân
- up · H5927עָלָה ʻâlâh
- fight · H3898לָחַם lâcham
- Leshem · H3959לֶשֶׁם Leshem
- took · H3920לָכַד lâkad
- smote · H5221נָכָה nâkâh
- edge · H6310פֶּה peh
- sword · H2719חֶרֶב chereb
- possessed · H3423יָרַשׁ yârash
- dwelt · H3427יָשַׁב yâshab
- called · H7121קָרָא qârâʼ
- Leshem · H3959לֶשֶׁם Leshem
- Dan · H1835דָּן Dân
- name · H8034שֵׁם shêm
- Dan · H1835דָּן Dân
- father · H1אָב ʼâb
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.