Leviticus 11:2 in Tamil
நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்ககத்தக்க ஜீவ ஜந்துக்கள்யாதெனில்:
Neengal isravael puththirarodae sollavaendiyathu ennavendraal, poomiyilirukkira sagala mirugangalilum neengal pusikkagaththakka jeeva janthukkalyaathenil:
Leviticus 11:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- “நீங்கள் இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் சாப்பிடத்தக்க உயிரினங்கள் எவைகள் என்றால்:
- Open Tamil Contemporary Version
- “நீங்கள் இஸ்ரயேலருக்குச் சொல்லவேண்டியதாவது: ‘பூமியில் வாழும் எல்லா மிருகங்களுக்குள்ளும் நீங்கள் சாப்பிடக் கூடியவைகள் இவையே:
- Tamil Easy Reading Version
- “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீங்கள் கூற வேண்டியதாவது: நீங்கள் உண்ணத்தக்க மிருகங்கள் பின்வருவனவாகும்,
Leviticus 11:2 in English
- King James Version (KJV)
- Speak unto the children of Israel, saying, These [are] the beasts which ye shall eat among all the beasts that [are] on the earth.
- World English Bible (WEB)
- “Speak to the children of Israel, saying, ‘These are the living things which you may eat among all the animals that are on the earth.
- American Standard Version (ASV)
- Speak unto the children of Israel, saying, These are the living things which ye may eat among all the beasts that are on the earth.
- Bible in Basic English (BBE)
- Say to the children of Israel: These are the living things which you may have for food among all the beasts on the earth.
- Darby Translation (DBY)
- Speak unto the children of Israel, saying, These are the animals which ye shall eat of all the beasts which are on the earth.
- Webster's Bible (WBS)
- Speak to the children of Israel, saying, These [are] the beasts which ye may eat among all the beasts that [are] on the earth.
- Young's Literal Translation (YLT)
- 'Speak unto the sons of Israel, saying, This [is] the beast which ye do eat out of all the beasts which [are] on the earth:
Read in context
- 1கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
- 2நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்ககத்தக்க ஜீவ ஜந்துக்கள்யாதெனில்:
- 3மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
- 4ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
Cross references
- Matthew 15:11 மத்தேயு 15:11வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
- Hebrews 9:10 எபிரெயர் 9:10இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்றசடங்குகளுமேயல்லாமல் வேறல்ல.
- Leviticus 11:11 லேவியராகமம் 11:11அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவைகளின் மாம்சத்தைப் புசியாதிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக.
- Acts 10:12–14 அப்போஸ்தலருடைய நடபடிகள் 10:12–14அதிலே பூமியிலுள்ள சகலவிதமானநாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான். அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று. அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.
- Leviticus 11:39 லேவியராகமம் 11:39உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத்தொடுகிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
- Leviticus 11:13 லேவியராகமம் 11:13பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்க வேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
- Deuteronomy 14:3–21 உபாகமம் 14:3–21அருவருப்பானதொன்றையும் புசிக்கவேண்டாம். நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும், மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே. மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்; அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத்தொடாமலும் இருப்பீர்களாக. ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம். சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. சுத்தமான சகல பட்சிகளையும் நீங்கள் புசிக்கலாம். நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும், பைரியும், வல்லூறும், சகலவித பருந்தும், சகலவித காகங்களும், தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும், ஆந்தையும், கோட்டானும், நாரையும், கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும், கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வெளவாலுமே. பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் புசிக்கத்தகாதவைகள். சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம். தானாய் இறந்துபோனதொன்றையும்புசிக்கவேண்டாம், உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.
- Leviticus 11:29 லேவியராகமம் 11:29தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,
- Leviticus 11:9 லேவியராகமம் 11:9ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
- Romans 14:2–3 ரோமர் 14:2–3ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும்புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளைமாத்திரம் புசிக்கிறான். புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே.
- Leviticus 11:4 லேவியராகமம் 11:4ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
- Leviticus 11:21 லேவியராகமம் 11:21ஆகிலும், பறக்கிறவைகளில் நாலு காலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.