Leviticus 17:15 in Tamil
தானாய் இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது, புசித்தவன் எவனும், அவன் சுதேசியானாலும் பரதேசியானாலும், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாயிருப்பான்.
Thaanaay iranthubonathaiyaavathu, peerundathaiyaavathu, pusiththavan evanum, avan suthaesiyaanaalum parathaesiyaanaalum, than vasthirangalaith thoyththu, thanneeril muzhugi, saayangaalammattum theettaayiruppaanaaga; pinpu suththamaayiruppaan.
Leviticus 17:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தானாக இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது சாப்பிட்டவன் எவனும் அவன் இஸ்ரவேலனானாலும் அந்நியனானாலும், தன் உடைகளைத் துவைத்து, தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாக இருப்பான்.
- Open Tamil Contemporary Version
- “ ‘தன் நாட்டினனோ அல்லது பிறநாட்டினனோ, இறந்துகிடக்கக் காணப்பட்டதை அல்லது காட்டு மிருகங்களால் கிழிக்கப்பட்டுச் செத்ததை ஒருவன் சாப்பிட்டால், அவன் தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அவன் சம்பிரதாய முறைப்படி மாலைவரை அசுத்தமானவன். அதன்பின் அவன் சுத்தமாவான்.
- Tamil Easy Reading Version
- “இஸ்ரவேலராகிய நீங்களும், உங்களோடு வசிக்கும் அயலார் எவரும் தானாக மரித்துப்போன மிருகத்தையோ, வேறு மிருகத்தாலே கொல்லப்பட்ட மிருகத்தையோ உண்ணக் கூடாது, அது உங்களுக்குத் தீட்டாயிருக்கும். அப்படி உண்பவன் மாலைவரை தீட்டாயிருப்பான். மாலையில் அவன் தன் உடையைத் துவைத்து தண்ணீரால் உடல் முழுவதையும் கழுவ வேண்டும்.
Leviticus 17:15 in English
- King James Version (KJV)
- And every soul that eateth that which died [of itself], or that which was torn [with beasts, whether it be] one of your own country, or a stranger, he shall both wash his clothes, and bathe [himself] in water, and be unclean until the even: then shall he be clean.
- World English Bible (WEB)
- “‘Every person that eats what dies of itself, or that which is torn by animals, whether he is native-born or a foreigner, shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the evening. Then he shall be clean.
- American Standard Version (ASV)
- And every soul that eateth that which dieth of itself, or that which is torn of beasts, whether he be home-born or a sojourner, he shall wash his clothes, and bathe himself in water, and be unclean until the even: then shall he be clean.
- Bible in Basic English (BBE)
- And anyone who takes as food anything which has come to a natural end, or anything which has been put to death by beasts, if he is one of you by birth, or of another nation, will have to have his clothing washed and his body bathed in water and be unclean till evening, and then he will be clean.
- Darby Translation (DBY)
- And every soul that eateth of a dead carcase, or of that which was torn, be it one home-born, or a stranger, he shall wash his clothes, and bathe in water, and be unclean until the even: then he shall be clean.
- Webster's Bible (WBS)
- And every soul that eateth that which died [of itself] , or that which was torn [with beasts] , ([whether it is] one of your own country, or a stranger) he shall both wash his clothes, and bathe [himself] in water, and be unclean until the evening; then shall he be clean.
- Young's Literal Translation (YLT)
- 'And any person who eateth a carcase or torn thing, among natives or among sojourners — hath both washed his garments, and hath bathed with water, and hath been unclean until the evening — then he hath been clean;
Read in context
- 13இஸ்ரவேல் புத்திரரிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன்.
- 14சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம்; சகல மாம்சத்ததின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
- 15தானாய் இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது, புசித்தவன் எவனும், அவன் சுதேசியானாலும் பரதேசியானாலும், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாயிருப்பான்.
- 16அவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்காமலும், ஸ்நானம்பண்ணாமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார்.
Cross references
- Deuteronomy 14:21 உபாகமம் 14:21தானாய் இறந்துபோனதொன்றையும்புசிக்கவேண்டாம், உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக் கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.
- Leviticus 22:8 லேவியராகமம் 22:8தானாய்ச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் புசிக்கிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது; நான் கர்த்தர்.
- Exodus 22:31 யாத்திராகமம் 22:31நீங்கள் எனக்குப் பரிசுத்த மனுஷராயிருக்கக்கடவீர்கள்; வெளியிலே பீறுண்ட மாம்சத்தைப் புசியாமால், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள்.
- Leviticus 11:25 லேவியராகமம் 11:25அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
- Revelation 7:14 வெளிப்படுத்தின விசேஷம் 7:14அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.
- Ezekiel 4:14 எசேக்கியேல் 4:14அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, என் ஆத்துமா தீட்டுப்படவில்லை; தானாய்ச் செத்ததையாவது, பீறுண்டதையாவது நான் என் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை; அருவருப்பான இறைச்சி என் வாய்க்குட்பட்டதுமில்லை என்றேன்.
- Ezekiel 44:31 எசேக்கியேல் 44:31பறவைகளிலும் மிருகங்களிலும் தானாய்ச் செத்ததும் பீறுண்டதுமான ஒன்றையும் ஆசாரியர்கள் புசிக்கலாகாது.
- Leviticus 15:5 லேவியராகமம் 15:5அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலம்மட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
- Numbers 19:8 எண்ணாகமம் 19:8அதைச் சுட்டெரித்தவனும் தன் வஸ்திரங்களை ஜலத்தில் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
- Numbers 19:19 எண்ணாகமம் 19:19சுத்தமாயிருக்கிறவன் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிக்கவேண்டும்; ஏழாம் நாளில் இவன் தன்னைச் சுத்திகரித்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சாயங்காலத்திலே சுத்தமாயிருப்பான்.
- Numbers 19:21 எண்ணாகமம் 19:21தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தெளிக்கிறவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தொட்டவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
- Leviticus 15:10 லேவியராகமம் 15:10அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக.
Original words (Hebrew)
- soul · H5315נֶפֶשׁ nephesh
- eateth · H398אָכַל ʼâkal
- died · H5038נְבֵלָה nᵉbêlâh
- torn · H2966טְרֵפָה ṭᵉrêphâh
- country · H249אֶזְרָח ʼezrâch
- stranger · H1616גֵּר gêr
- wash · H3526כָּבַס kâbaç
- clothes · H899בֶּגֶד beged
- bathe · H7364רָחַץ râchats
- water · H4325מַיִם mayim
- unclean · H2930טָמֵא ṭâmêʼ
- even · H6153עֶרֶב ʻereb
- clean · H2891טָהֵר ṭâhêr
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.